ஜாகிர் காருப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாகிர் காருப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

ஜாகிர் காருப்பள்ளி ( Jagirkarupalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த, [1] கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊர் கெலமங்கலத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 54 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 317 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 393 வீடுகளும், மக்கள் தொகையானது 1905 ஆக உள்ளது. இதில் பெண்கள் விகிதம் 47.3% என்றும், மொத்த எழுத்தறிவு விகிதம் 54.9% ஆகும், இதில் பெண்களின் எழுத்தறிவு விகிதமானது 21.8% என்று உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்த்த நாள் 27 ஏப்ரல் 2017.
  2. "Jagirkarupalli". அறிமுகம். onefivenine.com. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகிர்_காருப்பள்ளி&oldid=2661947" இருந்து மீள்விக்கப்பட்டது