பயனர் பேச்சு:Ravidreams: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 178: வரிசை 178:
==கட்டுரைப்போட்டி==
==கட்டுரைப்போட்டி==
கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 12:48, 31 சனவரி 2014 (UTC)
கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 12:48, 31 சனவரி 2014 (UTC)

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--[[பயனர்:L.Shriheeran|யாழ்ஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 12:52, 31 சனவரி 2014 (UTC)

12:52, 31 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

அடுத்த சில மாதங்களுக்கு இப்பயனர் விட்டு விட்டு தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் கட்டாய விக்கி விடுப்புகளில் இருப்பார். இந்த விடுமுறைக் காலங்களில் இவரைத் தொடர்பு கொள்ள ravidreams at gmail dot com க்கு எழுதலாம்.
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8 9

நன்றி

--நந்தகுமார் (பேச்சு) 08:34, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரை செய்ததற்கு மிக்க நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 14:29, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பயனராகப் பரிந்துரைத்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:32, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உதவி

கவனிக்க:

கருத்து நீக்கம்

கைப்பாவைக் கருத்துக்களுடன் தேனீயின் கருத்துக்களையும் நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. -- மயூரநாதன் (பேச்சு) 09:30, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மயூரநாதன், நான் அடிக்க முயன்ற கருத்து இதோ. அந்தக் கருத்தை எழுதியவர் 786haja என்பதற்கான ஆதாரம் இதோ. எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் கருத்திடும் முன்னே, அதையும் கூட நுட்பக் குழப்பத்தால் நானே மீள்வித்து விட்டேன். தேனி சுப்பிரமணியின் கருத்தை நீக்க முயன்றேன் என்று நீங்கள் கருதுவது தவறு. //அண்மைக் காலங்களில், குறிப்பாகக் கடந்த ஒரு மாத காலத்தில், தமிழ் விக்கியில் கருத்திடுபவர்கள் தாம் எழுதுபவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. பல கருத்துக்களை வாசிக்கும் போது அப்படியான எண்னம் தான் தோன்றுகிறது. சில வேளைகளில் அந்தந்த நேரங்களில் உள்ள மனநிலைக்கு ஏற்றபடி கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம். இப்பொழுது வாசித்துப் பார்த்தால் சிலவேளை அவர்களே இதை நானா எழுதினேன் என்று வெட்கப்படவும் கூடும். எனவே, அவதூறுகளும், தனி மனிதத் தாக்குதல்களும் தன்னை மட்டும் அன்றி மற்றவர்களையும் பாதிக்கும் என்று எண்ணக்கூடிய ஒவ்வொருவரும் தயவு செய்து நீங்கள் இந்த ஒரு மாத காலத்தில் எழுதியவற்றை மீண்டும் படித்துப் பார்த்து அங்கே தனிமனிதத் தாக்குதல், அவதூறுகள் என்பன இருந்தால் நடுக்கோடிட்டு அழித்து வருத்தம் தெரிவியுங்கள். அது விக்கிச் சமூகத்தில் ஒரு நல்ல, பண்பான முன்மாதிரியாக அமையும். அத்துடன் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைப்பாடுகளை மீள்பரிசோதனை செய்யவும், அதற்கேற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் உதவியாக