பயனர் பேச்சு:Tharique
வாழ்த்துகள்[தொகு]
அருமையான பங்களிப்புகளை அளித்து வருகிறீர்கள் தாரிக். உங்கள் பணிதொடர எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.--சோடாபாட்டில்உரையாடுக 03:57, 24 சூன் 2011 (UTC)
- மிக்க நன்றி சோடாபாட்டில். அழகு தமிழில் அகிலம் முழுக்க அன்பு பரப்புவோம். :) --Tharique 12:11, 24 சூன் 2011 (UTC)
- தாரிக், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பங்களிப்புகள் மிகவும் அருமை. முடியுமானால் பொத்துவில் கட்டுரையை மேம்படுத்தித் தாருங்கள். பொத்துவிலில் புகழ் பெற்றவர்களைப் பற்றி எழுதுங்கள். நீங்கள் தரவேற்றும் படிமங்கள் தங்களுடையது என்றால் PD-self வார்ப்புருவையும் சேர்த்து விடுங்கள். அவற்றைக் கட்டுரைகளிலும் இணையுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:37, 26 சூன் 2011 (UTC)
- வணக்கம் சிறீதரன். நன்றி. தற்போது பொத்துவில் கட்டுரையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். தங்களின் பரிந்துறையின் படியே, படிமங்களையும் கட்டுரைகளினிடையே சேர்க்கவுள்ளேன். நன்றி. --Tharique 01:48, 26 சூன் 2011 (UTC)
- தாரிக், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பங்களிப்புகள் மிகவும் அருமை. முடியுமானால் பொத்துவில் கட்டுரையை மேம்படுத்தித் தாருங்கள். பொத்துவிலில் புகழ் பெற்றவர்களைப் பற்றி எழுதுங்கள். நீங்கள் தரவேற்றும் படிமங்கள் தங்களுடையது என்றால் PD-self வார்ப்புருவையும் சேர்த்து விடுங்கள். அவற்றைக் கட்டுரைகளிலும் இணையுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:37, 26 சூன் 2011 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
சோடாபாட்டில்உரையாடுக 03:33, 27 சூன் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றிகள் சோடாபாட்டில் தங்கள் அன்புக்கு. அன்பினால் அகிலத்தை மெருகேற்றுவோம். :) --Tharique 10:57, 27 சூன் 2011 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:51, 21 சூலை 2011 (UTC)
- வணக்கம் சுப்பிரமணி. நன்றி, தங்கள் வாழ்துக்கும் வேண்டுகோளுக்கும். கடந்த சில வாரங்களாக நான் எனது சில பல பணிகள் காரணமாக தொடர்ந்தும் விக்கியிற்கு பங்களிக்க முடியவில்லை. கிடைக்கும் வசதியான நேரங்களில் தொடர்ந்தும் பங்களிக்க திடசங்கல்ப்பம் பூண்டுள்ளேன். அழகு தமிழால் அன்பு பரப்புவோம். நன்றி. --Tharique 15:41, 24 சூலை 2011 (UTC)
Invite to WikiConference India 2011[தொகு]
Hi Tharique,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
ஈத் முபாரக்[தொகு]
இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:39, 31 ஆகத்து 2011 (UTC)
- வாழ்த்துக்களுக்கு நன்றிகளைச் சொல்வதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன். அதேபோன்றே, உங்களுக்கும் அத்தோடு புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் விக்கி குடும்பத்தின் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களைச் சேர்ப்பதில் பேருவகை அடைகின்றேன். ஈத் முபாரக். நன்றி. --Tharique 00:46, 31 ஆகத்து 2011 (UTC)
- என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:54, 31 ஆகத்து 2011 (UTC)
- நன்றிகள் பல தேனி.எம்.சுப்பிரமணி. உங்கள் வாழ்த்து கண்டு, புளகாங்கிதம் கொண்டேன். நன்றி. --Tharique 01:05, 31 ஆகத்து 2011 (UTC)
- வஅலைக்குமுஸ்ஸலாம் சமீர். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்ளும் அதேவேளை, இந்தப் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தங்களுக்குச் சேர்ப்பதிலும் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன். ஈத் முபாரக். - --Tharique 05:35, 31 ஆகத்து 2011 (UTC)
கடைசி இரண்டு பாதாதைகளும்[தொகு]
