சோலி ஜாவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோலி ஜாவோ
Chloezhao.jpg
பிறப்புஜாவோ டிங்
31 மார்ச்சு 1982 (1982-03-31) (அகவை 39)
பெய்ஜிங், சீனா
தேசியம்சீனர்
பணிதிரைப்படத் தயாரிப்பு
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை
Chinese name
நவீன சீனம் 赵婷
பண்டைய சீனம் 趙婷

சோலி ஜாவோ (31 மார்ச்சு 1982 ) என்பவர் சீன நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் அமெரிக்கா நாட்டு சுயாதீனத் திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.

இவர் 2015 ஆம் ஆண்டு 'சாங்ஸ் மை பிரோதெரஸ் தனுக்ஹ்ட் மீ' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு 'தி ரீடர்'[1] என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான சுதந்திர ஸ்பிரிட் விருதுக்கு பரிந்துரைகளைப் பெற்றார். 2020 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'நோமட்லேண்ட்' என்ற திரைப்படத்திற்காக அகாதமி விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.[2][3]

இவரின் அடுத்த படம் எட்டெர்னல்சு[4] என்ற மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படமாகும். இந்த படத்தை இவரே எழுதி இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் திரைப்படத் தொகுப்பாளர் மேற்கோள்
2015 சாங்ஸ் மை பிரோதெரஸ் தனுக்ஹ்ட் மீ ஆம் ஆம் ஆம் ஆம் [5]
2017 தி ரீடர் ஆம் ஆம் ஆம் இல்லை [6][7]
2020 நோமட்லேண்ட் ஆம் ஆம் ஆம் ஆம் [8]
2021 எட்டெர்னல்சு ஆம் ஆம் இல்லை இல்லை [9]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலி_ஜாவோ&oldid=3158760" இருந்து மீள்விக்கப்பட்டது