அமையும். ஒவ்வொருவரினதும் மனச்சாட்சிதான் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முதல் நீதிபதி. இந்த நீதிபதியின் தீர்ப்பினால் உங்களுக்கு எந்த மனத்தாங்கலும் ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்// என்று நீங்களே இட்ட அறிவுரையைப் பின்பற்றி எனது பேச்சுப் பக்கத்தில் உரிய மாற்றத்தைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். கொஞ்சமாவது நல்லெண்ண நன்னம்பிக்கை கொள்ளலாம் தானே :) நன்றி. --இரவி (பேச்சு) 10:31, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இரவி, இதைத்தான் "மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்வது. 10 ஆண்டு நிறைவுக் கருத்துப் பக்கத்தில் ஏதாவது புதிதாக வந்திருக்கிறதா என்று பார்க்கத்தான் போனேன். 786haja வின் கருத்தை நீக்குவது பற்றிய கலந்துரையாடல் எனக்குத் தெரியும் அதை நீக்குவது குறித்தும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தேனீயின் கருத்து நீக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது தேனீயே அதை நீக்கியதாகத் தான் எண்ணினேன். ஆனால் வரலாற்றுப் பக்கத்தில் பார்த்தபோது உங்களுடைய தொகுப்பின்போதுதான் அது நீக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அது வேண்டுமென்று செய்யப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அதை யாரும் பார்த்தால் தவறாக எண்ணக்கூடும் என்று மட்டுமே எண்ணினேன். அது ஒரு sensitive ஆன பகுதி. பலரை முகம் சுழிக்க வைக்கக்கூடியது. நானே சரிப்பண்ணியிருக்கலாம். ஆனால், நீங்கள் செய்ததாகவும், அதற்கு எதிராக நான் மீள்வித்ததாகவும் தோற்றம் வரும். நீங்களே உடனடியாகச் சரிசெய்தால். தவறுதலாக நடந்தது என்று எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகவே உங்கள் பேச்சுப் பக்கத்தில் அதைத் தெரிவித்தேன். நான் எழுதியதைச் சரியாக வாசித்துப் பாருங்கள். "ஏன் நீக்கினீர்கள் என்று நான் கேட்கவில்லை", அல்லது "நீக்கியிருக்கக் கூடாது" என்றும் சொல்லவில்லை "கைப்பாவைக் கருத்துக்களுடன் தேனீயின் கருத்துக்களையும் நீக்கியிருப்பதாகத் தெரிகிறது" என்று ஒரு தகவலாகத்தான் தந்திருக்கிறேன். நீங்கள் கவனிக்காமல் இருந்திருந்தால். சரிசெய்யட்டும் என்பதற்காகவே அவ்வாறு தகவல் தந்தேன். அது உங்களைக் குற்றங் கூறுவதற்காக எழுதியது என்று நீங்கள் நினைத்திருந்தால் வருந்துகிறேன். நான் பின்பற்ற விரும்பாத அறிவுரையை மற்றவர்களுக்கு நான் கூறுவதில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 11:18, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன், நீங்கள் இட்ட செய்தியை உரிய நேரத்தில் கவனித்து மறுமொழி இடமுடியாமல் போயிருந்தால், தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் நிலவும் சூழ்நிலையில், அது மிகவும் தவறான புரிதலைத் தந்திருக்கும். எனவே, ஒரு தகவலை இடும் முன் அது சரிதானா என்று ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. தாங்கள் இட்ட தவறான தகவலைத் திருத்தியமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 15:37, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்கு நேர்ந்த அவதூறுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்

