பூம்புகார் நகர், கொளத்தூர்

ஆள்கூறுகள்: 13°07′16.0″N 80°12′48.2″E / 13.121111°N 80.213389°E / 13.121111; 80.213389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூம்புகார் நகர், கொளத்தூர்
Poompuhar Nagar, Kolathur

பூம்புகார் நகர்
புறநகர்ப் பகுதி
பூம்புகார் நகர், கொளத்தூர் Poompuhar Nagar, Kolathur is located in சென்னை
பூம்புகார் நகர், கொளத்தூர் Poompuhar Nagar, Kolathur
பூம்புகார் நகர், கொளத்தூர்
Poompuhar Nagar, Kolathur
பூம்புகார் நகர், கொளத்தூர் (சென்னை)
ஆள்கூறுகள்: 13°07′16.0″N 80°12′48.2″E / 13.121111°N 80.213389°E / 13.121111; 80.213389
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்33 m (108 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600099
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள பகுதிகள்கொளத்தூர், இலட்சுமிபுரம், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், அகரம், ஜவஹர் நகர் , பெரியார் நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு. க. ஸ்டாலின்
இணையதளம்https://chennaicorporation.gov.in

பூம்புகார் நகர் (Poompuhar Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் புறநகர்ப் பகுதிக்கு அருகில், 13°07′16.0″N 80°12′48.2″E / 13.121111°N 80.213389°E / 13.121111; 80.213389 (I.e., 13.121100°N, 80.213400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கொளத்தூர், இலட்சுமிபுரம், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், அகரம், ஜவஹர் நகர் , பெரியார் நகர், வில்லிவாக்கம், ஜெனரல் குமாரமங்கலம் காலனி மற்றும் பெரம்பூர் ஆகியவை பூம்புகார் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். இப்பகுதியில் இரண்டு முக்கிய சாலைகள், 30 முக்கிய தெருக்கள் மற்றும் 28 குறுக்குத் தெருக்கள் உள்ளன. பூம்புகார் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதைத் தீர்க்க ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன.[1][2] இத்திட்டத்தால் பூம்புகார் நகர் பயனடைகிறது.[3]

போக்குவரத்து[தொகு]

சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், பூம்புகார் நகருக்குக் கணிசமான அளவில் மாநகரப் பேருந்துகளை இயக்குகிறது. இப்பகுதி கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி ஆகிய புறநகர்ப் பகுதிகளுடன் சாலை வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பூம்புகார் நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இரட்டை ஏரி சந்திப்பு, சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புறநகர் இரயில் நிலையமான வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் இவ்வூருக்கு பலனளிக்கிறது. சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் ஆகியவை முறையே பூம்புகார் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

கல்வி[தொகு]

பள்ளிகள்[தொகு]

இங்கு அமைந்துள்ள கிட்ஸீ (Kidzee)[4] மற்றும் கிட்டீஸ் வேர்ல்ட் ப்ளே ஸ்கூல் ஆகியன குழந்தைகளுக்கான பள்ளிகளாகும்.

கல்லூரி[தொகு]

இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் கொளத்தூரில் இயங்கி வரும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி ஓர் அரசுக் கல்லூரியாகும்.

மருத்துவம்[தொகு]

கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கும் டபிள்யூ. சி. எஃப் (WCF) மருத்துவமனை இங்கு அமையப் பெற்றுள்ளது.

ஆன்மீகம்[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இப்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை ஒன்று தற்காலிகமாகக் காட்சிப்படுத்தப்படும். அவ்வகையில், 2019 ஆம் ஆண்டு, சுமார் 3 இலட்சம் எண்ணிக்கையில் ருத்ராட்ச விதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.[5] அவ்வாறே, 2022 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூம்புகார் நகர் பகுதியில், சுமார் 40 அடி உயர தரணி விநாயகர் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.[6]

கோயில்[தொகு]

இங்குள்ள சர்வ சக்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[7]

பொழுதுபோக்கு[தொகு]

பூங்கா[தொகு]

பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கும் மாநகராட்சிப் பூங்கா ஒன்று பூம்புகார் நகரில் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

பூம்புகார் நகர் பகுதியானது, கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. கே. ஸ்டாலின். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Corporation’s out-of-box ideas help Chennai escape deluge". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/nov/14/corporations-out-of-box-ideas-help-chennai-escape-deluge-2518068.html. 
  2. "Chennai: GCC completes work of lowering precast for integrated storm water drain network in Kolathur" (in en). 2022-10-03. https://www.timesnownews.com/chennai/chennai-gcc-completes-work-of-lowering-precast-for-integrated-storm-water-drain-network-in-kolatur-article-94616801. 
  3. "கொளத்தூரில் 10மீ மழைநீர் வடிகால் பணி 36 மணி நேரத்தில் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/878009-10-m-storm-water-drain-work-in-completed-in-36-hours.html. 
  4. "Kidzee Pre School, Poompuhar Nagar, Kolathur, Chennai". www.edustoke.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  5. Deccan Chronicle (2019-09-04). "Chennai: Vinayaka idols leave devotees elated" (in en). https://www.deccanchronicle.com/nation/current-affairs/040919/chennai-vinayaka-idols-leave-devotees-elated.html. 
  6. "பஞ்சலோக வேல், அன்னாசி பழத்தில் செய்யப்பட்டு சென்னையில் வைக்கப்பட்டுள்ள வித, விதமான விநாயகர் சிலை". https://www.dinakaran.com/news_detail.asp?Nid=795403. 
  7. "Arulmigu Sarva Sakthi Vinayagar Temple, Kolathur, Chennai - 600099, Chennai District [TM001232].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.

வெளி இணைப்புகள்[தொகு]

[wcfkolathur.in/]