நீங்கள் கடைசியாக இணைத்த இரண்டு பதாதைகளும் மிக அழகாக உள்ளன. அவற்றின் அளவு வலைப்பதிவுகளின் ஒரு block போடத் தக்கதா என்று ஒரு முறை உறுதிப் படுத்த வேண்டும். மேலும் அவற்றை ஒன்று மாறி மற்றது வரக்கூடிய gif ஆக ஆக்கினாலும் சிறப்பாக இருக்கும். நன்றிகள். --Natkeeran 20:20, 29 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி நக்கீரன். நான் குறித்த பதாதைகளை 336x280 படவணுக்கள் அளவிலேயே வடிவமைத்தேன் (இந்த அளவே, பொதுமைப்பாடான அளவாகக் கொள்ளப்படுகிறது). ஆனாலும், தேவையான பொருத்தமான அளவுகளிலும் அவற்றை வடிவமைக்க முடியும். வலைப்பதிவுகளில் பொருந்தும் படியான அமைவின், படவணுக்கள் அளவை, அறிந்திருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். குறித்த பதாதைகளை அந்த அளவுகளிலும் வித்தியாசமான அமைப்புகளில் வடிவமைக்கவும் அசைவூட்டம் கொண்டதாய் பதாதைகளை உருவாக்கவும் துணையாக அந்தத் தகவல் இருக்கும். நன்றிகள் பல. --Tharique 21:07, 29 அக்டோபர் 2011 (UTC)
பதாகைகளுக்கு நன்றி தாரிக். ஊடகப் போட்டிக்கு இரு வகையான பதாகைகள் தேவைப்படுகின்றன. 1) விக்கிக்குள் தள அறிவிப்பில் இட வேண்டிய பதாகைகள் 2) விக்கிக்கு வெளியே வலைப்பதிவுகள் போன்ற தளங்களில் இட வேண்டியவை. இது வரை உருவாகியவை (நீங்கள், செந்தி உருவாக்கியவை) அனைத்தும் வெளித் தளங்களில் இடப் பொருத்தமானவை. விக்கிக்குள் தள அறிவிப்பில் இட 800 X 180 படவணு (அல்லது அதற்கு அருகில்) உடையவைத் தேவைப்படுகின்றன. இதற்கு முன்னுதராணமாக சென்றவருட நன்கொடைவேண்டுதல் முயற்சியின் சில பதாகைகளை கீழே தந்துள்ளேன். அவை போன்று உங்கள் பதாகைகளை வடிவமைத்துத் தர வேண்டுகிறேன்.
- தகவலுக்கு நன்றி சோடாபாட்டில். நீங்கள் கேட்டது போலவே, குறித்த 800x180 படவணுக்களில் வரக்கூடிய வகையில், மூன்று வித்தியாசமான பதாதைகளை வடிவமைத்து, திட்ட பேச்சுப் பக்கத்தில் இணைத்துள்ளேன். அத்தோடு, ஊடகப் போட்டி பற்றிய ஒருபக்க கையேட்டையும் விரைவில் பதிவேற்றுகிறேன். நன்றிகள் பல. --Tharique 01:02, 4 நவம்பர் 2011 (UTC)
- நன்றி தாரிக்--சோடாபாட்டில்உரையாடுக 07:26, 4 நவம்பர் 2011 (UTC)
- ஊடகப் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய வகையில், நான் வடிவமைத்த ஒரு பக்கக் கையேட்டை, ஊடகப் போட்டி பேச்சுப் பக்கத்தில் இணைத்துள்ளேன். PDF கோப்பிற்கான இணைப்பு படிமம்:OnePageContestGuide.pdf நன்றி. --Tharique 22:36, 7 நவம்பர் 2011 (UTC)
மேலுமொரு சிறிய உதவி[தொகு]
தாரிக் ஊடகப் போட்டி குறித்து மேலுமொரு உதவி வேண்டி வந்துள்ளேன் :-). போட்டி துவக்கத் தேதி நவம்பர் 15 ஆக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் உருவாக்கிய இரு கையேடுகளிலும் தேதியை மாற்றி (டிசம்பர் 1 இல் இருந்து நவம்பர் 15 என) வேறு பதிப்புகள் தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:00, 13 நவம்பர் 2011 (UTC)
- நீங்கள் கேட்டது போன்றே போட்டியின் துவக்கத் தேதியை நவம்பர் 15 என மாற்றி, இரண்டு கையேடுகளையும் இற்றைப்படுத்தி பதிவேற்றியுள்ளேன். கோப்புகளுக்கான இணைப்புகள் வருமாறு,
- விரிவான கையேடு - PDF கோப்பு - படிமம்:DetailedGuideUpdated.pdf
- ஒரு பக்கக் கையேடு - PDF கோப்பு - படிமம்:OnePageContestGuideUpdated.pdf
- ஒரு பக்கக் கையேடு - JPG கோப்பு - படிமம்:OnePageContestGuideUpdated.jpg
- நன்றி சோடாபாட்டில். --தாரிக் அஸீஸ் உரையாடுக 08:37, 13 நவம்பர் 2011 (UTC)
- உடனடியாக மாற்றியமைத்து உதவியமைக்கு மிக்க நன்றி தாரிக்.--சோடாபாட்டில்உரையாடுக 08:41, 13 நவம்பர் 2011 (UTC)
இன்னும் சில உதவிகளுக்காக உங்களை நச்சரிக்க வந்துள்ளேன். :-) போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள தங்கள் பதாகைகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன (விக்கிக்குள் விளம்பரம் செய்ய).
