பாவக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவக்கல்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635307

பாவக்கல் (Pavakkal) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பாவக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 407, மொத்த மக்கள் தொகை 1,608, இதில் 814 ஆண்களும், 794 பெண்களும் அடங்குவர்.[2]

சமணக் கோயில்[தொகு]

இங்கு ஒரு சமணப் பள்ளி இருந்ததையும், அப்பள்ளிக்கு நிலக்கொடை அளிக்கப்பட்ட தகவலும் இங்கு கண்டறியப்பட்ட கல்வெட்டால் தெரியவருகிறது. ஆனால் அந்த சமணப்பள்ளி தற்போது இருப்பதாக தெரியவில்லை.[3]

மேற்கோள்[தொகு]

  1. "Revenue Administration - Krishnagiri District, Government of Tamil Nadu - India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Pavakkal Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  3. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். பக். 121. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவக்கல்&oldid=3752778" இலிருந்து மீள்விக்கப்பட்டது