கரும்பு வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமன் தனது கரும்பு வில் ஆயுதத்துடன்

இந்து மதத்தில் 'மன்மதன் (காமன்)' என்ற கடவுள், ஆண்- பெண் இடையே நடைபெறும் உடல்சார் உறவுகளின் இன்பத்தைத் தோற்றுவிப்பவனாகவும், வழங்குபவனாகவும், அவ்வின்பத்திற்கு உரியவனாகவும் கருதப்படுகிறான். இவனுடைய மனைவு 'இரதி தேவி' என்ற பேரழகி ஆவாள்.

இந்த மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பான்; அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியும்; அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) எய்துகொண்டிருப்பான்; அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவருக்கே 'காம இச்சை' மேலோங்கும் எனச் சித்தரிக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படப்பாடல் ஒன்றில் 'தாங்குமோ என் தேகமே.... மன்மதனின் மலர்க் கணைகள் தோள்களிலே....' என்ற பாடல் வரிகள் உள்ளதைக் காணலாம். இந்த மலர்க் கணைகளே மன்மதன் அம்பு எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பு_வில்&oldid=1411338" இலிருந்து மீள்விக்கப்பட்டது