- படிமம்:Wiki contest native banner1.png - இதில் தேதிகளை நீக்கிவிட்டு பரிசுகளை இணைக்க வேண்டும்
- படிமம்:Wiki contest native banner2.png - இதில் பரிசுகளை இணைக்க வேண்டும்
- படிமம்:BannerMediaContest.png, படிமம்:MediaContestBanner2.png, படிமம்: TWMC banner.png இவை மூன்றும் முடிந்தால் நீள பதாகைகளாக செய்து தர வேண்டுகிறேன்.
--சோடாபாட்டில்உரையாடுக 09:53, 13 நவம்பர் 2011 (UTC)
- சோடாபாட்டில், சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீங்கள் கேட்டது போலவே, குறித்த பதாகைகளில் பரிசுகள் பற்றிய விபரங்கள் சேர்த்து இற்றைப்படுத்தி கோப்புகளை பதிவேற்றியுள்ளேன். இற்றைப்படுத்தப்பட்ட கோப்புகளுக்கான இணைப்புகள் வருமாறு,
- அத்தோடு, சிறிய அளவில் நான் வடிவமைத்த பதாகைகளை, நீளமான பதாகைகளாக வடிவமைத்தும் அவற்றையும் பதிவேற்றியுள்ளேன். பதிவேற்றப்பட்ட கோப்புகளுக்கான இணைப்புகள் வருமாறு,
- நன்றிகள் பல. --தாரிக் அஸீஸ் உரையாடுக 02:31, 14 நவம்பர் 2011 (UTC)
- மிக்க நன்றி தாரிக். நாளை முதல் இவை தள அறிவிப்புகளில் வெளியாகும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:33, 14 நவம்பர் 2011 (UTC)
- தாரிக் இறுதி மூன்று பதாகைகளிலும் ஒரு சிறு எழுத்துப்பிழை உள்ளது. “பங்கேற்று” என்பதற்கு பதிலாக “பற்கேற்று” என்று உள்ளது. மாற்றியமைத்துத் தர வேண்டுகிறேன்..--சோடாபாட்டில்உரையாடுக 07:31, 15 நவம்பர் 2011 (UTC)
- சோடாபாட்டில், சற்று தாமதான பதிலுக்கு மன்னிக்கவும், எனது பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்ததால் உடனடியாக மாற்றங்களைச் செய்து, கோப்பை இற்றைப்படுத்த முடியவில்லை. தற்போது, எழுத்துப்பிழையைத் திருத்தி, "பங்கேற்று" என்பதற்குப் பதிலாக "பற்கேற்று" எனவிருந்த நான்கு பதாகைகளையும் இற்றைப்படுத்தி பதிவேற்றியுள்ளேன் (அதே கோப்புப் பெயர்களிலேயே பதிவேற்றம் செய்துள்ளேன்). விக்கி ஊடகப் போட்டி பதாகைகள் பக்கத்தில், பதாகைகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. நன்றிகள் பல. --தாரிக் அஸீஸ் உரையாடுக 00:11, 16 நவம்பர் 2011 (UTC)
- மிக்க நன்றி தாரிக். ஒரு நாள் தாமதமாயினும் பரவாயில்லை தாரிக். நீங்களும் செந்தியும் செய்து தந்திருக்கும் பிற பதாகைகளைக் கொண்டு சமாளித்து விட்டேன். திருத்தப்பட்டவற்றை அடுத்த சுற்றில் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:50, 16 நவம்பர் 2011 (UTC)
மீண்டும் நான்[தொகு]
