விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 • இங்கு அறிமுகப்படுத்தப்படும் பங்களிப்பாளர்கள் படத்தை படம் இருக்கும் அமைப்பைக் கொண்டு இடது, வலது என்று பிரிக்கலாம் என்பது என் கருத்து. படத்தில் வலதிலிருந்து இடது பக்கம் திரும்பியது போலிருந்தால் வலது புறம் அமைக்கலாம். இடதுபுறத்திலிருந்து வலது பக்கம் திரும்பியது போலிருந்தால் இடது புறம் அமைக்கலாம். உதாரணமாக சந்திரவதனா, மலாக்கா முத்துகிருஷ்ணன் படங்களை இடது புறத்துக்கு மாற்றலாம். நேராக உள்ள படங்கள் இடது, வலது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த அறிமுகம் மேல் பகுதியில் நடுவில் வருவதால் படத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு இடது, வலது தேர்வு செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். கே.எஸ்.பாலச்சந்திரன் படத்தைத் தற்சமயம் இடது புறத்திற்கு மாற்றி இருக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்துதான். பிறர் கருத்தையும் அறிந்து செயல்படுத்தலாம். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 11 சூலை 2011 (UTC)


நன்றிகள்# சயனொளிபவன் இராமகிருஷ்ணன்[தொகு]

என்னை பற்றி விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பகுதியில் இணைத்தமைக்கு நன்றிகள் . மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்தும் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியில் எனது பங்களிப்பை செய்வேன்

அடுத்த 4 பேர் சில யோசனைகள்[தொகு]

 1. எழுத்துப்பிழைகளை திருத்தும் ஒருவர் - என் பரிந்துரை - பிராஷ்
 2. புகைப்படங்களை தரவேற்றும் ஒருவர் - என் பரிந்துரை - அண்டன்
 3. பராமரிப்பு பணி செய்யும் ஒருவர் - என் பரிந்துரை - அண்டன்தமிழ்குரிசில்
 4. சிறப்பு நபர் ஒருவர் - என் பரிந்துரை - மதனாகரன்

எளிதாக பங்கலிக்க கூடிய வேறு சில பங்களிப்புகளையும் சேர்த்துக்/நீக்கிக் கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 24 சனவரி 2013 (UTC)

விலகிய பயனர்கள் குறித்த அறிமுகங்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து விலகிய பயனர்களின் அறிமுகங்களைப் பயன்படுத்துவது முறையாக இருக்காது என்ற வகையில், புன்னியாமீனின் அறிமுகத்தை பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன்.

Punniyameenkalai-thumb.jpg
பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கை எழுத்தாளர்கள், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், நடப்பு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதியும் வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

தள அறிவிப்பில் ஒரே நேரத்தில் பல பயனர்களின் படங்கள்[தொகு]

நாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறோம். நீங்களும் எழுதலாமே?

மேலே காண்பது போல் தள அறிவிப்பில் ஒரே நேரத்தில் பல பயனர் படங்களை இட்டு பங்களிப்பைக் கோரலாம் என்று எண்ணுகிறேன். இது வாசிப்புக்கு இடையூறாக இருக்கும் என்று தோன்றுகிறதா? இன்னும் வேறு வகையில் அழகூட்ட முடியுமா? இல்லை, காணாமல் போனவர் அறிவிப்பு போல் இருக்கிறதா :)? கருத்து தேவை--இரவி (பேச்சு) 13:30, 22 பெப்ரவரி 2013 (UTC)

