மல்லப்பாடி துர்க்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மல்லப்பாடி துர்க்கம் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் கிருட்டிணகிரியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.[1] மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும் காணப்படுகின்றன. இம்மலைக்கோட்டை 2368 அடி உயரமுடையது. மலையின் அடிவாரத்தில் இரண்டு திருமால் கோயில்கள் உள்ளன. இக்கோயிலின் உள்ளும் புறமும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Bargur/Mallapadi
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 306