ரவி, அண்மையில் ஒரு தடை செய்யப்பட்ட போலிக் கணக்கில் இருந்து தங்களைப் பற்றிய அவதூறுச் செய்தி வந்திருந்தது. இது தொடர்பாக, தமிழ் விக்கிப்பீடியாவில் நெடுநாள் பங்களிக்கும் பயனர் என்ற முறையில், தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை நான் முதலிலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் பல அதிகாரிகளும் நிர்வாகிகளும் இருக்கும் போது அவர்களை முந்திக்கொண்டு நான் மன்னிப்பு கோரினால் "யார் யாரெல்லாமோ தமிழ் விக்கி சார்பாக மன்னிப்பு கோருகிறார்கள்" என்று சிலர் புலம்ப நேரிடுமோ என்று சிறிது காலம் பொறுமையாக இருந்தேன்.

மற்றவர்கள் அனைவரும் அவதூறு செய்தவர்களுக்கு ஆதரவாக கள்ள மவுனம் சாதிப்பதால் நான், தமிழ் விக்கிப்பீடியாவில் நெடுநாள் பங்களிக்கும் பயனர் என்ற முறையில், தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட அவதூறுச் செய்தியை விக்கி வரலாற்றில் இருந்து நிலையாக நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்போம். மீண்டும் இவ்வாறான அவதூறுகள் வராமல் இருப்பதற்கான காப்பு நடவடிக்கைகளை எடுக்க முனைவோம். நன்றி.-- புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 10:49, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுடைய வேண்டுகோளுக்கு எனது ஆதரவு உண்டு. குறித்த அவதூறுச் செய்தியை மட்டும் அல்லாது இதுபோன்ற எல்லா அவதூறுச் செய்திகளையும் தனிமனிதத் தாக்குதல்களையும் நீக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்காக நான் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதை இங்கே இதற்கு மேலேயுள்ள இழையில் இரவியும் வெட்டி ஒட்டியுள்ளார். இந்த ஆலோசனை மூலம் ஒருவருக்கும் மனத்தாங்கல் இல்லாமல் அவதூறுச் செய்திகளையும், தனிமனிதத் தாக்குதல்களையும் நீக்கிவிடலாம். இந்த வேண்டுகோளுக்குப் பயன் கிடைக்காவிட்டால், விக்கியில் கலந்துரையாடி இவ்வாறான செய்திகளைத் தேடி நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 11:37, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தானியங்கி அணுக்கம் வேண்டல்

(இச்செய்தி அதிகாரி அணுக்கம் உடையவர்களுக்கு) எனது கணக்கின் பெயர் NeechalBOT. நான் விக்கித் திட்டங்களுக்குப் புதிது. தற்போதைக்கு எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள பணிகளை என் பயனர் பக்கத்தில் காணலாம். எனக்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி நீச்சல்காரன் இங்கு இட்டுள்ள கோரிக்கை தொடர்பாக உங்கள் கருத்தையிட உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். --NeechalBOT (பேச்சு) 07:19, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கூடல் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகள்

இரவி இங்கே சில கருத்துகளை இட்டுள்ளேன். உங்களைக் குறிப்பிட்டும் சில கூறியுள்ளேன். பார்க்க வேண்டுகின்றேன். நன்றி --செல்வா (பேச்சு) 04:15, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நடவடிக்கை தேவை

(கீழ்க்காணும் குறிப்பைப் பயனர் இராசன் (Rajan s) பக்கத்தில் இட்டுள்ளேன்)

இராசன் நீங்கள் //எனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசிங்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பாலியல் அசிங்கமாக (ஆண் ஆணுடன் உடலுறவு கொள்ளும்) படங்கள் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதைச் செய்தது யார்? தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் வந்துள்ளன.// என்று எழுதியுள்ளீர்கள். இவை கடுமையான குற்றச்சாட்டுகள். கொலை மிரட்டல் அனுப்பியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது விக்கிப்பீடியா தக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். விக்கிப்பீடியாவையும் தாண்டி காவல் துறையினரிடம் முறையீட்டை வைக்கவேண்டும். நீங்கள் முன் வைத்திருப்பது மிகவும் கவலைதரும் குற்றச்சாட்டு. தக்க ஆதாரங்களை விக்கிப்பீடியாவின் அதிகாரிளின் ஒருவரிடம் (மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன்) சமர்ப்பியுங்கள். --செல்வா (பேச்சு) 18:55, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கம் தேவை

இரவி,

இராசனின் கணக்கை நீங்கள் இயக்கவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்களோ வேறு பயனரோ நேரடியாக இயக்குவதற்கான சான்று எதுவும் தென்படவில்லை என்பது கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால், உங்களது பின்வரும் நிலைத்தகவல் (இராசன் கைப்பாவை என்பதற்கான சான்றில்லை என முடிவு வந்தபோது நீங்கள் பதிந்தது) என்னை மிகவும் உறுத்துகிறது. ஒருவேளை அந்தக் கணக்கை இயக்குபவர் உங்களுக்குத் தெரிந்தவராக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் உங்களிடமே நேரடியாக விளக்கம் கேட்கிறேன்.