புகைப்படங்கள் ஒரே அளவுகளில் இருப்பின் காண நன்றாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:49, 25 பெப்ரவரி 2013 (UTC)
பயனர்கள் வெவ்வேறு அளவுகள், பின்னணியில் குறைந்த நுணுக்கமே உள்ள படங்களைத் தந்துள்ளதால் பதாகை வடிவமைப்பைச் சீராகச் செய்ய முடியவில்லை. எனினும், இப்படி மாறுபட்டு இருப்பதே கூடுதல் அளவு வெற்றிடம் / white space தந்து ஒரு வகையான இயல்பான ஈர்ப்பைத் தருவது போல் தோன்றியது. படங்களை வெட்டி ஒட்டி சிறப்பாக வடிவமைக்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அன்டனின் உதவியை கோரிப் பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 15:58, 25 பெப்ரவரி 2013 (UTC)
நன்றாக இருக்கிறது. ஆனால் நீக்குக தொடுப்பைக் காணவில்லையே?--சோடாபாட்டில்உரையாடுக 17:05, 25 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி பாலா. இப்போது படங்களின் அளவையும் எண்ணிக்கையையும் மாற்றி உள்ளேன். நீக்குக இணைப்பு தென்படும் என்று நம்புகிறேன்--இரவி (பேச்சு) 10:13, 26 பெப்ரவரி 2013 (UTC)

வடிவமைப்பு[தொகு]

இரவி கேட்டுக் கொண்டதற்கிணங்க சில வடிவமைப்புக்களைச் செய்திருந்தேன். அவற்றை உங்கள் கருத்திற்காக இங்கு காட்சிப்படுத்துகினடறேன். --Anton (பேச்சு) 10:19, 26 பெப்ரவரி 2013 (UTC)

Ta user banner001.jpg

Ta user banner002.jpg

Ta user banner003.jpg

Ta user banner004.jpg

Ta user banner005.jpg

அன்டன், படங்களை வடிவமைத்துப் பதிவேற்றியதற்கு நன்றி. முதல் 3 வடிவமைப்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. எழுத்துக்களுடன் நிழல் வடிவம் இல்லாவிட்டால் படிக்க இலகுவாக இருக்கும். பின்னணி வண்ணங்கள் இலேசாகவும் உலகாளவிய விக்கிமீடியா பதாகைகள் வடிவமைப்புக்கு ஏற்பவும் இருந்தால் நன்றாக இருக்கும். பங்களிப்பாளர் படத்துடன் அவர்கள் துறை தொடர்பான படமும் இடம்பெற்றால் நன்றாக இருக்குமா? எடுத்துக்காட்டுக்கு, கார்த்திக் பாலா விலங்குகள், பறவைகள் பற்றி எழுதக்கூடியவர். பதாகையில் அவை குறித்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் இருந்தால் வடிவமைப்பு இன்னும் கவர்ச்சியாக இருக்குமா? மற்ற பயனர்களின் கருத்துகளையும் உள்வாங்கி உரிய மாற்றங்களைச் செய்து அடுத்த சுற்று தள அறிவிப்பில் பயன்படுத்துவோம்.--இரவி (பேச்சு) 09:35, 3 மார்ச் 2013 (UTC)
இரண்டு மற்றும் மூன்றாவது வடிவமைப்புகள் மிகவும் அருமையாக உள்ளது. ஹிபாயத்துல்லா நண்பரின் புகைப்படம் மிகக்குறைவான தரத்துடன் உள்ளமை குறையாக தோன்றுகிறது. அதிக எண்ணிக்கையில் பங்களிப்பார்களின் புகைப்படங்களை காட்டாமல், ஒருவரின் தனித்த செயல்பாடுகளையும், பங்களிப்பையும் வெளிப்படுத்தும் இம்முறை மற்றவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்குமென நம்புகிறேன். இத்துடன் பங்களிப்பார் பெற்ற விருதுகளையும், பங்களிப்பின் சிறந்த பக்கத்தின் கட்டமைத்தலும் கூடுதல் கவனம் சேர்க்கும். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:04, 26 மார்ச் 2013 (UTC)

இரண்டாவது வடிவமைப்பு விரும்பத்தக்கது.--Aathavan jaffna (பேச்சு) 02:23, 6 ஏப்ரல் 2013 (UTC)

வடிவமைப்பு 2[தொகு]

