மேலகிரி

ஆள்கூறுகள்: 12°12′33″N 77°49′25″E / 12.20917°N 77.82361°E / 12.20917; 77.82361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலகிரி
Melagiri
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
மேலகிரியின் சிலந்திப் பள்ளத்தாக்கு
மேலகிரியின் சிலந்திப் பள்ளத்தாக்கு
மேலகிரி Melagiri is located in தமிழ் நாடு
மேலகிரி Melagiri
மேலகிரி
Melagiri
தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள்: 12°12′33″N 77°49′25″E / 12.20917°N 77.82361°E / 12.20917; 77.82361
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி
பரப்பளவு
 • மொத்தம்1,295 km2 (500 sq mi)
ஏற்றம்1,395 m (4,577 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநேஒ.ச.நே + 05:30)
அருகில் உள்ள நகரங்கள்ஒசூர் 30 கிலோமீட்டர்கள் (19 mi), தர்ம்புரி,(பாலக்கோடு)

மேலகிரி (Melagiri) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலைத் தொடராகும். இதன் மேற்கு எல்லையாக காவிரி ஆற்றைக் கொண்டுள்ளது. மேலகிரி மலைப் பகுதியானது 1295 கி. மீ2 பரப்பளவில் இலையுதிர் காடுகள் மற்றும் அரை பசுமைமாறாக் காடுகளைக் கொண்டுள்ளது. இது யானைகளின் வாழிடமாக உள்ளது அல்லாமல், இரண்டு பாரம்பரிய யானை வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இதன் வடகிழக்கில் பன்னேருகட்டா தேசியப் பூங்காவும், தெற்கில் காவிரி வனவிலங்கு சரணாலயமும் உள்ளன. இந்த வனப்பகுதியானது பிலிகிரி ரங்கண்ணா மலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தை இணைக்கிறது. மேலும் இந்த வனப்பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றின் சந்திப்புப் பகுதியாக, தென்னிந்தியாவின் முதன்மை யானை வழித்தடமாக, பன்னேருகட்டா தேசியப் பூங்கா மற்றும் காவிரி ஆறு ஆகியவற்றை இணைக்கும் சந்திப்பாக உள்ளது. இதன் தெற்கில் சில முக்கிய புலி சரணாலயங்கள் உள்ளன.

நிலவியல்[தொகு]

மேலகிரி மலைகள் தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடையில், ஒரு பக்கம் கர்நாடக மாநிலத்தையும் மறுபக்கம் காவிரி ஆற்றையும் கொண்டுள்ளது. இந்த காட்டுப் பகுதியானது மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளைக் கொண்டு உள்ளது. இந்த மலைகளின் உயர்ந்த பகுதி குட்டிராயன் மலையாகும் இதன் உயரமான பகுதி 1,390 மீட்டர்கள் (4,560 அடி) மற்றும் உயரம் குறைந்த பகுதி 635 மீட்டர்கள் (2,083 அடி) ஆகவும் உள்ளது. இந்த காடானது பெரும்பாலும் இலையுதிர் காடுகளாகவும் குட்டிராயன் மலைச் சரிவுகளின் சில பகுதிகள் சோலைக்காடுகளையும் கொண்டுள்ளது. இந்த மேலகிரி மலைகளில் ஆண்டு மழையளவு குறைந்தபட்சமாக 700மிமீ மற்றும் அதிகபட்சமாக 900மிமீ ஆக உள்ளது.

தாவரங்கள்[தொகு]

மேலகிரி மலைப்பகுதியில் முட்புதர் தாவரங்கள், உலர் வெப்பமண்டல தாவரங்கள், இலையுதிர் தாவரங்கள், கலப்பு இலையுதிர்காட்டுத் தாவரங்கள், உலர் பசுமைமாறா தாவரங்கள், அரை பசுமைமாறா தாவரவகைகள் ஆகியவை அந்தந்த நில அமைப்புக்கு ஏற்ப காணப்படுகின்றன. இந்த மலைக் காடுகளில் பெரு மாமரம் (giant Mangifera indica), பன்னம்புளி, காட்டு பால்கேம், காட்டுப் பலா போன்ற அரியவகை மரங்களும், குங்கிட்டி (Shorea roxburghii) போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளான தாவர வகைகளும் உள்ளன. மேலும் இங்கு மருத மரம், ஆச்சா, இலுப்பை, தும்பிலி மரம் போன்றவை கணிசமாக உள்ளன.

