உள்ளடக்கத்துக்குச் செல்

அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Spanish name 2

அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ
2014இல் இன்யாரித்தோ
பிறப்புஆகத்து 15, 1963 (1963-08-15) (அகவை 60)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
மற்ற பெயர்கள்அலெக்சாந்த்ரோ ஜி. இன்யாரித்தோ
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–நடப்பில்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
வாழ்க்கைத்
துணை
மாரியா எலாடியா ஹேகர்மேன்
பிள்ளைகள்2
கையொப்பம்

அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ (Alejandro González Iñárritu,எசுப்பானிய ஒலிப்பு: [aleˈxandɾo gonˈsales iˈɲaritu]; 2014 முதல் பட்டியல்களில் அலெக்சாந்த்ரோ ஜி. இன்யாரித்தோ; பிறப்பு: ஆகத்து 15, 1963) மெக்சிக்கோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னாள் இசையமைப்பாளர் ஆவார். 2007ஆம் ஆண்டு வெளியான பாபெல் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுக்காகவும் இயக்குநர்களின் சங்கத்தின் மிகச்சிறந்த இயக்குநருக்கான அமெரிக்க விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்; இப்பெருமை பெற்ற முதல் மெக்சிக்கோ நாட்டு இயக்குநராக உள்ளார். கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற முதல் மெக்சிக்கோவினராகவும் உள்ளார்.

இவரது ஆறு திரைப்படங்களுமே—அமோரெசு பெர்ரோசு (2000), 21 கிராம்சு (2003), பாபெல் (2006), பியூட்டிபுல் (2010), பேர்ட்மேன் (2014), மற்றும் தி ரெவெனன்ட் (2015)—அகாதெமி விருதுக்கானப் பரிந்துரைகள் உட்பட சிறந்த விமரிசனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. பேர்ட்மேன் திரைப்படத்திற்காக அகாதமியின் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்றுள்ளார்.