உங்களை விடாது தொந்தரவு செய்ய மீண்டும் வந்துள்ளேன் :-). ஒரு பக்கக் கையேட்டின் ஆங்கில வடிவம் தேவைப்படுகிறது (அமெரிக்காவில் தமிழ் தனிமொழியாகக் கற்கும் மாணவர்களுக்காக). ஆங்கில மகுட வாசகம்: "knowledge beyond text". ஆங்கிலப் பெயர் : "Tamil Wiki Media Contest". ஏனைய ஆங்கில உள்ளடக்கங்கள் வலைவாசல்:ஊடகப் போட்டி/en, விக்கிப்பீடியா:தமிழ்_விக்கி_ஊடகப்_போட்டி/English_version ஆகிய பக்கங்களில் உள்ளன. --சோடாபாட்டில்உரையாடுக 20:05, 16 நவம்பர் 2011 (UTC)
- தமிழ் விக்கி ஊடகப் போட்டி தொடர்பான ஒரு பக்கக் கையேட்டின் ஆங்கிலப் பதிப்பை வடிவமைத்து பதிவேற்றியுள்ளேன். குறித்த கோப்புகளுக்கான இணைப்புகள் வருமாறு,
- PDF கோப்பு - படிமம்:TamilWikiMediaContestGuideEnglish.pdf
- JPG கோப்பு - படிமம்:OnePageContestGuideEnglish.jpg
- அத்தோடு, தமிழ்மணம் தளத்திற்காக சிறிதளவாக்கப்பட்டுள்ள பதாகையின் உள்ளடக்கங்கள் சற்று தெளிவின்மையாய் காணப்படுவதோடு, Pixelate ஆகியும் இருப்பதை படிமம்:Twmc tamizhmanam.jpg என்ற படிமத்தில் அவதானித்தேன். அதனால், JPG கோப்பின் தரத்தை சற்று மெருகேற்றி, பதாகையின் உள்ளடக்கங்கள் தெளிவாகத் தெரிகின்ற வகையில் இற்றைப்படுத்தி, படிமம்:TWMC banner.jpg என்கின்ற கோப்பாக பதிவேற்றியுள்ளேன். குறித்த பதாகையை, புதிய மெருகேற்றப்பட்ட பதாகையால் பிரதியிடுவது பொருத்தமென பரிந்துரைக்கிறேன். நன்றிகள் பல. --தாரிக் அஸீஸ் உரையாடுக 21:32, 16 நவம்பர் 2011 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
சிறந்த படக்கலைஞர் பதக்கம் | |
தமிழ் விக்கியூடகப் போட்டிக்காக அற்புதமான பதாகைகளை வடிவமைத்தற்காக இந்த பதக்கத்தை வழங்குகிறேன். வாழ்த்துக்கள்!! ஸ்ரீகாந்த் 09:42, 13 நவம்பர் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றி ஸ்ரீகாந்த் தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்புக்கும். :) --தாரிக் அஸீஸ் உரையாடுக 02:33, 14 நவம்பர் 2011 (UTC)
முதற்பக்கப்படம் திட்டம்[தொகு]
நீங்கள் பரிந்துரைத்த படம் இன்று முதற்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. நான் இத்திட்டத்தைப் புரிந்து கொள்ள எடுத்துக்கொண்ட கால அவகாசத்தை விட நீங்கள் கூடிய விரைவிலேயே புரிந்து கொண்டீர்கள் என்று எண்ணுகிறேன். இனியும் நீங்கள் பரிந்துரைகளாகத் தராமல் தாராளமாக திட்டப் பக்கத்திலேயே நேரடியாக வார்ப்புருவாக்கம் செய்யவும். இதற்கான படிகளைக் கீழே கொடுத்துள்ளேன். தேவையான உதவிகள் செய்ய அணியமாக உள்ளேன். தயங்காமல் கேட்கவும் தாரிக்.
1. திட்டம் புதன் ஞாயிறு தோறும் சிறப்பு மிக்கப் படங்களைக் காட்சிப் படுத்துவதாகும்.
2. இப்பக்கத்தில் புதியதாக ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
3. உரிய வார்ப்புரு இதுவாகும்.
