வெளிர் நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைனன் நீல ஈப்பிடிப்பான்
ஆண் வெளிர் நீலா ஈப்பிடிப்பான், அசாம், இந்தியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: முசிகபிடே
பேரினம்: சையோரினிசு
இனம்: சை. யூனிகலர்
இருசொற் பெயரீடு
சையோரினிசு யூனிகலர்
பிளைத், 1900
வேறு பெயர்கள் [2]

சையோரினிசு சையானோபோலிலா பிளைத், 1870

வெளிர் நீல ஈப்பிடிப்பான் (Pale blue flycatcher)(சையோரினிசு யூனிகலர்) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினத்தை முதன்முதலில் 1843-ல் எட்வர்ட் பிளைத் விவரித்தார் .

பரவல் & வாழிடம்[தொகு]

இது வங்கதேசம், பூட்டான், புருனே, கம்போடியா, சீனா, ஆங்காங், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[1]

இது மேலோட்டமாக தோற்றத்தில் நீலமேனி ஈப்பிடிபானைப் போன்றது. ஆனால் வெளிர் நீலம், தொண்டையிலிருந்து எச்சவாய் வரை சாம்பல் கலந்த அடிப்பகுதி மற்றும் ஒரு தொடர்ச்சியான கருப்பு கண் இணைப்பு மூலம் வேறுபடுகிறது. இரண்டு பறவைகளும் பெரும்பாலும் ஒரே இடத்தில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Cyornis unicolor". IUCN Red List of Threatened Species 2016: e.T22709532A94213374. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709532A94213374.en. https://www.iucnredlist.org/species/22709532/94213374. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Mlíkovský, Jiří (4 August 2011). "Nomenclatural notes on Cyornis and Rhinomyias flycatchers (Aves: Muscicapidae) of South-East Asia". Zootaxa 2985 (2985): 64–68. doi:10.11646/zootaxa.2985.1.5.