மஞ்சள் பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள்முகப் பாறு
Adult N. p. ginginianus
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நியோபோரன்

சாவிங்னி, 1809
இனம்:
நி. பெர்க்னாப்பிடிரசு
இருசொற் பெயரீடு
நியோபோரன் பெர்க்னாப்பிடிரசு
(லின்னேயஸ், 1758)
மூன்று துணையினங்களின் பரம்பல்
1906இல் திருக்கழுகுன்றத்தில் படையலை உண்ணும் மஞ்சள்முகப் பாறுகள்

மஞ்சள் பாறு (Egyptian vulture (Neophron percnopterus) அல்லது மஞ்சள்முகப் பாறு கிராமப்புற மக்களால் பாப்பாத்திக் கழுகு[2] என்று அழைக்கப்படுகிறது. எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, திருக்கழுக்குன்றக் கழுகு, வெள்ளைக்கழுகு, மஞ்சள் திருடிப் பாறு[3] எனப் பலவாறு அழைக்கப்படும் இப்பறவை ஒரு பிணந்தின்னிக் கழுகாகும்.

பரவல்[தொகு]

மஞ்சள்முகப் பாறுகளின் வாழிடம் ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகள், தெற்கு ஐரோப்பியப் பகுதிகள் ஆகும். இவை வலசை போகும் பறவைகள் அல்ல; இருப்பினும், மற்ற பாறுகளை விடவும் இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து பிற வாழ்விடங்களுக்கு இவை செல்லும் இயல்புடையவை. இனப்பெருக்க சோடிகள் மீண்டும் மீண்டும் ஒரே மரத்தைத் தெரிவு செய்யும் பழக்கமும் இவற்றுக்கு உண்டு. [4]

வாழ்விடம்[தொகு]

பொதுவில் இவை பாறை விளிம்புகளில் கூடமைக்கின்றன; சரியான இடம் கிடைக்கவில்லையெனில் மரங்களிலும் இவை கூடமைக்கின்றன. பறக்கத் துவங்கும்போது இறக்கைகளை அடிப்பதில் சிரமம் ஏற்படுவதால் இவை உயரமான இடங்களையே கூடமைக்கத் தெரிவு செய்கின்றன; இதன் மூலம் வெப்பக்காற்று ஓட்டதையும் இவற்றால் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. மனித வாழ்விடங்களுக்கு அருகிலும் இவை தென்படுகின்றன. [4]

திருக்கழுக்குன்றில் மஞ்சள்முகப் பாறுகள்[தொகு]

முன்காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் தினமும் கோயில் படையலை குறிப்பிட்ட நேரத்தில் இரு மஞ்சள்முகப் பாறுகள் வந்து உண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதன் காரணமாகவே இவை திருக்கழுகுன்றக் கழுகு என பெயர் பெற்றன.[5] ஆனால் 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு இவை படையலை உண்பதற்கு வருவதில்லை.[6]

உருவமைப்பு[தொகு]

இப்பறவை மங்கலான வெள்ளை நிறக் கழுகு தோற்றத்தில் பெரிய பருந்து போல தோன்றும். இறக்கையின் பெரிய இறகுகள் கறுப்பாகவும், தலையும், மூக்கும் முடியின்றி மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதன் குஞ்சுகள் கரும்பருந்து போல் தோன்றும்; ஆனால் பறக்கும்போது இதன் வால் கரும்பருந்து போல் பிளவுபட்டுத் தோன்றாது -- ஆப்புபோல் தோன்றும்.

உணவு[தொகு]

அழுகும் சடலங்களே இவற்றின் முக்கிய உணவாக இருப்பினும் பூச்சிகள், சிறு ஊர்வன, பாலூட்டிகள், ஓட்டுடலிகள், நத்தை, பிற பறவைகளின் முட்டை, பெரிய விலங்குகளின் சாணம் உள்ளிட்டவற்றை இவை உண்ணும் . ஊர்புறங்களில் குப்பைகளில் உள்ள கழிவுகள் உள்ள பகுதிகளில் இவற்றைக் காண இயலும்.

சிறப்பு இயல்பு[தொகு]

இதர கழுகு இனங்கள் அனைத்தும் தங்களது இரையை உண்பதற்கு, அவற்றினுடைய அலகு, கால்களைப் பயன்படுத்தும். ஆனால், இந்தக் கழுகு மட்டும், கூழாங்கல், குச்சி போன்ற சிறுசிறு கருவிகளைப் பயன்படுத்துகிறது.

வளங்காப்பு நிலை[தொகு]


மேற்கோள்[தொகு]

  1. IUCN Red List 2012.
  2. ராதிகா ராமசாமி (21 சூலை 2018). "ஆன்மாவை விடுவிக்கும் கழுகு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2018.
  3. https://www.vikatan.com/news/miscellaneous/120170-is-really-sparrow-birds-are-in-endangered-list-of-birds.html?artfrm=related_article
  4. 4.0 4.1 "Habitat". Animal Diversity Web. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
  6. சு. பாரதிதாசன். பாறு கழுகுகளும் பழங்குடியினரும் (2019). பக். 43. உயிர் பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பாறு&oldid=3772949" இலிருந்து மீள்விக்கப்பட்டது