பழுப்பு மீன் ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு மீன் ஆந்தை
கர்நாடக மாநிலம் பிரிகிரிரங்கா குன்றுப்பகுதியில் ஒரு பூமன் ஆந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. zeylonensis
இருசொற் பெயரீடு
Bubo zeylonensis
(மெலின், 1788)
Range of brown fish owl      Resident      Possibly Extant (resident)

பழுப்பு மீன் ஆந்தை (Brown fish owl, Bubo zeylonensis) என்பது ஸ்ட்ரிஜிடே குடும்பத்தில் உள்ள ஒரு மீன் ஆந்தை இனமாகும். இது துருக்கியிலிருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது. இதன் பரவலான வாழிட எல்லை காரணமாக இது செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.[1] இது காடுகள் மற்றும் மரங்கள் நிறைந்த ஈரநிலங்களில் வாழ்கிறது.[2] இது சீனா முதல் பாலத்தீனம் வரை 7000 கி.மீ பரந்துள்ள பகுதிகளில் இது காணப்படுகிறது. 48 முதல் 58 செ.மீ நீளமும் 125 முதல் 150 செ.மீ இறககலமும் கொண்டது.

வகைபிரித்தல்[தொகு]

இதில் நான்கு துணை இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]

 • K. z. semenowi Zarudny, 1905 – தென்கிழக்கு துருக்கி, மத்திய கிழக்கு முதல் வடமேற்கு இந்தியா வரை.[4]
 • பூமன் ஆந்தை K. z. leschenaulti (Temminck, 1820) – இந்தியாவில் இருந்து மியான்மர் வழியாக மேற்கு தாய்லாந்து வரை.[5]
 • K. z. zeylonensis (Gmelin, JF, 1788) – இலங்கை
 • K. z. orientalis Delacour, 1926 – வடகிழக்கு மியான்மர் முதல் தென்கிழக்கு சீனா, இந்தோசீனா மற்றும் மலாய் தீபகற்பம்[6]

உடலமைப்பு[தொகு]

இதன் உடலின் நீளம் 56 செ.மீ. ஆகும். இது தோற்றத்தில் கொம்பன் ஆந்தையை ஒத்ததெனினும், கொம்பன் ஆந்தையின் கால்களில் போர்த்திருப்பது போன்ற தூவி இறகுகள் இதன் கால்களைப் போர்த்தியிராது. கரும்பழுப்பு நிற உடலும் மார்பும் கொண்டது. தொண்டையும் முன்கழுத்தும் வெண்மையாக இருக்கும். கண்கள் பளபளப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

காணப்படும் பகுதிகளும் உணவும்[தொகு]

மீன் பிடிப்பதற்கு ஏற்ற இசைவாக்கம் கொண்டுள்ள கால் அமைப்பு

சமவெளி முதல் மலைப்பகுளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 மீ. உயரம் வரை மரங்கள் உள்ள தோப்புகள், மனிதர்கள் வாழ்விடங்களில் குளக்கரை சார்ந்த மரங்கள் ஆகியவற்றில் இவை வாழும். இது மேகமூட்டம் உள்ள நாட்களில் பகலிலும் வேட்டையாடும். மற்ற நாட்களில் மாலை நேரத்தில் நீர்ப்பரப்பின் மீது பறந்தபடி மீன்களைக் கால்களால் பற்றிப் பிடிக்கும். சிறு பறவைகளையும் வேட்டையாடித் தின்னும். பூம் பூம் எனவும் பூமோ பூம் எனவும் அச்சம் ஊட்டும் வகையில் உரக்கக் குரலெடுத்துக் கத்துவதாலேயே தமிழில் பூமன் ஆந்தை என அழைக்கப்படுகிறது.

இனப்பெருக்கம்[தொகு]

பழுப்பு மீன் ஆந்தைகள் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் இனப்பெருக்க வாழிடத்தைப் பொறுத்து இனப்பெருக்க காலம் முன்னும் பின்னும் மாறுபடும். வடக்கில் சற்று முன்னதாகவும், வெப்பமண்டல தெற்கில் சிறிது காலம் தாமதமாக இனப்பெருக்கம் உச்சத்தை அடையும். இனப்பெருக்க காலம் வறண்ட காலத்தை ஒட்டி வருகிறது. வறண்ட காலத்தில் நீர்நிலைகளில் நீர் மட்டங்ம் குறைந்து காணப்படுவதால் நண்டுகள், மீன்கள் போன்றவை மிகவும் எளிதாக இவற்றிற்கு கிடைக்கும் காலமாக உள்ளது. பழுப்பு மீன் ஆந்தைகள் பழமையான மாமரங்கள், அத்தி மரங்கள், அரச மரங்கள், ஆல மரங்கள், குங்கிலிய மரம் மற்றும் தாழ்நில காடுகளில் உள்ள மற்ற பெரிய மரங்களில் நிழலான இடங்களில் கூடு கட்டுகின்றன. பெரிய மரக்கிளைகளின் பிரிவில் உள்ள பொந்துகளிலும் பாறைகளிடையேயான பிளவிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடும்.[7] இந்தியாவில் 10 முட்டைகளின் சராசரி அளவானது 58.4 மிமீ × 48.9 மிமீ (2.30 அங்குலம் × 1.93 அங்குலம்) அளவில் உள்ளது. வடக்கே மீன் ஆந்தைகளின் முட்டைகள் சராசரியாக சற்று பெரியதாக இருக்கும். அடைகாத்தல் 38 நாட்கள் அல்லது சற்றே குறைவாக இருக்கும். குஞ்சுகள் வளர ஏழு வாரங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 BirdLife International (2016). "Ketupa zeylonensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689012A90010491. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689012A90010491.en. https://www.iucnredlist.org/species/22689012/90010491. பார்த்த நாள்: 3 February 2022. 
 2. Grimmett, R.; Inskipp, C.; Inskipp, T. (2016). "Brown Fish Owl Ketupa zeylonensis". Birds of the Indian Subcontinent: India, Pakistan, Sri Lanka, Nepal, Bhutan, Bangladesh and the Maldives. Helm Field Guides. London: Bloomsbury Publishing. p. 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408162651.
 3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (August 2022). "Owls". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 24 December 2022.
 4. Sarudny, N. (1905). "Zwei ornithologische Neuheiten aus West-Persien". Ornithologisches Jahrbuch 16: 141–142. https://archive.org/details/ornithologische161905hall/page/141. 
 5. Temminck, C. J. (1838). "Hibou Leschenault. Strix Leschenault". Nouveau recueil de planches coloriées d'oiseaux : pour servir de suite et de complément aux planches enluminées de Buffon, édition in-folio et in-4⁰ de l'Imprimerie royale, 1770. Vol. II. Paris, Strasbourgh, Amsterdam: F. G. Levrault, Legras Imbert et Comp.
 6. Delacour, J. F. (1926). "Ketupa celonensis orientalis". Bulletin of the British Ornithologists' Club 47 (308): 11. https://archive.org/details/bulletinofbritis47tayl/page/11. 
 7. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:77

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ketupa zeylonensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_மீன்_ஆந்தை&oldid=3789998" இலிருந்து மீள்விக்கப்பட்டது