சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள் | சான் பிரான்சிசுக்கோ அரசுப் பொதுப் பள்ளி (1899–1921) சான் பிரான்சிசுக்கோ அரசு ஆசிரியர் கல்லூரி (1921–35) சான் பிரான்சிசுக்கோ அரசு கல்லூரி (1935–72) கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகம், சான் பிரான்சிசுக்கோ (1972-74) |
---|---|
குறிக்கோளுரை | Experientia Docet (இலத்தீன்) |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | பட்டறிவே கற்றுத் தரும் |
வகை | பொது |
உருவாக்கம் | 1899 |
நிதிக் கொடை | $55.2 மில்லியன் (2012)[1] |
கல்வி பணியாளர் | 1,506[2] |
நிருவாகப் பணியாளர் | 2,010[2] |
மாணவர்கள் | 29,905 [3] |
பட்ட மாணவர்கள் | 26,156 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,749 |
193 (Fall 2013)[4] | |
அமைவிடம் | சான் பிரான்சிசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம் , , , 1600 ஹாலோவே அவென்யூ சான் பிரான்சிசுக்கோ, CA 94132 ஐக்கிய அமெரிக்கா |
வளாகம் | நகர்ப்புற வளாகம், 141.61 ஏக்கர்கள் (57.31 ha)[5] |
நிறங்கள் | கத்தரி நீலம், தங்க நிறம் |
தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. II 11 வார்சிட்டி ஸ்போர்ட்ஸ் |
நற்பேறு சின்னம் | அல்லிகேட்டர் |
சேர்ப்பு | கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.sfsu.edu |
சான் பிரான்சிசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிசுக்கோவில் உள்ளது. இது கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இங்கு 118 இள நிலைப் பாடப்பிரிவுகளும், 94 முது நிலைப் பாடப் பிரிவுகளும், 5 முனைவர் பாடங்களும் கற்பிக்கின்றனர்.[5][6][7]
கல்வி
[தொகு]இங்கு உருவாக்கக் கலை, வணிகம், கல்வி, இனங்கள், நலவாழ்வு, அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு பாடப்பிரிவுகளைப் படிக்கின்றனர்.
அங்கீகாரம்
[தொகு]இதை பல்கலைக்கழகத்திற்கான அங்கீகார ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த ஆணையம் மேற்கத்திய பள்ளி மற்றும் கல்லூரிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தது.[8]
வளாகம்
[தொகு]மாணவர்களுக்கான உணவு விடுதியும், கருத்தரங்கக் கூடங்களும் உள்ளன.
விளையாட்டு
[தொகு]இங்கு பேஸ்பால், கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட 11 விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இங்குள்ள குழுக்கள் கலிபோர்னியா மாகாண அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இங்கு படித்த 3 மாணவர்கள் பெரிய அளவிலான பேஸ்பால் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இங்கு படித்த 13 மாணவர்கள் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
குத்துச்சண்டைப் பிரிவிலும் மாணவர் குழுக்கள் உண்டு. நாற்பது ஆண்டுகளாக, குத்துச்சண்டை விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிக் கோப்பையைப் பெற்றுள்ளனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "US and Canadian Institutions Listed By Fiscal Year 2013" (PDF). Nacubo.org. Archived from the original (PDF) on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.
- ↑ 2.0 2.1 SF State Facts 2006-2007: Faculty & Staffs பரணிடப்பட்டது 2013-01-01 at WebCite, San Francisco State University
- ↑ "Common Data Set 2013-2014" (PDF). Wcmdemo7.sfsu.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.
- ↑ 5.0 5.1 SF State Facts 2009–2010, San Francisco State University
- ↑ "Search CSU Degrees". Degrees.calstate.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.
- ↑ "California State University Credential Programs : 2013-2014" (PDF). Degrees.calstate.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.
- ↑ "SF State WASC Accreditation". Archived from the original on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.
இணைப்புகள்
[தொகு]