4. இவ்வார்ப்புருவிற்கு உரிய அளபுருக்கள் (படப்பெயர், அளவு, விளக்கம்) கொடுக்கவும்
5. பின்னர், உரிய நாளுக்குண்டான திட்டப்பக்கத்தில் சேர்த்துவிடவும். எ.கா: இதுபோல
இதில் ஏதேனும் ஐயமிருப்பின் அறிவிக்கவும். தெளிவுபடுத்த அணியமாக உள்ளேன். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 07:26, 7 திசம்பர் 2011 (UTC)
- நன்றி சூர்யபிரகாசு. தாங்கள் பரிந்துரைத்துள்ளபடியே, நிழற்படங்களை திட்டப்பக்கத்தில் வார்ப்புருவாக்கம் செய்கிறேன். ஐயம் தோன்றின் தங்களை அழைப்பேன். நன்றிகள் பல. :) --தாரிக் அஸீஸ் உரையாடுக 20:02, 7 திசம்பர் 2011 (UTC)
பாராட்டுக்கள்[தொகு]
போட்டிக்கு வந்த படங்களைக் கொண்டு நீங்கள் உருவாக்கிய பதாகைகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. அருமையான பணி. விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்கிறேன்.--117.193.202.229 01:17, 22 திசம்பர் 2011 (UTC)
- தாரிக் தங்கள் பதாதைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். இருப்பினும், இதுவொரு போட்டி நிகழ்ச்சிக்கான அறிவிப்புப் பதாகை. எனவே போட்டிக்கு வந்த படங்களை போட்டி முடிவு வெளிவருவதற்கு முன்பு போட்டிக்கான பதாகையில் சேர்ப்பது பொருத்தமாக இருக்குமென நான் கருதவில்லை. இது தொடர்பாக ஏனைய பயனர்களினதும் ஆலோசனைப் பெறுவது பயனுள்ளதாக இருக்குமென கருதுகின்றேன். ஏனெனில், போட்டிக்கு வந்த படங்களை சேர்க்கும்போது இவை தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் என்ற ஓர் உணர்வு ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு அல்லவா? இதனை சோடாபாட்டிலும் கவனத்திற்கொள்வார் என எதிர்பார்க்கின்றேன்--P.M.Puniyameen 05:05, 22 திசம்பர் 2011 (UTC)
- நன்றி புன்னியாமீன். ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே தாரிக் இவற்றை உருவாக்கி உள்ளார். போட்டிக்கு வந்த படங்கள் ஏற்கனவே கட்டுரைகளில் பயன்படத் தொடங்கிவிட்டன. எனவே “போட்டிக்கு வந்தவை” என வெளிப்படையாகக் குறிப்பிடாமல், அவற்றை முன்னுதாரணமாகப் பதாகைகளில் பயன்படுத்துவது குழப்பம் விளைவிக்காதெனக் கருதுகிறேன். போட்டி ஆரம்பிக்கையில் பதாகை உருவாக்க குறைவான மாதிரிப் படிமங்களே இருந்தன. போட்டியின் மூலம் அக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே போட்டிக்கு வந்தவை என்று குறிப்பிடாமல் பயன்படுத்தினால் குழப்பமும் ஏற்படாது. பொருத்தமான (பல்வகைக் கருப்பொருட்களைக்) படங்களைக் கொண்ட பதாகைகளும் நமக்குக் கிட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:08, 22 திசம்பர் 2011 (UTC)
- ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது. நீங்கள் இணைத்து வரும் படங்கள் நன்று. மேலும் முதற்பக்க இற்றைப்படுத்தலில் சேர்ந்ததற்கும் பாராட்டுகள்.--தென்காசி சுப்பிரமணியன் 08:23, 7 சனவரி 2012 (UTC)
முதற்பக்கப் படிமம் அறிவிப்பு[தொகு]
![]() | நீங்கள் தரவேற்றிய Sandhill.jpg என்ற படிமம் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 10, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
படிம் உதவியும் கருத்தும் தேவை[தொகு]
வணக்கம், தாரிக். தள அறிவிப்பில் பங்களிப்பாளர் படங்களை இட்டு பங்களிப்புகளைத் தூண்ட முயன்று வருகிறோம். இது தொடர்பான உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் இறுதியில் காணலாம். தற்போதுள்ள படிமங்கள் குறித்து உங்கள் கருத்து தேவைப்படுகிறது. மேலும், சென்ற ஆண்டு ஊடகப் போட்டிக்குப் பதாகைகள் வடிவமைத்துத் தந்தது போல் இந்த முயற்சிக்கும் சில பதாகைகள் வடிவமைத்துத் தந்தாலும் நன்றாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 09:44, 3 மார்ச் 2013 (UTC)
