பூமன் ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூமன் ஆந்தை
Brown fishing owl.jpg
கர்நாடக மாநிலம் பிரிகிரிரங்கா குன்றுப்பகுதியில் ஒரு பூமன் ஆந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: ஆந்தை
குடும்பம்: Strigidae
பேரினம்: Bubo
இனம்: B. zeylonensis
இருசொற் பெயரீடு
Bubo zeylonensis
(மெலின், 1788)

பூமன் ஆந்தை (Brown fish owl, Bubo zeylonensis) ஆசியாவில் காணப்படும் ஒரு ஆந்தை வகை. சீனா முதல் பாலத்தீனம் வரை 7000 கி.மீ பரந்துள்ள பகுதிகளில் இது காணப்படுகிறது. 48 முதல் 58 செ.மீ நீளமும் 125 முதல் 150 செ.மீ இறககலமும் கொண்டது.

பெயர்கள்[தொகு]

தமிழில் :பூமன் ஆந்தை

ஆங்கிலப்பெயர் :Brown Fish Owl

அறிவியல் பெயர் : Bubo zeylonensis

உடலமைப்பு[தொகு]

56 செ.மீ. - தோற்றத்தில் கொம்பன் ஆந்தையை ஒத்ததெனினும் அதன் கால்களைப் போர்த்திருப்பது போன்ற தூவி இறகுகள் இதன் கால்களைப் போர்த்திராது. கரும்பழுப்பு நிற உடலும் மார்பும் கொண்டது. தொண்டையும் முன்கழுத்து வெண்மையாக இருக்கும். கண்கள் பளபளப்பான மஞ்சள் நிறம்.

காணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]

சமவெளி முதல் மலைகளில் 1400மீ. உயரம் விரையும் வயதான மரங்கள் நிற்கும் தோப்புகள், மனிதர்கள் வாழ்விடங்களில் குளக்கரை சார்ந்த மரங்கள் ஆகியவற்றில் இiணாயக வாழும் இது மேகமூட்டம் உள்ள நாட்களில் பகலிலும் வேட்டையாடும். மற்ற நாட்களில் மாலை நேரத்தில் நீர்ப்பரப்பின் மீது பறந்தபடி பறந்து நீரின் மேற்பரப்பிலிருந்தே மீன்களைக் கால்களால் பற்றிப் பிடிக்கும். சிறு பறவைகளையும் வேட்டையாடித் தின்னும். பூம் பூம் எனவும் பூமோ பூம் எனவும் அச்சம் ஊட்டும் வகையில் உரக்கக் குரலெடுத்துக் கத்துவதாலேயே தமிழில் பூமன் ஆந்தை என அழைக்கப்படுகிறது.

இனப்பெருக்கம்[தொகு]

டிசம்பர் முதல் மார்ச் முடிய நீர்நிலைகளுக்கு அருகில் மரக்கிளைகளின் பிரிவில் உள்ள குழிவிலும், பாறைகளிடையேயான பிளவிலும், பாழடைந்த கட்டிடங்களிலும், 1 அல்லது 2 முட்டைகள் இடும். [2]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூமன் ஆந்தை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Ketupa zeylonensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:77
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமன்_ஆந்தை&oldid=2428906" இருந்து மீள்விக்கப்பட்டது