உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டளைப் பலத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டளைப் பாலத்தீனம்
1920–1948
கொடி of பாலத்தீனம்
கொடி
பொதுச் சின்னம் of பாலத்தீனம்
பொதுச் சின்னம்
1946 இல் கட்டளைப் பாலத்தீனம்
1946 இல் கட்டளைப் பாலத்தீனம்
நிலைஐக்கிய இராச்சியத்தின் ஆணை
தலைநகரம்எருசலேம்
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், அரபு, எபிரேயம்
சமயம்
இசுலாம், கிறித்தவம், ரூஸ், யூதம், பகாய் சமயம்
உயர் ஆணையர் 
• 1920–1925 (முதல்)
சேர் கேபட் எல். சாமுவேல்
• 1945–1948 (இறுதி)
சேர் அலன் யி. குமிங்கம்
வரலாற்று சகாப்தம்உள்ளகப் போர், உலகப் போர் II
• ஆணை ஒதுக்கீடு
25 ஏப்ரல் 1920
• பிரித்தானிய கட்டுப்பாடு
29 செப்டம்பர் 1923
14 மே 1948
நாணயம்எகிப்திய பவுண்ட் (1927 வரை)
பாலத்தீன பவுண்ட்(1927 முதல்)
முந்தையது
பின்னையது
கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வாகம்
இசுரேல்
மேற்குக் கரையின் யோர்தானிய கைப்பற்றல்
அனைத்து-பலத்தீன அரசு
தற்போதைய பகுதிகள் இசுரேல்
 பலத்தீன்

கட்டளைப் பாலத்தீனம் (Mandatory Palestine[1] (அரபு மொழி: فلسطينFilasṭīn; எபிரேயம்: פָּלֶשְׂתִּינָה (א"י) Pālēśtīnā (EY), "EY" என்பது "Eretz Yisrael" (இசுரேல் தேசம்)) என்பது முதல் உலகப் போரின் பின் உதுமானிய தென் சீரியாவிலிருந்து உருவாக்கி, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் இருந்த புவி அரசியல் சார் உருவாக்கமாகும். பிரித்தானிய குடிசார் நிருவாகம் பாலத்தீனத்தில் 1920 முதல் 1948 வரை இயங்கியது. இக்காலத்தின்போது அது எளிமையாக, பாலத்தீனம் என அழைக்கப்பட்டது. ஆனால், வேறுபடுத்தலுக்கான பல்வேறு பெயர்களால், ஆணை அல்லது பாலத்தீன ஆணை, பிரித்தானிய பாலத்தீனம், பாலத்தீனத்தின் பிரித்தானிய கட்டளை உட்பட பெயர்கள் அழைக்கப்படது.

முதலாம் உலகப் போர் மற்றும் அராபிய எழுச்சியின்போது, எகிப்திய வெளிப்போர்ப் படையின் பிரித்தானியப் பேரரசின் கட்டளை அதிகாரியாகிய, பிரித்தானிய போர்த்தொடர்களை நடத்திய தளபதி எட்மண்ட் அலன்பே, சீனாய், பாலத்தீன போர்த்தொடரின் பகுதியாக துருக்கியர்களை மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றினார்.[2] ஐக்கிய இராச்சியம் உதுமானியர்களுக்கு எதிராக புரட்சி செய்தால் அராபியர்களின் சுதந்திரத்தை மதிக்கும் என ஒப்பந்தம் செய்திருந்தது. இவ் உடன்படிக்கை தொடர்பில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செய்த உடன்படிக்கையால் பகுதிகள் பிரிக்கப்பட்டு, அரேபியர்களின் கருத்தினை காட்டிக்கொடுப்பதாய் அமைந்தது. பால்போர் பிரகடனம் பாலத்தீனத்தில் யூதர்களுக்கான "தேசிய வீடு"க்கான ஆதரவிற்கு உறுதியளித்தமை, பிரச்சனையை மேலும் குழப்பமாக்கியது. போர் முடிவடைந்த பிறகு, "கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வாகம்" எனப் பெயரிடப்பட்ட இராணுவ நிர்வாகம், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் முன்னாள் உதுமானிய சிரியாவில் நிறுவப்பட்டது. பிரித்தானிய தொடர்ந்து அப்பகுதியில் தன் கட்டுப்பாட்டை சட்டநெறிக்கட்டுத்த முயன்றது. பின் சூன் 1922 இல் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து ஆணை பெற்றதன் மூலம் சாத்தியமானது. கூட்டமைப்பு நாடுகளின் ஆணையின் முறையான நோக்கம் செயலிழந்த உதுமானியப் பேரரசின் நிருவாகப் பகுதிகள் மீதாகவிருந்தது.[3] குடியியல் ஆணை நிருவாகம் இரண்டு நிருவாகப் பகுதிகளுடன் பாலத்தீனினுக்கான பிரித்தானிய ஆணையின் கீழ் 1923 இல் கூட்டமைப்பு நாடுகளின் ஒப்புதலுடன் முறைப்படுத்தப்பட்டது. யோர்தான் நதிக்கு மேற்கேயான பகுதி பாலத்தீனம் என, 1948 வரை பிரித்தானியாவின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கையில் யோர்தானுக்கு கிழக்கிலிருந்த பகுதி ஒர் அரை-தன்னாட்சி பிரதேசமான திரான்ஸ்யோர்தான் கியாஸ் குடும்ப கசேமிட்டின் கீழ் ஆளப்பட்டது. பின்னர் 1946 இல் திரான்ஸ்யோர்தான் சுதந்திரம் பெற்றது.[4]

