சூளகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூளகிரி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி மாவட்டம்
மொழிகள்
 • ஆட்சி மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635117
தொலைபேசி குறியீட்டெண்04344

சூளகிரி (Shoolagiri) (கன்னடத்தில்ಶೂಲಗಿರಿ) தமிழ் நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது சூளகிரி வட்டம் மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது.

சூளகிரி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஏழாம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூளகிரி, ஓசூரிலிருந்து 25 கிமீ, கிருஷ்ணகிரியிலிருந்து 27 கிமீ தொலைவிலும் உள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

இவ்வூர் சூலகிரி என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இம்மலை பார்ப்பதற்கு மூன்று முகடுகளுடன் திரிசூலம்போல் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. இம்மலையின் பெயரே இவ்வூருக்கு பெயரானது ஆனால் சூளகிரி என்று பிழையாக எழுதப்பட்டுவருகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூளகிரி&oldid=2780127" இருந்து மீள்விக்கப்பட்டது