தாவீது லீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்
தாவீது லீன்
Lean-in-Joensuu-1965 CROPPED.jpg
லீன் 1965இல்
பிறப்புமார்ச்சு 25, 1908(1908-03-25)
குரோய்டன், சர்ரே, இங்கிலாந்து
இறப்பு16 ஏப்ரல் 1991(1991-04-16) (அகவை 83)
லைம்ஹவுஸ், லண்டன், இங்கிலாந்து
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், எடிட்டர்
செயற்பாட்டுக்
காலம்
1942–1991
வாழ்க்கைத்
துணை
இசபெல் லீன்
(தி. 1930; ம.மு. 1936)

கே வால்ஷ்
(தி. 1940; ம.மு. 1949)

அன் டோட்
(தி. 1949; ம.மு. 1957)

லெயிலா மட்கர்
(தி. 1960; ம.மு. 1978)

சாண்ட்ரா ஹோட்ஸ்
(தி. 1981; ம.மு. 1984)

சாண்ட்ரா குக்
(தி. 1990; இவரது இறப்பு 1991)
பிள்ளைகள்1

சர் தாவீது லீன் என்பவர் ஒரு ஆங்கிலேய திரைப்பட இயக்குனர் ஆவார். மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவராக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார். த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் (1957), லாரன்ஸ் ஆப் அரேபியா (1962), டாக்டர் சிவாகோ (1965) மற்றும் எ பேசேஜ் டு இந்தியா (1984) போன்ற காவிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.[1]

2002ஆம் ஆண்டு பிரித்தானிய திரைப்பட நிறுவனத்தால் எக்காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒன்பதாவது நபராக வாக்களிக்கப்பட்டுள்ளார். அகாதமி விருதுக்கு ஏழு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் மற்றும் லாரன்ஸ் ஆப் அரேபியா ஆகிய படங்களுக்காக இரண்டு முறை சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதை வென்றுள்ளார். பிரித்தானிய திரைப்பட நிறுவனத்தின் சிறந்த 100 பிரித்தானிய திரைப்படங்களின் பட்டியலில் இவர் இயக்கிய ஏழு படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் ஐந்து படங்களில் மூன்று சிறந்த படங்கள் இவர் இயக்கியவையாகும். 1990 ஆண்டு அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இவர் 25 மார்ச் 1908ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சர்ரே மாகாணத்தில் பிறந்தார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_லீன்&oldid=3349439" இருந்து மீள்விக்கப்பட்டது