லீலா கலீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீலா கலீத்
ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்களுக்கு இடையிலான ஒற்றுமை, மற்றும் மாற்று என்ற தலைப்பில் பெய்ரூட் சர்வதேச மன்றத்தில் நடந்த கருத்தரங்கில் கலீத், 2009
தாய்மொழியில் பெயர்ليلى خالد
பிறப்புஏப்ரல் 9, 1944 (1944-04-09) (அகவை 79)
கைஃபா, கட்டளைப் பலத்தீன்
தேசியம்பாலத்தீனியர்
அமைப்பு(கள்)பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி
அறியப்படுவதுபாலத்தீனியப் போராட்டம்
அரசியல் இயக்கம்அரபு தேசியவாத இயக்கம்

லீலா கலீத் (Leila Khaled) (பிறப்பு:1944 ஏப்ரல் 9) ஒரு பாலத்தீன ஏதிலியாவார். [1] மேலும், இவர் பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

1969 ஆம் ஆண்டில் திரான்ஸ் வேர்ல்ட் விமான நிறுவனத்தின் "விமானம் 840"ன் கடத்தலில் இவரது பங்கிற்காகவும், அடுத்த ஆண்டு ஜோர்தானில் நடந்த உள்நாட்டுப் போரான "கருப்பு செப்டம்பர்" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் [2] [3], நியூயார்க் நகரத்திற்கு சென்ற மூன்று விமானங்களையும் இலண்டனுக்குச் சென்ற ஒரு விமானத்தையும் கடத்தி ஜோர்தான் அருகிலுள்ள தொலைதூர பாலைவன வான்வழிப் பகுதியான டாசன் என்ற இடத்தில் தரையிறக்கிய ச்ம்பவத்திலும் http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/12/newsid_2514000/2514929.stm இவர் மக்கள் கவனத்திற்கு வந்தார். ஒரு விமானத்தை கடத்திச் சென்ற முதல் பெண்ணான, [4] இவர், பிற பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பி.எஃப்.எல்.பி) உறுப்பினர்களால் கடத்தப்பட்ட பணயக்கைதிகளுக்கான பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டார். [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கட்டளைப் பாலத்தீனின் கைஃபாவில் அரபு பெற்றோருக்கு கலீத் பிறந்தார். இவரது குடும்பம் 1948 ஏப்ரல் 13 அன்று லெபனானுக்கு தப்பி ஓடியது. 1948 பாலத்தீனிய வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக, தனது தந்தையை விட்டு வெளியேறினார். தனது 15 வயதில், தனது சகோதரரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பான்-அரபு இயக்கத்தில் சேர்ந்தார். [6] அரபு தேசியவாத இயக்கம் முதலில் 1940களின் பிற்பகுதியில் ஜோர்ஜ் ஹபாஷ் என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் இவர், அமெரிக்க பெய்ரூட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவரானார். [7] இந்த இயக்கத்தின் பாலத்தீன கிளை 1967 ஆறு நாள் போருக்குப் பின்னர் பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியாக மாறியது.

கலீத் குவைத்தில் கற்பிப்பதற்காக சிறிது காலம் தங்கியிருந்தார். மேலும் இவரது சுயசரிதையில், ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட நாளில் தான் அழுததை விவரித்தார். [8]

விமானக் கடத்தல்கள்[தொகு]

