வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான்
வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் | |
---|---|
தில்லி தாண்டெலி நீர்த் தொட்டி ஒன்றில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சைனோரிசு
|
இனம்: | சை. பாலிதிபிசு
|
இருசொற் பெயரீடு | |
சைனோரிசு பாலிதெபிசு (ஜெர்டன், 1840) | |
வேறு பெயர்கள் | |
சைனோரிசு பாலிபெசு |
வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் ( White-bellied blue flycatcher ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தின் ஒரு சிறிய பறவையாகும். இது தென்மேற்கு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (நீலகிரி உட்பட) வாழும் அகணிய உயிரி ஆகும். ஆண் பறவைகளின் உடலின் வயிறு நீங்கிய பிற பகுதிகள் நீலமாகவும் வயிறு மட்டும் சாம்பல் கலந்த வெண்மையாக இருக்கும். பெண் பறவைகளின் மார்பு சாம்பல் தோய்ந்த வெண்மையாகவும், முகம் வெள்ளையாகவும், உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த ஆலிவ் பழுப்பாகவும் இருக்கும்.
விளக்கம்
[தொகு]இந்த ஈபிடிப்பான் சுமார் 13 சென்டிமீட்டர்கள் (5.1 அங்) நீளமும், நீளமான அலகும் கொண்டது. இது அடர்ந்த காடுகளின் நிழலில் தாழ்வான புதர்களிடையே உணவு தேடுகிறது. சிறு கிளைகளில் அமர்ந்து பூச்சிகளைத் தொடர்ந்து மறந்து பிடித்து மீண்டும் வேறொரு கிளையில் வந்து அமரும். ஆண் பறவை பொதுவாக கருநீல ஊதா நிறத்தில் இருக்கும். புருவம் நெற்றி போன்றவை கடல் நீல நீல நிறம். கண்-அலகு இடைப்பகுதியும், முகமும் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிறு வெண்மையானது. பெண் பறவையில் உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த ஆலிவ் பழுப்பாக இருக்கும். தொண்டை ஆரஞ்சு செம்பழுப்பாகவும் மார்பும் வயிறும் சாம்ல் தோய்ந்த வெண்மையாகவும் வால் கருஞ்சிவப்புப் புற இறகுகளோடு பழுப்பு நிறமாகவும் இருக்கும். இதற்கு கருப்பு வெள்ளை வால் அமைப்பு இல்லாதது மற்ற ஈபிடிப்பான் பறவைகளிடமிருந்து வேறுபடுத்தி அறியதக்கதாக உள்ளது. குறைந்த வெளிச்சத்தில் பழனி மலைகளில் காணும்போது குட்டை இறக்கையனுடன் சேர்த்துக் குழப்பமேற்படலாம். [2] [3] [4] [5]
பரவல்
[தொகு]வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் பறவையானது, அடர்ந்த காடுகளிலும், சோலைக்காடுகளிலும் மகாபலீசுவரிலிருந்து [6] தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக நீலகிரி மற்றும் பிலிகிரிரங்கன் மலைகள் வரை பரவி, [7] தென் தமிழ்நாடு மற்றும் கேரளா வரை பரவியுள்ளது. இது முக்கியமாக நீலகிரியில் மலையடிவாரத்திலிருந்து சுமார் 1700 மீ வரையிலான மலைக்காடுகளில் காணப்படுகிறது.
நடத்தையும் சூழலியலும்
[தொகு]வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் அமைதியாகவும், பரபரப்பற்றதாகவும் இருக்கும், முக்கியமாக வன விதானத்திற்குக் கீழே இருண்ட நிழலில் உணவு தேடுகிறது. [8] நெருக்கத்தில் மட்டும் கேட்கக்கூடிய பாடல் ஒலியை எழுப்புகின்றன. இவை பொதுவாக தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகின்றன, மேலும் இவை பெரும்பாலும் இரைதேடும் பிற பறவைப் பட்டாளங்களோடு சேர்ந்து உணவு தேடும்.
இதன் இனப்பெருக்க காலம் பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை, குறிப்பாக பருவமழைக் காலத்தின் போது ஆகும். வேர், புல், மரக்காளான் முதலியவற்றால் பாசியினைப் புறத்தில் வைத்து பெரும் போக்காகக் கோப்பை வடிவான கூடு அமைக்கும். காய்ந்து போன பெரிய மரங்களில் காணப்படும் பொந்துகளிலோ ஆழ்ந்த புதர்களிலோ கூடுகளைக் காண இயலும். பொதுவாக நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் கடல் பச்சை நிறமாக சாக்லெட் பழுப்பு கரும் பழுப்புக் கறைகளுடன் காட்சியளிக்கும். [3]
மேற்கோள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Cyornis pallidipes". IUCN Red List of Threatened Species 2017: e.T22709519A111056465. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709519A111056465.en. https://www.iucnredlist.org/species/22709519/111056465. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. p. 384.
- ↑ 3.0 3.1 Ali, S; S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. Volume 7. Oxford University Press.
- ↑ Oates, EW (1890). The Fauna of British India. Birds. Volume 2. Taylor and Francis. p. 22.
- ↑ Baker, ECS (1924). The Fauna of British India. Birds. Volume 2. Taylor and Francis.
- ↑ Ali, Salim (1951). "Extension of range of the White-bellied Blue Flycatcher (Muscicapula pallipes pallipes Jerdon)". J. Bombay Nat. Hist. Soc. 49 (4): 785. https://biodiversitylibrary.org/page/48182349.
- ↑ Srinivasan, U.; Prashanth, N.S. (2006). "Preferential routes of bird dispersal to the Western Ghats in India: An explanation for the avifaunal peculiarities of the Biligirirangan Hills". Indian Birds 2 (4): 114–119. http://www.indianbirds.in/pdfs/Preferential%20routes%20of%20bird%20dispersal%20to%20the%20Western%20Ghats%20in%20India.pdf.
- ↑ Shankar Raman; T. R. (2003). "Assessment of census techniques for interspecific comparisons of tropical rainforest bird densities: a field evaluation in the Western Ghats, India". Ibis 145: 9–21. doi:10.1046/j.1474-919X.2003.00105.x.