- இரவி, விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் எனது கருத்தையும் வடிவமைப்பையும் பகிர்ந்துள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 21:18, 10 மார்ச் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - வடிவமைப்புப் பணிகள்[தொகு]
வணக்கம் தாரிக், வடிவமைப்புப் பணிகளில் உங்கள் உதவியும் தேவைப்படுகின்றது. வடிவமைப்பு, கருத்து, மேம்படுத்தல், சீர்படுத்தல் என நீங்கள் பங்களிக்கலாம். இங்கே பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - வடிவமைப்புப் பணிகள். --Anton (பேச்சு) 05:48, 29 ஆகத்து 2013 (UTC)
- வணக்கம் அன்டன். நிச்சயமாக வடிவமைப்பில் நான் பங்களிக்கிறேன். தங்கள் தகவலுக்கும் வேண்டுகோளிற்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - வடிவமைப்புப் பணிகள் பக்கத்தில் எனது வடிவமைப்பு உதவிகளை இற்றைப்படுத்துகிறேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 22:23, 29 ஆகத்து 2013 (UTC)
- நன்றி தாரிக்! --Anton (பேச்சு) 04:45, 1 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் நண்பரே, தாங்களும் சட்டை வடிவமைப்பு பணியில் ஈடுபடுவது குறித்து மகிழ்ச்சி. தாங்கள் வடிவமைத்திருக்கும் சட்டையினை கண்டேன். கை விளிம்புகளில் பொறிக்கப்பட்டிருக்கும் முறை அழகாக இருக்கிறது. முன்பக்கம் எளிமையாக இருக்கிறது. ஏதேனும் வசனம் போன்று அமைத்தால் நன்றாக இருக்குமா நண்பரே. ஆலோசித்துவிட்டுக் கூறவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:16, 1 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் ஜெகதீஸ்வரன், தங்கள் கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சி கொண்டேன். சட்டையின் முன்பக்கம் வசனம் பொறிக்கப்பட்டால் முன்பக்கத்தின் நிலையில் நெரிசல் தோன்றும், இதனால் எளிமையான வடிவ நிலை தொலைக்கப்பட்டுவிடும் என எண்ணுகிறேன். எளிமையான நிலையில் வடிவமைப்பு இருந்தால், சட்டையை எங்கும் அணிந்து செல்வதற்கான ஆர்வம் தோன்றும் என நான் நம்புகிறேன். அத்தோடு, எளிமை நிலை பலரையும் கவரும். எளிமை என்பதுதான் "புதிய சங்கீரணம்" என்று நான் பலமாக நம்புகிறேன். --தாரிக் அஸீஸ் உரையாடுக 09:38, 2 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் அன்டன். நிச்சயமாக வடிவமைப்பில் நான் பங்களிக்கிறேன். தங்கள் தகவலுக்கும் வேண்டுகோளிற்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - வடிவமைப்புப் பணிகள் பக்கத்தில் எனது வடிவமைப்பு உதவிகளை இற்றைப்படுத்துகிறேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 22:23, 29 ஆகத்து 2013 (UTC)
சட்டை வடிவமைப்பு வேண்டுகோள்[தொகு]
வணக்கம் நண்பரே, தங்களுடைய வடிவமைப்பில் உருவான சட்டையை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தற்போது அச்சகப் பணிகளுக்காக அச்சட்டையின் மாதிரிகளைப் பயன்படுத்த உள்ளேன். எனவே சட்டை வடிவமைப்பு கோப்பினையும், அதற்கு பயன்படுத்திய எழுத்துருக்களையும் sagotharan.jagadeeswaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தந்தருள வேண்டுகிறேன். அத்துடன் எழுத்துருக்களின் அளவினையும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருப்பின் அதனையும் குறிப்பிடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:51, 5 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் நண்பரே, தங்களின் மின்னஞ்சலுக்கு பதிப்பிற்கு உசிதமான வகையில், வடிவமைப்பை, EPS மற்றும் PDF ஆகிய கோப்பு நிலைகளில் அனுப்பியிருக்கிறேன். அத்தோடு வடிவமைப்பு நிலைகள் தொடர்பான குறிப்புகளையும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளேன். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 01:09, 9 செப்டம்பர் 2013 (UTC)
