நாகொண்டபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகொண்டபாளையம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635118

நாகொண்டபாளையம் (Nagondapalayam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது தளிகொத்தனூர் ஊராட்சி உட்பட்ட ஊராகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவிலும், தளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

ஊரின் சிறப்பு[தொகு]

இந்த ஊரில் ஒரே இடத்தில் 33 நடுகற்கள் உள்ளன. இந் ஊரில் உள்ள தொட்டவர்குடி (மூத்தவர் கோயில்) என்னும் கோயிலின் முன் வரிசையாக இந்த நடுகற்கள் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Nagondapalayam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. தி. சுப்பிரமணியன், நடுகற்கள் (கட்டுரை) பக்கம் 25, நடுகல் அகழ்வைப்பகம் (தருமபுரி கையேடு), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகொண்டபாளையம்&oldid=3657090" இலிருந்து மீள்விக்கப்பட்டது