Tamil wikipedians set 1 - color.jpg

Tamil wikipedians set 1 - mono.jpg

அன்டன், படங்களை வடிவமைத்துப் பதிவேற்றியதற்கு நன்றி. படம் ஏனோ ஒன்பது தலை இராவணன் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது :) தற்போது விக்கி நிரலை வைத்தே உருவாக்கியிருக்கும் ஒன்பது படிமப் பதாகை விளம்பரம் போல் இல்லாமல் விக்கி அறிவிப்பு போன்று தெளிவாக இருப்பதாக என் உறவினர் ஒருவர் கருத்து தெரிவித்தார். நாம் விக்கியிலேயே உழன்று கொண்டிருப்பதால் புறவயமாகப் பார்க்க இயலவில்லை. தற்போது தள அறிவிப்பில் வெவ்வேறு பதாகைகள் எத்தனைச் சொடுக்குகள் பெறுகின்றன என்று சோதித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முறையைப் பின்பற்றி நாம் வடிவமைக்கும் பதாகைகளையும் சோதித்துப் பார்த்தால் தரவு அடிப்படையில் முடிவெடுக்க முடியும்.

மொத்தமாக 9,10 முகங்களை இடாமல், பெண்கள், மூத்தவர்கள், இளையோர் என்று 3,4 படங்களை இட்டு மேலே உள்ளது போன்ற வாசகங்களுடன் வடிவமைத்தால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது--இரவி (பேச்சு) 09:35, 3 மார்ச் 2013 (UTC) 👍 விருப்பம்--Aathavan jaffna (பேச்சு) 02:25, 6 ஏப்ரல் 2013 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி இரவி. மற்றவர்களின் கருத்துக்களை அறிந்ததும் அடுத்த வடிவமைப்பை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.--Anton (பேச்சு) 14:31, 3 மார்ச் 2013 (UTC)


இரண்டு வகை வடிவமைப்புகளும் நன்றாக உள்ளன. முதல் தொகுதில் 3, 5 மிகச் சிறப்பாக உள்ளன. --Natkeeran (பேச்சு) 16:19, 3 மார்ச் 2013 (UTC)
வடிவமைப்புகள் மிக நன்றாக உள்ளன. ஆனால் இரவி குறிப்பிடுவது போல 9,10 பேரை ஒட்டு மொத்தமாக இடாமல் இரண்டிரண்டி பேராக அல்லது 3,4 பேராக இட்டால் நன்றாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 3 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--Aathavan jaffna (பேச்சு) 02:25, 6 ஏப்ரல் 2013 (UTC)

3,4 பங்களிப்பாளர்கள் இருப்பின் நன்றாக இருக்கும். அதற்கும் அதிகமானவர்கள் இருக்க வேண்டும் என்ற பிறர் கருதின், படஅளவை தற்போதுள்ள படஅளவில் முக்கால்பகுதிக்கு மிகாமல் இருந்தால், நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். விக்கிக் கட்டகம் விளம்பரங்களைத் தவிர்க்கிறது என்பதனை புதியவர்களுக்கு, நாம் நினைவுறுத்த வேண்டும். இது ஊக்குவிப்பாக அமைய வாழ்த்துக்கள். வணக்கம்.-- உழவன் +உரை.. 05:26, 5 மார்ச் 2013 (UTC)
ஒரே அளவிளான படங்கள் கூடுதல் அழகாக இருக்குமென நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை. அழைப்பு வாசகங்கள் இல்லாமயால் வெறுமையாக தோற்றம் அளிக்கின்றன. துறைவாரியாக பங்களிப்பார்களை இனம் கண்டு, அந்த துறைக்கு தகுந்தாற்போல வடிவமைப்பு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:57, 26 மார்ச் 2013 (UTC)

கருத்தும் வடிவமைப்பும்[தொகு]

வணக்கம். இரவி கேட்டதற்கிணங்க எனது கருத்துக்களையும் சில பதாகை வடிவமைப்பு எண்ணக்கருக்களையும் அதனடிப்படையில் நான் வடிவமைத்த சில பதாகை வடிவமைப்புகளையும் இங்கு தருகின்றேன். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவல்.