வடிவமைப்புப் பணிகளில் உதவி தேவை[தொகு]
தாரிக், சில வடிவமைப்புப் பணிகளில் உடனடி உதவி தேவைப்படுகிறது. ஒருவேளை, அன்டன் உங்கள் மடல் தொடர்பில் இருக்கலாம். நன்றி !--இரவி (பேச்சு) 21:54, 19 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம் இரவி. திட்டப்பக்கத்தில் தேவையான புதிய வடிவமைப்புக்களை நானும் சேர்க்கின்றேன். தகவலுக்கு நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 01:54, 20 செப்டம்பர் 2013 (UTC)
வடிவமைப்புகளுக்கு நன்றி தாரிக். அழகாக வடிவமைத்துள்ளீர்கள். அட்டவணையில் உள்ள ஏனைய வடிவமைப்புக்களையும் உருவாக்குங்கள். --Anton (பேச்சு) 06:17, 20 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள்[தொகு]
தாரிக், நீங்களும் அன்டனும் இணைந்து வடிவமைப்புக்களைக் குவிப்பதைப் பார்க்கப் பிரமிப்பாக உள்ளது. தமிழ் விக்கிக்குத் தனியான வடிவமைப்புப் பிரிவு உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 14:31, 20 செப்டம்பர் 2013 (UTC)
- நானும் அப்படியே உணர்ந்தேன். இவர்களைப் பாராட்ட ஒரு பதக்கம் உருவாக்க வேண்டும். அதற்கான வடிவமைப்பு உதவியும் தேவை :)--இரவி (பேச்சு) 17:46, 20 செப்டம்பர் 2013 (UTC)
:: உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே! --தாரிக் அஸீஸ் உரையாடுக 18:19, 20 செப்டம்பர் 2013 (UTC)
பாராட்டுப் பத்திரம்[தொகு]
அன்டன், நாளை காலை பாராட்டுப் பத்திரத்துக்கான அச்சக உத்தரவைத் தர வேண்டும். தாரிக்கின் பதிப்பில் நான் கூறியுள்ள மாற்றங்களைச் செய்து தர முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 17:46, 20 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டிப் பதாகைகள்[தொகு]
தாரிக், வடிவமைப்புகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. கட்டுரைப் போட்டிப் பதாகைகள் சிலவற்றை வடிவமைக்க முடியுமா? வரும் நாட்களில் என் பங்களிப்பு குறைவாக இருக்கும், அதன் பின்னர் வடிவமைப்பில் இணைந்து கொள்வேன். --Anton (பேச்சு) 14:15, 26 செப்டம்பர் 2013 (UTC)
- வடிவமைப்புக்கள் எல்லாவற்றையும் நிறைவுற்றது என மாற்ற வேண்டும். :) --Anton (பேச்சு) 14:18, 26 செப்டம்பர் 2013 (UTC)
வேண்டுகோள்...[தொகு]
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:48, 27 செப்டம்பர் 2013 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
சிறந்த வரை கலைஞர் | |
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்காக சிறந்த வரை கலைகளை உருவாக்கியத்திற்காக சிறந்த வரை கலைஞர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். --Anton (பேச்சு) 02:14, 28 செப்டம்பர் 2013 (UTC) |
விருப்பம் --மணியன் (பேச்சு) 03:18, 28 செப்டம்பர் 2013 (UTC)
- +1 -- சூர்யபிரகாஷ் உரையாடுக 14:01, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:11, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 18:17, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:43, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:18, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்--இரவி (பேச்சு) 03:57, 6 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
மெய்வாழ்வுப் பதக்கம் | |
விக்கிப் பத்திற்கு பல வடிவமைப்பு பணிகளில் உதவியுள்ளீர்கள். தங்களது வடிவமைப்புகளையும் ஆன்டனின் வடிவமைப்புகளையும் நண்பர்களிடம் காட்டிப் பெருமை படுவேன். எனக்கு வடிவமைப்பு தேவை என்று அவர்களை நாடுகையில் உடன் அமர்ந்து கருத்து கூற வேண்டும் என்று கூறுவர். ஆனால், இது போன்ற எதுவுமின்றி நீங்கள் இருவரும் கச்சிதமான வடிவமைப்புகளைச் செய்துதந்தீர்கள். நன்றி.... :) மெச்சுகிறேன்! சூர்யபிரகாஷ் உரையாடுக 13:59, 5 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 18:15, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:43, 5 அக்டோபர் 2013 (UTC)
