பார்டர்-கவாஸ்கர் கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்டர்-கவாஸ்கர் கிண்ணம்
बॉर्डर-गावस्कर चषक.jpg
நிர்வாகி(கள்)ஐசிசி
ஆத்திரேலியா சிஏ & இந்தியா பிசிசிஐ
வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1996–97[1]
கடைசிப் பதிப்பு2018–19
அடுத்த பதிப்பு2020
போட்டித் தொடர் வடிவம்தொடர்
மொத்த அணிகள்2
தற்போது கோப்பையை வைத்திருப்பவர்இந்தியா இந்தியத் துடுப்பாட்ட அணிஇந்தியா
அதிகமுறை வெற்றிகள் இந்தியா (9 முறை)[1]
அதிகபட்ச ஓட்டங்கள்இந்தியா சச்சின் டெண்டுல்கர் (2,380)
அதிகபட்ச வீழ்த்தல்கள்இந்தியா அனில் கும்ப்ளே (111)
India tour of Australia in 2018–19

பார்டர்-கவாஸ்கர் கிண்ணம் (Border-Gavaskar Trophy) என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் மூலம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை தொடர் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தால், முன்பு கிண்ணத்தை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்த தொடருக்கு ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் துடுப்பாட்ட வாழ்க்கையில் 10,000 தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களை அடித்த முதல் 2 தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். அந்தந்த அணிகளின் முன்னாள் அணித் தலைவர்களான இருவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Records / Border-Gavaskar Trophy / Series results". espncricinfo.com. பார்த்த நாள் 7 January 2018.