உயிரினங்கள்[தொகு]

மேலகிரியின், ராசிமலைப் பகுதியில் ஒரு நாற்கொம்பு மான்

இப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் சிறுத்தை, செந்நாய், தேன் கரடி, முக்கர் முதலை, குள்ள நரி போன்றவையும், புள்ளிமான், கடமா, கடமான், பழுப்பு மலை அணில், நாற்கொம்பு மான், ஆற்று நீர்நாய்,[1] யானை போன்றவையும், etc. Other species such as புலி, தேன்வளைக்கரடி போன்ற பிறவகை விலங்குகள் உள்ளது குறித்து ஐயப்பாடுகள் உள்ளன. ஓசூர் வனப்பகுதியில் மீதமுள்ள லாங்கர் குரங்குகள் பகுதியில் இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

அச்சுறுத்தநிலையில் உள்ள சிறப்பினங்கள்
மேலகிரியில் உள்ள பழுப்பு மலை அணில்

பழுப்பு மலை அணில், நாற்கொம்பு மான், கடமா, யானை, சிறுத்தை, தேன் கரடி, முதலை, சருகுமான், மலைப்பாம்பு.

பறவைகள்

வெள்ளைக் கானாங்கோழி, சாம்பல்தலைப் பச்சைப்புறா, தேன் பருந்து, எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, சிறிய மீன் கழுகு, பூமன் ஆந்தை, குடுமிப் பருந்து, மயில், வராலடிப்பான், பூங்கொத்தி ஆகிய பறவைகள் இந்த மலைகளில் காணப்படுகின்றன.

ஊர்வன மற்றும் நிலநீர் வாழ்வன

இந்திய நாகம், இந்திய மலைப் பாம்பு, கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவையும் மேலும் அரிய பாம்புகளான போன்ற ரேசர் Coluber bholanathi போன்றவையும், ஆபத்துக்கு உள்ளாகியுள்ள அரிய பல்லி இனங்களும், இந்திய பச்சோந்தி, இந்திய உடும்பு, முக்கர் முதலை, இந்திய நட்சத்திர ஆமை போன்றவையும், அரிய நஞ்சுத் தவளை உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 வகையான தவளைகள் உள்ளிட்ட அரிய பாறைத் தேரை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

மோதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்[தொகு]

  • யானைகள் வாழும் பகுதிகள் உள்ள மூங்கில்களை சுரண்டும்விதமாக அவற்றை சேகரித்துக்கொள்ள குத்தகைக்கு விடப்படுகின்றன. இதனால், யானைகளின் இடம்பெயர்வின்போது, மனித வாழ்விடங்கள் மற்றும் பண்ணைகள் அடிக்கடி சேதமடைகின்றன. பயிர் சேதத்தில் காட்டுப்பன்றிகள் பெரிய கவலைதரும் விசயமாக இருக்கிறது.
  • வேட்டை
  • காடுகளை ஒட்டி மக்கள் குடியேற்றங்களின் காரணமாக வன விலங்குகளின் வாழ்வாதாரம் துண்டாக்கப்படுதல்
  • விரகு சேகரிப்பு, கால்நடை மேய்ச்சல், கால்நடை வளர்ப்பு மற்றும் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல்.
  • காட்டுத்தீ
  • சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்துறை விரிவாக்கத்தின் காரணமாக உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுதல்
  • யானைகளுக்கு உபயோகப்படும் தண்ணீரானது, உள்ளூர் கால்நடை வளர்ப்புக்கு மிகுதியாக பயன்படுத்தப்படுவதால் காட்டு விலங்குகளுக்கான நீர்வழிகளை வறண்டுபோய் காய்ந்து விடுகின்றன.
  • உன்னி முள் (Lantana) எனப்படும் அயல் முட்புதர் செடிகள், பெரும்பாலும் எந்த விலங்குகளுக்கும் சாப்பிட்டப்பயன்படுவதில்லை, அதன் வேகமான பரவலால் மற்ற தாவர இனங்களின் இடத்தைக் கைப்பற்றிக்கொள்கின்றன . குரோமொலெனா ஓட்ரோட்டாவின் ( Chromolaena odorata) விரைவான பரவலானது உயிர்-பன்முகத்தன்மையை மிகக் கடுமையாக பாதிக்கிறது, இந்த அழகான காடுகளின் நிலப்பகுதிகள் இந்தவகை ஆக்கிரமிப்புக் களைகளால் தன் தனித்தன்மையை இழக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IPS news on otters in Krishnagiri". Archived from the original on 2010-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலகிரி&oldid=3630555" இலிருந்து மீள்விக்கப்பட்டது