1970 இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் திமிஷ்குவில் கலீத்

1969 ஆகத்து 29 அன்று, உரோமிலிருந்து டெல் அவீவ் செல்லும் வழியில் திரான்ஸ் வேர்ல்ட் விமான நிறுவனத்தின் விமானம் 840 என்பதை கடத்திச் சென்ற அணியின் ஒரு பகுதியாக இவர் இருந்தார். போயிங் 707திமிஷ்குவிற்கு திருப்பினார். சில ஊடக ஆதாரங்களின்படி, [9] அமெரிக்காவின் இசுரேலிய தூதராக இருந்த இட்சாக் ராபின் விமானத்தில் இருப்பார் என்று பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமை நினைத்தது. ஆனால் அவர் அதில் பயணம் செய்யவில்லை. இசுரேலின் கைஃபா நகர் மீது பறக்க விமானிக்கு உத்தரவிட்டதாக கலீத் கூறுகிறார். இதன் மூலம் தான் பிறந்த இடத்தைப் பார்க்க முடிந்தது. [10] விமானப் பயணிகளில் யாரும் காயமடையவில்லை. ஆனால் பயணிகள் இறங்கிய பின்னர், கடத்தல்காரர்கள் விமானத்தின் மூக்கு பகுதியை வெடிக்க வைத்தனர். இந்த கடத்தலுக்குப் பிறகு, இவர் ஏகே-47 துப்பாக்கியை பிடித்துக் கொண்டு கெஃபியா என்ற அரேபியத் தலை ஆடையை அணிந்திருக்கும் ஒரு புகைப்படம் ( எடி ஆடம்ஸ் என்பவர் எடுத்தது) பல பத்திரிக்கைகளில் வெளிவந்தது. இவர் மூக்கு மற்றும் கன்னத்தில் ஆறு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் மேலும் கடத்தலில் பங்கேற்க இவ்வாறு செய்து கொண்டதாகக் கூறினார். ஏனெனில், தனது முகம் ஒரு குறியீடாக இருக்க இவர் விரும்பவில்லை. [11] [12]

எல் அல் விமானம் 219 (1970)[தொகு]

செப்டம்பர் 6, 1970 இல், நிக்கராகுவா-அமெரிக்கரான பேட்ரிக் ஆர்கெல்லோ என்பவரும் சேர்ந்து, டாசன் கடத்தல்களின் ஒரு பகுதியாக ஆம்ஸ்டர்டாமில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு சென்ற எல் அல் விமானம் 219 ஐ கடத்த முயன்றனர். இது தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் நடைபெற்ற கடத்தல்களின் தொடர்ச்சியாகும். இசுரேலிய வான்படை வீரர்கள் ஆர்கெல்லோவைக் கொன்று, இறுதியில் இவரை கைது செய்த போது போது இந்தத் தாக்குதல் தோல்வியடைந்தது. அந்த நேரத்தில் அவர் இரண்டு கைக்குண்டுகளை வைத்திருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய்யும் விமானத்தில் பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் என்று மிகவும் கடுமையான அறிவுறுத்தல்களைப் பெற்றதாக கலீத் கூறினார். [10] ஆனாலும் இவருடைய கூட்டாளியான ஆர்கெல்லோ விமானி ஒருவரை சுட்டுக் கொன்றார். [13]

விமானி விமானத்தை இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு திருப்பிவிட்டார். அங்கு கலீத் ஈலிங் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அக்டோபர் 1 ம் தேதி, கடத்தப்பட்ட பணயக்கைதிகளுக்கு ஈடாக பிரிட்டிசு அரசாங்கம் இவரை விடுவித்தது.

பிற்கால வாழ்வு[தொகு]

2011 இல் சுவீடனில் கலீத்

சிறைச்சாலையில் இவரது முதல் பார்வையாளரான, குடிவரவு அதிகாரி, இவர் ஏன் சரியான நுழைவு இசைவு இல்லாமல் நாட்டிற்கு வந்துள்ளார் என்பதை அறிய விரும்பியபோது, ஐக்கிய இராச்சியம் மீது தான் ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டதாக கலீத் ஒரு நேர்காணல்களில் கூறியுள்ளார். ஈலிங்கில் தன்னைக் காப்பாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு பெண் காவலர்களுடன் இவர் ஒரு உறவை வளர்த்துக் கொண்டார். பின்னர் அவர்களுடன் தொடர்பிலிருந்தார். 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை கலீத் தொடர்ந்து இங்கிலாந்துக்குச் சென்று வந்தார். பெல்பாஸ்ட்டில் உள்ள பைல் அன் போபைலில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்ற 2005 ஆம் ஆண்டில் பிரிட்டிசு தூதரகம் இவருக்கு நுழைவு இசைவு வழங்க மறுத்துவிட்டது. அங்கு இவர் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டார். இறுதியில் அவர் ஒரு காணொளி இணைப்பு மூலம் அங்குள்ளவர்களுடன் பேச முடிந்தது. [14]

