சையோர்னிசு
சையோர்னிசு | |
---|---|
சையோர்னிசு ரூபிகுலோய்ட்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சைனோரிசு பிளைத், 1843
|
மாதிரி இனம் | |
சையோர்னிசு ரூபிகுலோய்ட்சு[1] விகோர்சு, 1831 | |
வேறு பெயர்கள் | |
ரைனோமையாசு சார்ப்பி, 1879 |
சையோர்னிசு (Cyornis) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள பறவைகளின் பேரினமாகும். இவற்றில் பெரும்பாலானவை தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
வகைப்பாட்டியல்[தொகு]
1843ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் எட்வர்ட் பிளைத் என்பவரால் சையோர்னிசு பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இப்பேரினத்தில் மூன்று சிற்றினங்களைப் பட்டியலிட்டார். ஆனால் மாதிரி இனம் எது எனக் குறிப்பிடப்படவில்லை.[2] மாதிரி இனம் பின்னர் 1855-ல் ஜார்ஜ் கிரே என்பவரால் போனிகுரா ரூபெகுலோயிட்சு (நீலத் தொண்டை நீல ஈப்பிடிப்பான்) விகோர்சு, 1831, நியமிக்கப்பட்டது.[3][4] பேரினப் பெயர் பண்டைய கிரேக்க குவானோசு அதாவது "அடர்-நீலம்" மற்றும் "பறவை" என்று பொருள்படும் ஆர்னிசு ஆகியவற்றை இணைத்துப் பொருள்படும் வகையில் உள்ளது.[5]
சிற்றினங்கள்[தொகு]
இந்த பேரினத்தில் பின்வரும் 32 சிற்றினங்கள் உள்ளன:[6]
- வெளிர் நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு யூனிகலர் )
- சீனா நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு கிளௌசிகோமன்சு) சில சமயங்களில் சைனோரிசு ரூபெகுலோயிட்சின் துணையினமாகக் கருதப்படுகிறது[7]
- நீலத் தொண்டை நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு ரூபெகுலோயிட்சு)
- கைனன் நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு கைனானசு)
- போர்னிய நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு சூப்பர் பஸ் )
- மலேசிய நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு டர்கோசஸ் )
- பலவான் நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு லெம்ப்ரியரி )
- சுந்தா நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு கேருலடஸ் )
- நீல மார்பு ஈப்பிடிப்பான் (சைனோரிசு ஹெரியோட்டி )
- செம்பழுப்பு மார்பு நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு கேமரினென்சிசு) - சை. கெரியோட்டியிலிருந்து பிரிக்கப்பட்டது
- பிலிப்பீன்சு வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு ரூபிகாடா )
- சுலு வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு ஓகுலரிசு) சில சமயங்களில் சைனோரிசு ரூபிகாடாவின் துணையினமாகக் கருதப்படுகிறது[8]
- குரோக்கர் வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு ரூபிகிரிசுசா) சில சமயங்களில் சைனோரிசு ரூபிகாடாவின் கிளையினமாகக் கருதப்படுகிறது [8]
- வெள்ளை வயிறு நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு பாலிடிப்சு)
- பழுப்பு-மார்பு காட்டில் பறக்கும் பறவை (சைனோரிசு புருனேட்டசு)
- நிக்கோபார் காட்டு ஈப்பிடிப்பான் (சைனோரிசு நிகோபரிகசு)
- சாம்பல்-மார்பு வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு அம்புரேடிலசு)
- பெரிய நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு மேக்னிரோசுட்ரிசு)
- டிக்கெல்லின் நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு டிகெல்லியே )
- இந்தோசீனா நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு சுமட்ரென்சிஸ் )
- மலை நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு வைட்டி)
- அலையாத்திக் காட்டு நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு ரூபிகாசுட்ரா)
- சுலாவெசி நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு ஓமிசசு) - தனஹ்ஜம்பியா நீல ஈப்பிடிப்பான் ஒரு துணையினமாக அடங்கும்
- கலோ நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு கலாயென்சிசு) - சி. ரூபிகாசுட்ராவிலிருந்து பிரிந்தது
- சாவகம் நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு பன்யுமாசு)
- தயாக் நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு மாண்டனசு) சில சமயங்களில் சைனோரிசு பான்யூமாசு[8] துணையினமாகக் கருதப்படுகிறது.
- மீரட்டசு நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு கடயாங்கென்சிசு) - 2021-ல் விவரிக்கப்பட்டது
- வெளிர் கண்ண நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு போலியோஜெனிசு)
- செம்பழுப்பு-மார்பு வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு ஒலிவேசியசு)
- பாங்காய் வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு பெலிங்கென்சிசு)
- சுலா வன ஈப்பிடிப்பான் (சைனோரிசு கொலோனசு)
- உருக்க்சு நீல ஈப்பிடிப்பான் (சைனோரிசு ரூக்கி)
மேலே உள்ளவற்றில் ஏழு சிற்றினங்கள், அவற்றின் ஆங்கிலப் பெயர்களில் "வன ஈப்பிடிப்பான்" என்பதுடன், முன்பு ரைனோமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டன. ஆனால் 2010ஆம் ஆண்டு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோர்னிசுக்கு மாற்றப்பட்டன.[9] வாரில்லா பேரினத்தில் "வன ஈப்பிடிப்பான்கள்" உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Muscicapidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Edward Blyth (1843). "Mr. Blyth's monthly Report for December Meeting, 1842, with Addenda subsequently appended". Journal of the Asiatic Society of Bengal 12 (143): 925–1011 [940-941]. https://www.biodiversitylibrary.org/page/40060929.
- ↑ George Robert Gray (1855). Catalogue of the Genera and Subgenera of Birds Contained in the British Museum. https://www.biodiversitylibrary.org/page/17136692.
- ↑ Check-List of Birds of the World. 11. 1986. https://www.biodiversitylibrary.org/page/14484056.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. https://archive.org/stream/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling#page/n129/mode/1up.
- ↑ "Chats, Old World flycatchers". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. January 2023. பார்க்கப்பட்ட நாள் 4 February 2023.
- ↑ Clement, P.. "Blue-throated Blue-flycatcher (Cyornis rubeculoides)". in del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J. et al.. Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. http://www.hbw.com/node/59094. பார்த்த நாள்: 4 June 2016.(subscription required)
- ↑ 8.0 8.1 8.2 "Species Updates – IOC World Bird List".
{{cite web}}
:|access-date=
requires|url=
(help); Missing or empty|url=
(help) - ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatcher reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044.
மேலும் படிக்க[தொகு]
- Del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-96553-06-XISBN 84-96553-06-X.
- Robinson HC and NB Kinnear (1928). "Notes on the Genus Cyornis Blyth". Novitates Zoologicae 34: 231–261. https://archive.org/stream/novitateszoologi34lond#page/237/mode/1up/.