பிரான்சிஸ் போர்டு கபேல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரான்சிஸ் போர்ட் கப்போலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரான்சிஸ் ஃபோர்ட் கபேலெ (Francis Ford Coppola (/ˈkɒpələ/,[1][2][3] Italian: [ˈkɔppola]; ə /, [4] Italian:   ; பிறப்பு ஏப்ரல் 7, 1939) ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இசையமைப்பாளர் ஆவார் . 1960 கள் மற்றும் 1970 களின் புதிய ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு இயக்க காலத்தில் இவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [5]

1969 ஆம் ஆண்டில் தி ரெய்ன் பீப்பிள் திரைப்படத்தினை இயக்கிய பிறகு, கபேலா பேட்டன் (1970) திரைப்படத்தினை இணைந்து எட்மண்ட் எச். நார்த் உடன் இணைந்து திரைக்கதை எழுதினார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருதைப் பெற்றார் . 1972 ஆம் ஆண்டில் வெளியான தி காட்பாதர் திரைப்படத்தினைத் தயாரித்தன் மூலமாக சிறந்த தயாரிப்பாளராக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படம் குண்டர்கள் தொடர்பான திரைப்பட வரிசைகளின் மைல்கல்லாக உள்ளது.[6] இந்தத் திரைப்படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பார்ரடினைப் பெற்றது. இந்தத் திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளை வென்றது . சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகளைப் பெற்றது.

1974 ஆம் ஆண்டில் வெளிந்த காட்பாதர் பாகம்II, சிறந்த படத்திற்கான அகாதமி விருதை வென்றது. இதன்மூலம் ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சியான பாகம் விருது பெற்றது அதுவே முதல் முறையாகும்.இந்தத் திரைபப்டமும் மூன்று அகாதமி விருதுகளை வென்றது. சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் வென்றது. கொப்போலா இயக்கம் செய்து , தயாரித்து மற்றும் வசனம் எழுதிய தி கான்வர்சேசன் திரைப்படம் அதே ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஓர் விருதினை வென்றது. இவரது அடுத்த திரைப்படம் 1977 ஆம் ஆண்டு வெளியான அபோகாலிப்ஸ் நவ் அதிகமான நாட்கள் தயாரிப்புப் பணியில் இருந்தது .இந்த திரைப்படம் வியட்நாம் போரின் சித்தரிப்புக்காக பரவலாக பாராட்டைப் பெற்றது . மேலும் பாம் டி'ஓர் விருதினை வென்றது அந்த விருதை இரண்டு முறை வென்ற எட்டு திரைப்பட தயாரிப்பாளர்களில் கொப்போலா ஒருவராக ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கொப்போலா மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில் பிறந்தார். இவரின் தந்தை தந்தை கார்மைன் கொப்போலா (1910-1991), [7] டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழுவுடன் ஒரு புல்லாங்குழல் வாசிப்பாளராக இருந்தார். தாய் இத்தாலியா கொப்போலா (நீ பென்னினோ; 1912-2004) ஆவார். அவரது மூத்த சகோதரர் ஆகஸ்ட் கொப்போலா, அவரது தங்கை நடிகை தாலியா ஷைர் . புலம்பெயர்ந்த இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த இவரது தந்தைவழி தாத்தாக்கள் பசிலிக்காடாவின் பெர்னால்டாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர். இவரது தாய்வழி தாத்தா, பிரபல இத்தாலிய இசையமைப்பாளர் பிரான்செஸ்கோ பென்னினோ ஆவார். இவர் இத்தாலியின் நாபொலியில் இருந்து குடிபெயர்ந்தார். [8]

விருது[தொகு]

1972 ஆம் ஆண்டில் வெளியான தி காட்பாதர் திரைப்படத்தினைத் தயாரித்தன் மூலமாக சிறந்த தயாரிப்பாளராக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படம் குண்டர்கள் தொடர்பான திரைப்பட வரிசைகளின் மைல்கல்லாக உள்ளது.[6] இந்தத் திரைப்படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பார்ரடினைப் பெற்றது. இந்தத் திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளை வென்றது . சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகளைப் பெற்றது.

சான்றுகள்[தொகு]