சொகைல் தன்வீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொகைல் தன்வீர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சொகைல் தன்வீர்
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு-மிதம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 188)22 நவம்பர் 2007 எ. இந்தியா
கடைசித் தேர்வு30 நவம்பர் 2007 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 158)18 அக்டோபர் 2007 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாப23 ஜனவரி 2011 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்33
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007/08பெடரல் ஏரியா துடுப்பாட்ட அணி
2007/08 –கான் ஆய்வு கூட அணி
2004/05-2006/07ராவல்பிண்டி துடுப்பாட்ட அணி
2008 –ராஜஸ்தான் ரோயல் (squad no. 8)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் இ20
ஆட்டங்கள் 2 31 46 15
ஓட்டங்கள் 17 182 227 29
மட்டையாட்ட சராசரி 5.66 14.00 12.61 7.25
100கள்/50கள் 0/0 0/1 0/0 0\0
அதியுயர் ஓட்டம் 13 59 38 12
வீசிய பந்துகள் 504 1,542 901 306
வீழ்த்தல்கள் 5 44 47 11
பந்துவீச்சு சராசரி 63.20 28.90 22.85 33.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 n/a
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/83 5/48 6/14 3/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 8/– 15/&ndash 3/&ndash

சொகைல் தன்வீர் (Sohail Tanvir, உருது: سہیل تنویر, பிறப்பு: டிசம்பர் 12, 1984)[1] பாக்கிஸ்தான் ராவல்பிண்டி இல் பிறந்த இவர் சகலதுறை ஆட்டக்காரர். இவர் ஃபெடரல் எரியாஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், கராச்சி கிங்ஸ், லயன்ஸ், முல்தான் சுல்தான் , ராவல்பிண்டி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையடிவருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.[1] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம் - இந்தியா[தொகு]

2007  ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியாவில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 22  இல் புது தில்லியில்  நடைபெற்ற இந்தியத்   துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 16   பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 24 ஓவர்கள் வீசி 83 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசி ராகுல் திராவிட், ஹர்பஜன் சிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 23 பந்துகளில் 13  ஓட்டங்கள் எடுத்து ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 12 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2] 2007  ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியாவில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர்  30  இல் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 7   பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் அனில் கும்ப்ளேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 39 ஓவர்கள் வீசி 166 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசி ஜாஃபர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில்  பந்துவீச்சில் 9 ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[3]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

2007  ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 18 இல் லாகூரில்  நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1]  இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 52 ஓட்டஙகளை வீட்டுக் கொடுத்து 1 இலக்கினை வீழ்த்தினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். பின் துடுப்பட்டத்தில் 17 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார். இதில் 1 நான்கும், 2 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் தென்னப்பிரிக்க அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4] 2014  ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில்   சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 17  இல் அபுதாபியில்  நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது  ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்  போட்டியில் இவர் விளையாடினார்.  இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 75 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து 1 இலக்கினை வீழ்த்தினார். பின் துடுப்பட்டத்தில் 12 பந்துகளில் 11 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Sohail Tanvir", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  2. "1st Test, Pakistan tour of India at Delhi, Nov 22-26 2007 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  3. "2nd Test, Pakistan tour of India at Kolkata, Nov 30-Dec 4 2007 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  4. "1st ODI (D/N), South Africa tour of Pakistan at Lahore, Oct 18 2007 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  5. "4th ODI (D/N), New Zealand tour of United Arab Emirates at Abu Dhabi, Dec 17 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25

வெளியினைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொகைல்_தன்வீர்&oldid=3316494" இலிருந்து மீள்விக்கப்பட்டது