கருத்துக்களும் வடிவமைப்பு எண்ணக்கருக்களும்[தொகு]

0. பதாகையில் பயன்படுத்தப்பட்டுள்ள நிழற்படங்கள் ஒரே அளவில் இருப்பது சாலப் பொருந்தும். இது ஏற்கனவே கலந்துரையாடல்களில் சொல்லப்பட்டுள்ளது என்பதையும் கண்டேன்.

1. பதாகையில் அதிகளவான சொற்களைப் பயன்படுத்தாமல், பயனர் குறித்த பதாகையைச் சொடுக்கி, அடுத்த நிலையை அறிய ஆவலைத் தூண்டுகின்ற ஒரு சில சொற்களைப் பயன்படுத்தி உருவாக்குவது பொருத்தமாகவிருக்கும் இதன்படி, பயனரின், தளத்தோடான செயற்பாட்டு வினையை அதிகரிக்கச் செய்யலாம்.

எடுத்துக்காட்டாக,

 • "எங்களைப் போன்றே உங்கள் அறிவை உலகறியச் செய்யுங்கள்"
 • "இன்றே உங்கள் முதலாவது தொகுப்பு தொடங்கிடட்டும்.."
 • "உங்களைப் போன்றோரால் விக்கிப்பீடியா தோன்றியது! -- நீங்களும் பங்களிக்கலாம்"
 • "நீங்களும் விக்கிப்பீடியாவின் முழுமைக்கு வித்திடலாம்"
 • "நீங்கள் அறிந்தவைகளை, அகிலமே அறிந்திட ஆவல்"
 • "நான் ஏன் விக்கிப்பீடியாவை தொகுக்கிறேன்?" (விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர் ஒருவரின் படத்தோடு)
 • "நாங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறோம் -- நீங்களும் பங்களிக்கலாம்" (பொருத்தமான வகையில் ஒழுக்குபடுத்தப்பட்ட பங்களிப்பாளர்களின் படங்களோடு)
 • "நீங்கள் அறிந்தவைகளை அகிலமறிந்திடச் செய்யுங்கள்"

2. பதாகைகளில் பயன்படுத்தப்படும் நிறங்கள், தளத்தின் நிற அமைப்போடு ஒன்று சேர்ந்து செல்வது அழகியலைக் கூட்டுவதோடு பதாகையை தளத்திலிருந்து அந்நியமாக காட்டுவதையும் தவிர்க்கும். இதனால் பதாகைகளோடு பயனர்களின் செயற்பாடு அதிகரிக்க வாய்ப்புண்டு.

3. பாதாகை தாங்கி நிற்கும், சொற்களுக்கும் நிழற்படத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பதாகையின் மொத்த வடிவமைப்பையும் முன்னிருத்துவது அதிக பயனர்களையும் ஈர்க்கலாம். அவர்களின் பங்களிப்பையும் தூண்டலாம்.

4. பயனர் படத்தைக் கொண்ட பாதாகைகள், தன்மையாக பயனர்களை விழிப்பது போன்று அமைந்திருப்பது அதிகமான பயனர்களின் பங்களிக்கத் தூண்டலாம். சிறந்த எடுத்துக் காட்டு அன்டன் வடிவமைத்துள்ள இந்தப் பதாகை http://ta.wikipedia.org/s/2n6m (இதில் நான் என்று பயனரை நோக்கி பங்களிப்பாளர் விழிப்பதாய் அற்புதமாக அமைந்துள்ளது)

பதாகைகள்[தொகு]

