உள்ளடக்கத்துக்குச் செல்

பெண் கவிஞர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிதையெழுதும் பெண்பாற் கவிஞர்கள் கவிதாயினிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள். ரிக் வேத காலத்திலேயே பெண் கவிஞர்கள் இருந்துள்ளமையை ஆர்ஷானுக்ரமணி, பிரகத்தேவதா போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பக்தி இலக்கிய காலத்தில் சைவ சமயத்தினை வளர்க்க காரைக்கால் அம்மையாரும், வைணவ சமயத்தினை வளர்க்க ஆண்டாளும் இயற்றிய பாடல்கள் பெரும்பங்கு வகித்தன.

நவீன இலக்கிய காலத்திலும் சமூகம், வாழ்வியல் நெறி, பெண்ணியம், இறை வழிபாடு என்று பல தளங்களிலும் பெண் கவிஞர்கள் கவிதையெழுதுகிறார்கள்.

வேதகாலப் பெண் கவிஞர்கள்

[தொகு]

ரிக் வேத காலத்தில் இருபது பெண்பாற் கவிஞர்கள் இருந்தனர் என்று ஆர்ஷானுக்ரமணி என்ற நூல் குறிப்பிடுகிறது. ”பிரகத்தேவதா” எனும் நூல் 27 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்கின்றது. இந்தப் பெண் கவிஞர்களில் 24 பெண் கவிஞர்கள் பாடல் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இவர்களில் மூன்று பெண் கவிஞர்களின் பாடல்கள் அதர்வ வேதத்திலும் இருக்கின்றன. எனவே வேதகாலத்தில் 24 பெண்பாற் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ரிக் வேத காலத்தில் 24 பெண் கவிஞர்களும், அதர்வன வேத காலத்தில் மூன்று பெண் கவிஞர்களுமாக மொத்தம் 27 கவிஞர்கள் இருந்துள்ளார்கள்.

சங்க காலப் பெண் கவிஞர்கள்

[தொகு]

ஆகியோர் சங்க கால பெண் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் காலத்தில் பக்தி இலக்கியங்கள் பெரும் வரவேற்பு பெற்றமையால், இவர்களும் பெரும் பக்தி இலக்கியப் பாடல்களைப் புனைந்துள்ளார்கள்.

தமிழ் கவிஞர்கள்

[தொகு]

ஔவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர் சங்க காலப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இறைக் கவிதைகள் பல புனையும் போதும் அதில் சமூகம் சார்ந்த கவிதைகளும், பெண்ணியம் சார்ந்த கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஔவையார்

[தொகு]

ஔவையார் முருகனைப் புகழ்ந்து கவிதை எழுதினாலும், ஆத்திச்சூடி என்ற நெறிகளுக்கான நூலை எழுதியுள்ளார்.

காரைக்கால் அம்மையார்

[தொகு]

காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்

என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கின்றார் காரைக்கால் அம்மையார்.

ஆண்டாள்

[தொகு]

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."

'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள். காமத்தினை தன்னுடைய கவிதையில் வடிக்கும் நவீன பெண் கவிஞர்களுக்கு முன்னோடியாக ஆண்டாள் போற்றப்படுகிறார்.

நவீன காலப் பெண் கவிஞர்கள்

[தொகு]

நவீன காலத்தின் பெண் கவிஞர்கள் அதிகம் உள்ளனர். லீனா மணிமேகலை, தாமரை, கனிமொழி, குட்டிரேவதி, சக்தி ஜோதி, திரிசடை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, தி. பரமேசுவரி ச.விசயலட்சுமி, சல்மா என எண்ணிக்கை அதிகம். இவர்களில் லீனா மணிமேகலை, கொற்றவை போன்றோர் பெண்களின் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு போன்றவற்றினை மையப்படுத்தி கவிதை எழுதுகின்றனர். பானுபாரதி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்.

தமிழக பெண் கவிஞர்கள் பற்றிய நூல்கள்

[தொகு]

பெண் : மொழி - வெளி

[தொகு]

இந்த நூலானது தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல்களை கொண்டதாகும். குமார், தீபா,மரிய ரீகன் ஆகியோர் தொகுத்துள்ளனர். இதில் கனிமொழி ,இரா.மீனாட்சி, சல்மா, ச.விசயலட்சுமி,கு.உமாதேவி, இளம்பிறை, கவிதா , குட்டி ரேவதி, சே.பிருந்தா ,லீனா மணிமேகலை,, மாலதி மைதிரி, தமிழச்சி தங்க பாண்டியன், எழிலரசி, ஏ.ராஜலட்சிமி, சுகிர்தராணி, அ.வெண்ணிலா , புதிய மாதவி , தேன்மொழிதாஸ் , எஸ்.தேன்மொழி , தாமரை ஆகியோரது கவிதைகள் குறித்த விவாத உரையாடல்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_கவிஞர்கள்&oldid=3371162" இலிருந்து மீள்விக்கப்பட்டது