பண்ணந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணந்தூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,066
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635123

பண்ணந்தூர் (Pannandur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், போச்சம்பள்ளி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] ஊரின் வடக்குப் பகுதியில் தென்பெண்ணை ஆறு பாய்கிறது. ஊரின் தெற்கே ஏரி ஒன்று காணப்படுகிறது. இதனால் இந்த ஊர் ஊரைச்சுற்றி புசமையான வயல்வெளிகள் நிறைந்து செழிப்பு மிக்கதாக உள்ளது.

ஊர் பெயர் வரலாறு[தொகு]

இந்த ஊரில் கிளையுள்ள பனை மரம் உள்ளது. இந்தப் பனைமரம் உள்ளதாலேயே இந்த ஊர் பண்ணந்தூர் என அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.[2]

ஊரின் சிறப்புகள்[தொகு]

இந்த ஊரில் சென்னகேசவ பெருமாள் கோயில், திருக்கல்யாண ஈசுவரர் கோயில் ஆகிய பழமையான கோயில்கள் உள்ளன. மேலும் பிற்காலத்திய சுப்பிரமணியர் கோயில், பிள்ளையார் கோயில் ஆஞ்சநேயர் கோயில் போன்றவை உள்ளன. மேலும் இந்த ஊரில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த ஒரு மகானின் ஜீவசமாதி ஊர் குடியிருப்பின் நடுவில் காணப்படுகிறது.

இந்த ஊருக்கு வெளியே ஏரிக்கு அருகில் கொக்குக் கல் என்ற கல் உள்ளது. அதை ஊர்மக்கள் கொக்கு கல் என்று அழைக்கின்றனர். அதன்மீது கொக்குகள் அமருமாதலால் இப்பெர் பெற்றது. அந்தக் கல்லில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதைப்படித்தால் தலை வெடித்துவிடும் என்று ஊர்மக்கள் நம்புகின்றனர்.[3]

அமைவிடம்[தொகு]

காவேரிபட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது காவேரிப்பட்டணத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள்வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1026 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4066 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2078, பெண்களின் எண்ணிக்கை 1988 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 68.9% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[4]

மேற்கோள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. "100 கிளைகளுடன் ஒரு பனைமரம்". கட்டுரை. தி இந்து தமிழ். 7 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 133-137. 
  4. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Kaveripattinam/Pannandur
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணந்தூர்&oldid=3662326" இலிருந்து மீள்விக்கப்பட்டது