மக்கள் ஜனநாயகக் கட்சியை (எச்.டி.பி) சுற்றியுள்ள குர்திஷ் அரசியல் இயக்கத்தையும் கலீத் ஆதரிக்கிறார். மேலும் பாலத்தீனிய மற்றும் குர்து மக்களின் இதேபோன்ற பிரச்சினையைக் கவனத்தில் கொண்டார் [15] [16] இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். பாலத்தீனிய தேசிய அமைப்பில் இடம்பெற்ற இவர், உலக சமூக மன்றத்தில் தவறாமல் தோன்றினார். [17] [18] [19] [20]

திருமணம்[தொகு]

இவர் மருத்துவர் பயாஸ் ரஷீத் ஹிலால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, தங்களது இரு மகன்களான பாதர் மற்றும் பஷாருடன் ஜோர்தானின் அம்மானில் வசித்து வருகிறார். இவர் மதமற்றவர். [21]

ஆவணப்படம்[தொகு]

பலத்தீனிய திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மக்போல் இயக்கி லீலா கலீத், ஹைஜாக்கர் [22] என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. இத் திரைப்படம் நவம்பர் 2005 இல் ஆம்ஸ்டர்டமில் நடந்த சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்டது . [23]

சுற்றுப்பயணம்[தொகு]

2011 ஆம் ஆண்டில், கலீத் சுவீடனில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதில் சுவீடனின் பொதுவுடைமைக் கட்சி மற்றும் சுவீடனின் தொழிலாளர்களின் மத்திய அமைப்பு ஆகியவற்றின் பொது தின ஆர்ப்பாட்டங்கள், ஒரு பொது கலைக்கூடம், சோடெர்டோர்ன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் இடதுசாரிக் கட்சி ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கு ஆகியவை அடங்கும். [5]

இத்தாலிய அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஒரு குழுவில் உறுப்பினராக இருப்பதால் நவம்பர் 2017 இல், லியோனார்டோ டா வின்சி-பியமிசினோ விமான நிலையத்தில் இத்தாலியின் உரோம் நகருக்கு செல்ல இவர் அனுமதி மறுக்கப்பட்டார். இதனால் அம்மானுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [24]

செப்டம்பர் 2020 நடுப்பகுதியில், பேராசிரியர் ரபாப் அப்துல்லாடி மற்றும் டாக்டர் டோமோமி கினுகாவா ஆகியோர் நடத்திய சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் மெய்நிகர் ஜூம் மாநாட்டில் "யூத வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவருங்கள்" என்ற தலைப்பில் இவர் பேச திட்டமிடப்பட்டது. முகநூல் நிறுவனம், ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸுடன் சேர்ந்து, அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடு, பொருளாதாரத் தடைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மேற்கோள் காட்டி காணொளி மாநாட்டில் தங்களது மென்பொருள் மற்றும் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தது. [25] [26] [27]

மேற்கோள்கள்[தொகு]

