பண்ணந்தூர் திருக்கல்யாண ஈசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு திருக்கல்யாண ஈசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பண்ணந்தூர், போச்சம்பள்ளி வட்டம்
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:திருக்கல்யாண ஈசுவரர் கோயில்

பண்ணந்தூர் திருக்கல்யாண ஈசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது.[1]

கோயில் அமைப்பு[தொகு]

கருவறையில் சிவன் அம்மையோடு கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயிலின் முன்புறம் பழமையான நந்தி வகனம் உள்ளது.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் நாள் வழிபாடு இல்லை. காருவா, வெள்ளுவா போன்ற சிறப்பு நாட்களில் மட்டும் வழிபாடு நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 133-137.