மஞ்சள் பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எகிப்திய பிணந்தின்னிக் கழுகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எகிப்திய பிணந்தின்னிக் கழுகு
Egyptian vulture.jpg
Adult N. p. ginginianus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: Neophron
Savigny, 1809
இனம்: N. percnopterus
இருசொற் பெயரீடு
Neophron percnopterus
(L., 1758)
NeophronMap.svg
Distribution of the three subspecies
1906இல் திருக்கழுகுன்றத்தில் பிரசாதம் பெறும் படம்

மஞ்சள் பாறு (Egyptian vulture (Neophron percnopterus) கிராமப்புற மக்களால் பாப்பாத்திக் கழுகு[2] என்று அழைக்கப்படுவதும், எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, திருக்கழுக்குன்றக் கழுகு, வெள்ளைக்கழுகு, மஞ்சள் திருடிப் பாறு[3] என அழைக்கப்படுவது, ஒரு பிணந்தின்னிக் கழுகாகும். திருக்கழுக்குன்றத்தில் தினமும் கோயில் குருக்கள் தரும் பிரசாதத்தை குறிப்பிட்ட நேரத்தில் வந்து உண்பதால் திருக்கழுகுன்றக் கழுகு என பெயர் பெற்றது.[4]

இப்பறவை மங்கலான வெள்ளை நிறக் கழுகு தோற்றத்தில் பெரிய பருந்து போல தோன்றும். இறக்கையின் பெரிய இறகுகள் கறுப்பாகவும், தலையும், மூக்கும் முடியின்றி மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதன் குஞ்சுகள் கள்ளப் பருந்து போல் தோன்றும் ஆனால் பறக்கும்போது இதன் வால் கள்ளப்பருந்துபோல் பிளவுபட்டு தோன்றாது ஆப்புபோல் தோன்றும். மாடு, நாய், எலி உள்ளிட்ட உயிர்களின் சடலங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு. இது ஒரு தோட்டிப்பறவை ஊர்புறங்களில் குப்பைகளில் உள்ள கழிவுகள் உள்ள பகுதிகளில் இவற்றைக் காண இயலும். இதர கழுகு இனங்கள் அனைத்தும் தங்களது இரையை உண்பதற்கு, அவற்றினுடைய அலகு, கால்களைப் பயன்படுத்தும். ஆனால், இந்தக் கழுகு மட்டும், கல், குச்சி போன்ற சிறுசிறு கருவிகளைப் பயன்படுத்துகிறது. இப்பறவைகள் தென் மேற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவரை காணப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. IUCN Red List 2012.
  2. ராதிகா ராமசாமி (2018 சூலை 21). "ஆன்மாவை விடுவிக்கும் கழுகு". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 சூலை 2018.
  3. https://www.vikatan.com/news/miscellaneous/120170-is-really-sparrow-birds-are-in-endangered-list-of-birds.html?artfrm=related_article
  4. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பாறு&oldid=2677198" இருந்து மீள்விக்கப்பட்டது