Contributors-banner-single.jpg

Contributors-banner-group.jpg

நான் மேல் குறிப்பிட்ட எனது வடிவமைப்பு எண்ணக்கருக்களுக்கு ஒப்ப இரண்டு பதாகைகளை வடிவமைத்து மேலே இணைத்துள்ளேன். தங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவல். நன்றி. :) --தாரிக் அஸீஸ்  உரையாடுக  21:15, 10 மார்ச் 2013 (UTC)

தேன்கூடு போன்ற வடிவமைப்பு மிக அழகாக உள்ளது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:50, 26 மார்ச் 2013 (UTC)
தாரிக், வடிவமைப்பு குறித்து நீங்கள் கூறியுள்ள நான்கு கருத்துகளுமே முக்கியமானவை. //நீங்கள் அறிந்தவைகளை, அகிலமே அறிந்திட ஆவல்// போன்றவை பொத்தாம் பொதுவான கோசங்களாகத் தோன்றுகின்றன. அதற்குப் பதிலாக, "நான் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறேன் / படங்களைப் பதிவேற்றுகிறேன். நீங்களும் எழுதலாம் / படங்களைச் சேர்க்கலாம்" என்பது போன்ற தெளிவான வினைகளைக் குறிப்பிட்டு எழுதுவது உதவும் என்று நம்புகிறேன். சுந்தரை வைத்து நீங்கள் செய்துள்ள பதாகை மிக அருமை. அதில், பங்களிக்கிறேன் என்பதற்குப் பதிலாக எழுதுகிறேன் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பங்களிப்பாளர்களிடம் இருந்து ஒரே அளவிலான படிமங்களைப் பெற முயல்வோம். வேண்டிய பிக்சல், நுணுக்கத்தின் அளவு பற்றி தெரிவித்தீர்கள் என்றால் பயனர்களிடம் கோரலாம்.--இரவி (பேச்சு) 15:03, 29 மார்ச் 2013 (UTC)
இரவி, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நானும் பொதுமைப்பாடான சுலோகங்கள் தவிர்த்து "எழுதுகிறேன்" என தெளிவாகச் சொல்வதாய் அமைகின்ற நிலைகளைக் கொண்ட சொற்சுலோகங்களை பதாகைகளில் பயன்படுத்துவது பொருத்தமானது என்கின்ற கருத்தை ஏற்கின்றேன். சுந்தர் உள்ள பதாகையை "எழுதுகிறேன்" என மாற்றி பதிவேற்றியுள்ளேன். கீழே அதனைக் காணலாம்.
Contributors-banner-single-updated.jpg
Contributors-banner-group-updated.png
பயனர்களால் ஏதாவது ஒரு நிறத்தில் அமைந்த (வெளிச்சமான நிறம் விருப்பத்திற்குரியது) பின்னணி கொண்ட நிலையில் அவர்கள் இருக்கும் நிழற்படங்களை தர முடிந்தால் இந்த வகையான பதாகைகளை எழில் சேர்த்து வடிவாக்கம் செய்யலாம். குறைந்தது 800 px x 600px அளவுடைய நிழற்படங்களை பயனர்கள் வழங்கினால் உசிதமாகவிருக்கும். கூடியது 3000px களைத் தாண்டியும் செல்லலாம். பின்னணி ஒரே நிறத்தில் இருந்தால் அதனை அகற்றல் சுலபமாக இருக்கும் என்பதோடு, சுலோகங்களினதும் பதாகையினதும் அமைவிற்கேற்ப பின்னணியையும் அதன் நிறங்களையும் ஏற்புடையதாக மாற்றவும் முடியும் என நம்புகிறேன். --தாரிக் அஸீஸ்  உரையாடுக  20:39, 3 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி, தாரிக். இன்னும் சில பயனர்களிடம் இருந்து நீங்கள் கோரியபடி படங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, அன்டனும் நீங்களும் வடிவமைத்த பதாகைகளைக் கொண்டு அடுத்த கட்ட அறிவிப்புகளை வெளியிடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:02, 5 ஏப்ரல் 2013 (UTC)