விருப்பம்--இரவி (பேச்சு) 03:57, 6 அக்டோபர் 2013 (UTC)
தீப ஒளித் திருநாளுக்கு ஓர் இலச்சினை?[தொகு]
தாரிக், தீப ஒளித் திருநாளைக் காட்டும் விதத்திலும் ஆலோயீனை நினைவூட்டும் வகையிலும் ஓர் இலச்சினை வடிவமைத்துத் தர இயலுமா? இன்று மாலைக்குள்? நான் ஆன்டனிடமும் கேட்கிறேன். நீங்கள் இருவரும் கலந்தாலோசித்துக் கூட வடிவமைக்கலாம். ஒரு 3 நாட்களுக்கு மட்டும் இடம்பெற வைக்க முயல்கிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 02:40, 1 நவம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி பதாகைகள்[தொகு]
தாரிக், கட்டுரைப் போட்டிப் பரப்புரைகளை முடுக்கி விட சில பதாகைகளை உருவாக்கித் தர முடியுமா? அன்டன், ஏற்கனவே சில பதாகைகளை உருவாக்கி வருகிறார். விவரங்களுக்கு, இங்கு வாருங்கள். நன்றி--இரவி (பேச்சு) 17:17, 20 நவம்பர் 2013 (UTC)
- வணக்கம் இரவி, விடுமுறை நிமித்தம் நாடு திரும்பியுள்ளதாலும் சில பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இணையத்தோடு இணைவதற்கான வாய்ப்புகள் அரிதாகின. மன்னிக்க வேண்டும், குறித்த கட்டுரைப் போட்டிக்கான பதாதைகளை வடிவமைப்பதற்கான அவகாசம் இதுவரையில் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். வடிவமைப்புகளைச் செய்வதற்கான வாய்ப்புக் கிட்டியதும் திட்டப்பக்கத்தில் இற்றைப் படுத்துகின்றேன். வெல்க! --தாரிக் அஸீஸ் உரையாடுக 02:55, 9 திசம்பர் 2013 (UTC)
பதக்க வடிவமைப்பு உதவி தேவை[தொகு]
தாரிக், 2013 தொடர் கட்டுரைப் போட்டியில் வாகை சூடியவர்களுக்கு அளிப்பதற்காக ஒரு சிறப்பு பதக்கம் (web badge போல) இருந்தால் நன்றாக இருக்கும். வடிவமைத்து உதவ முடியுமா? அன்டனிடமும் கேட்டு உள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:14, 25 சூன் 2014 (UTC)
- இரவி, குறித்த பதக்கத்தில் என்ன சொற்கள் அடங்கியிருக்க வேண்டுமென அறியத்தாருங்கள். நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 15:10, 26 சூன் 2014 (UTC)
- உதவ முன்வந்தமைக்கு நன்றி, தாரிக. வாகையாளர், கட்டுரைப் போட்டி 2013 ஆகிய சொற்கள் வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுச் சின்னம் / வழக்கமான சின்னம் உள்ளடங்கி இருக்கலாம். சின்னத்தை உள்ளிடுவது சிரமமாக இருந்தால் தமிழ் விக்கிப்பீடியா என்பதையும் எழுத்தில் இடலாம். --இரவி (பேச்சு) 12:00, 30 சூன் 2014 (UTC)
- இரவி, குறித்த சொற்கள் அடங்கலாக, பதக்கமொன்றை வடிவமைத்துள்ளேன். இங்கு அந்தப் பதக்கத்தைக் காண்க. நன்றி.
--தாரிக் அஸீஸ் உரையாடுக 08:03, 1 சூலை 2014 (UTC)
- தாரிக் அஸீஸ், இரவி அவர்களே வாகையாளர் என்ற சொல் இவ்வாறு கீழுள்ளவாறு இருந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:27, 2 சூலை 2014 (UTC)
- தாரிக் அஸீஸ், இரவி அவர்களே வாகையாளர் என்ற சொல் இவ்வாறு கீழுள்ளவாறு இருந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:27, 2 சூலை 2014 (UTC)
பதக்க வடிவமைப்புக்கு நன்றி, தாரிக். இணையத்தில் என் கண்ணில் பட்ட பதாகைளில் http://www.indiblogger.in/iba/img/edition-1/winners-badges/2971.png கண்ணைக் கவர்ந்தது. இன்னும் ஒரு வடிவமைப்பைச் செய்து தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:29, 1 சூலை 2014 (UTC)
தமிழ் விக்கிக்குக் கிடைத்துள்ள புதிய படக்கலைஞரின் கவனத்துக்கு :) - பயனர்:Manoj penworks--இரவி (பேச்சு) 22:44, 6 சூலை 2014 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]
வணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:22, 9 சூலை 2015 (UTC)