பிரித்தானிய ஆணைக் காலத்தில், யூதர் மத்தியில் ஒன்றும் அரேபியர் மத்தியில் ஒன்றும் எனக் காணப்பட்ட இரு முக்கிய தேசிய இயக்கங்களின் வளர்ச்சி அப்பகுதியில் காணப்பட்டது. பாலத்தீனத்தில் அராபியஈ யூத மக்களிடத்தில் காணப்பட்ட தேசிய நலன் போட்டித்தன்மையானது ஒருவருக்கொருவர் எதிராகவும் ஆளும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிராகவும் 1936–1939 அராபியப் புரட்சியாகவும், யூத எழுச்சியாகவும் 1947–1948 சிவில் யுத்தம் உச்சக்கட்டத்திற்கு முன் முதிர்ச்சியடைந்து.

உள்நாட்டுப் போர், 1948 அரபு - இசுரேல் போர் ஆகியவற்றின் பின்விளைவாக 1949 போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வழியேற்படுத்தியது. இதன் மூலம் யூத பெரும்பான்மையுடனான புதிய இசுரேல் அரசுக்கும் முன்னாள் கட்டளைப் பாலத்தீனத்திற்குமிடையில் பகுதி பிரிப்பு ஏற்பட்டு, மேற்குக் கரை யோர்தான் இராச்சியத்தின் கீழும் எகிப்தின் இராணுவ கைப்பற்றலின் கீழ் இருந்த காசாக்கரை அரபு அனைத்து-பலத்தீன அரசுடனும் இணைக்கப்பட்டன.

ஆட்சிமுறை

[தொகு]

பெயர்

[தொகு]

1926 இல், பிரித்தானிய அதிகாரிகள் ஆங்கிலத்துக்கு இணையான பாரம்பரிய அரபு, எபிரேய பெயர்களை (எ.கா: :பிலாஸ்டின்", filasţīn (فلسطين); "பலஸ்டினா", pālēśtīnā (פּלשׂתינה)) பயன்படுத்த முடிவு செய்தனர். யூதத் தலைவர்கள் எபிரேயப் பெயர் "எரெட்ஸ் யிஸ்ராய யெல்" ('ʾĒrēts Yiśrāʾel; ארץ ישׂראל=இசுரேல் தேசம்) என்றிருக்க வேண்டுமென பரிந்துரைத்தார்கள். இறுதியில் பரிந்துரைக்கப்பட்ட எபிரேயப் பெயரின் முன் எழுத்தை இணைப்பது என்ற உடன்பாட்டிற்கு வந்தனர். அலுவல ரீதியான ஆவணங்களில் எபிரேயப் பெயர் குறிப்பிடப்பட்டது. அரபுத் தலைவர்கள் இதனை சட்டத்திற்கு மாறாகக் கண்டனர். சில அரபு அரசியல்வாதிகள் "தென் சிரியா" (سوريا الجنوبية) போன்ற சிறிய அரபியத் தொடர்பு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை பிரித்தானிய அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.[5]


இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
British Mandate of Palestine
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "League of Nations decision confirming the Principal Allied Powers' agreement on the territory of Palestine". Archived from the original on 2013-11-25.
  2. Hughes, Matthew, ed. (2004). Allenby in Palestine: The Middle East Correspondence of Field Marshal Viscount Allenby June 1917 – October 1919. Army Records Society. Vol. 22. Phoenix Mill, Thrupp, Stroud, Gloucestershire: Sutton Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7509-3841-9. Allenby to Robertson 25 January 1918 in Hughes 2004, p. 128
  3. Article 22, The Covenant of the League of Nations and "Mandate for Palestine," Encyclopedia Judaica, Vol. 11, p. 862, Keter Publishing House, Jerusalem, 1972
  4. Marjorie M. Whiteman, Digest of International Law, vol. 1, US State Department (Washington, DC: U.S. Government Printing Office, 1963) pp 650–652
  5. League of Nations, Permanent Mandate Commission, Minutes of the Ninth Session பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம் (Arab Grievances), Held at Geneva from 8 to 25 June 1926
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டளைப்_பலத்தீன்&oldid=3369409" இலிருந்து மீள்விக்கப்பட்டது