 1. "'I Had to Be the Voice of Women': The First Female Hijacker Shares Her Story". August 29, 1969. https://www.vice.com/en_us/article/9k99k7/leila-khaled-first-female-hijacker-profile. 
 2. "Jordanian Civil War (1970–1971) | Encyclopedia.com". https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/jordanian-civil-war-1970-1971. 
 3. "The PFLP Hijacking of TWA Flight 840" (in en-US). https://adst.org/2015/08/the-pflp-hijacking-of-twa-840/. 
 4. http://www.haaretz.com/jewish/news/1.635856 பரணிடப்பட்டது 2016-02-17 at the வந்தவழி இயந்திரம் "Notorious Palestinian Plane Hijacker to Promote BDS in South Africa"
 5. 5.0 5.1 "Something rotten in Sweden - Israel Opinion, Ynetnews". Ynetnews.com. 2011-03-11. http://www.ynetnews.com/articles/0,7340,L-4078246,00.html. 
 6. "Jordan Times". Jordan Times. http://www.jordantimes.com/index.php?news=5412&searchFor=Jansen. 
 7. [1] பரணிடப்பட்டது ஆகத்து 27, 2008 at the வந்தவழி இயந்திரம்
 8. My People Shall Live. Hodder & Stoughton. http://www.onepalestine.org/resources/articles/My_People_Shall_Live.html. பார்த்த நாள்: 2006-07-13. 
 9. . 
 10. 10.0 10.1 "I made the ring from a bullet and the pin of a hand grenade". http://www.mqm.com/English-News/Jan-2001/leilakhalid.htm. , The Guardian, January 26, 2001
 11. [2] பரணிடப்பட்டது ஆகத்து 20, 2004 at the வந்தவழி இயந்திரம்
 12. "I made the ring from a bullet and the pin of a hand grenade". https://www.theguardian.com/world/2001/jan/26/israel. 
 13. Public Broadcasting Service, Hijacked website, "Flight crews and security". https://www.pbs.org/wgbh/amex/hijacked/peopleevents/p_crews.html. 
 14. "News". An Phoblacht. 2015-10-01. http://www.anphoblacht.com/news/detail/10705. 
 15. "Iconic liberation activist at HDP congress: Long live Palestine, long live Kurdistan!" (in en-GB). https://www.duvarenglish.com/politics/2020/02/24/iconic-liberation-activist-at-hdp-congress-long-live-palestine-long-live-kurdistan/. 
 16. "Leila Khaled visited HDP MPs on hunger strike in Amed" (in en). https://anfenglishmobile.com/news/khaled-visits-mps-on-hunger-strike-34323. 
 17. [3]
 18. "The activistocracy | Features | Governance". Infochangeindia.org. http://infochangeindia.org/200906257801/Governance/Features/The-activistocracy.html. 
 19. "Página inicial" (in pt). Forumsocialmundial.org.br. http://www.forumsocialmundial.org.br/dinamic.php?pagina=coletivas_280105_ing. 
 20. "PNN | Palestine News Network". 2015-10-24. http://english.pnn.ps/index.php?option=com_content&task=view&id=1521. 
 21. "Interview with Leila Khaled: 'BDS is effective, but it doesn't liberate land' | +972 Magazine". http://972mag.com/interview-with-leila-khaled-bds-is-effective-but-it-doesnt-liberate-land/91000/. 
 22. Murphy, Maureen Clare (2007-04-09). "Violence or nonviolence? Two documentaries reviewed". Electronic Intifada. http://electronicintifada.net/v2/article6781.shtml. 
 23. "Hijacker". Leila Khaled. http://www.leilakhaled.com/leila_frames.html. 
 24. "Leila Khaled respinta a Fiumicino". Il Giornarle D'Italia. 29 November 2017. Archived from the original on 3 ஜனவரி 2018. https://web.archive.org/web/20180103120728/http://www.ilgiornaleditalia.org/news/cronaca/892943/Leila-Khaled-respinta-a-Fiumicino.html. 
 25. Flaherty, Colleen (27 September 2020). "Zoom Draws a Line". Inside Higher Ed. https://www.insidehighered.com/news/2020/09/25/zoom-refuses-stream-university-event-featuring-member-terrorist-organization. 
 26. Greschler, Gabriel (22 September 2020). "Zoom will not host S.F. State event featuring Leila Khaled". J. The Jewish News of Northern California. https://www.jweekly.com/2020/09/22/after-protest-zoom-will-not-host-s-f-state-event-featuring-leila-khaled/. 
 27. Osman, Nadda (24 September 2020). "Zoom criticised for cancelling webinar with Palestinian activist Leila Khaled". Middle East Eye. https://www.middleeasteye.net/news/zoom-criticised-cancelling-leila-khaled-webinar. 

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leila Khaled
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_கலீத்&oldid=3537973" இருந்து மீள்விக்கப்பட்டது