  • https://www.facebook.com/ravidreams/posts/10152333541963569
  • இவை தவிர ஒரு சாக்கிலட்டு விளம்பரத்தைப் பற்றியும் பதிவிட்டிருந்தீர்கள், இப்போது என்னால் அணுக முடியவில்லை.

இராசனுக்கு தேனி சுப்பிரமணி அரசுக்கு எழுதிய மடல் விவகாரமும் (இங்கு நீங்கள் குறிப்பிடும் முன்னர்) தெரிந்திருக்கிறது. அதுவும் நீங்கள் மடலனுப்பிய ஒரு நாளைக்குள் அவர் அதை விக்கியில் குறிப்பிடுகிறார். ஆக, உங்களுக்குத் தெரிந்தவராகவோ உங்கள் முந்தைய மடலில் இணைத்திருந்த 22 விக்கிப்பீடியர்களில் ஒருவராகவோ இருக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் உங்களுக்கு அவர் யாரெனத் தெரிந்தால் கூறிவிடுவது தேவையில்லாமல் இந்த 22 பேரைத் தவறாக எண்ணுவதைத் தவிர்க்க உதவும். இராசனைத் தெரிந்திருந்தால் அவரையேகூட ஒப்புக் கொள்ளுமாறு நீங்கள் கோரலாம்.

உங்களுக்குத் தெரியாது எனில் வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:24, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், உங்கள் நேரடியான அணுகுமுறையை வியந்து மெச்சுகிறேன்! விக்கிக்கு வெளியே சில நிலைத்தகவல்களைப் பார்த்தபோது எனக்கும் சற்று நெருடியது. (புள்ளி இராசா பற்றிய மறைமுகத் தகவல்கள்; நல்லெண்ண நம்பிக்கை பற்றிய கிண்டல், முதலியன). இவை ஏதோ ஒரு ஏமாற்றத்தின் காரணமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அந்த நெருடல் இருக்கத் தான் செய்தது. உங்களின் கேள்விக்கு இரவி விளக்கம் அளித்தால் இந்தக் குழப்பத்திற்கும் நெருடலுக்கும் ஒரு தீர்வு கிட்டும் என்று எண்ணுவதால் நானும் உங்கள் கோரிக்கையில் சேர்ந்து கொள்கிறேன். இது துளியும் தொடர்பற்ற ஒன்றானால், குழப்பத்தின் காரணமாக எழுந்த கேள்வியேயன்றி வேறு ஒன்றுமில்லை என்று தெளிவுபடுத்திவிடுகிறேன். (பி,கு. மேலே குறிப்பிட்ட நிலைத்தகவல்கள் இரவி தவிர வேறு சில பயனர்களும் கலந்து கொண்டவை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்). --இரா. செல்வராசு (பேச்சு) 02:21, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், உங்களது ஐயப்பாடு தொடர்பில் எனக்கும் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இரவியோ வேறு யாரோ கைப்பாவை கணக்கை (இராசனுடையது) இயக்கியிருந்தால், கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் தெரிந்திருக்கும். அவ்வாறு இருக்க, வேறு யாரோ இயக்கலாம் என சந்தேகிப்பது முரணாகவுள்ளது. There is no evident issues with the user account abusing alternate accounts என்ற billinghurst இன் வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்? ஆகவே, கைப்பாவை அறிதல் முறை பிழை என்கிறீர்களா? கைப்பாவை இல்லையென்ற பின்பு, 22 பேரைத் தவறாக எண்ணுவது நெருடலாக உள்ளது. அந்த 22 பேரில் நானும் ஒருவன். :( மேலும் இராசன் சுப்பிரமணி தொடர்பில் கைப்பாவை அறிதல் விண்ணப்பம் செய்தவர். ஆகவே, தானும் இப்பொறியில் மாட்டிக் கொள்ளுவேன் என தெரிந்திருக்கும் அல்லவா? எனவே, ஐயங்களைத் தவிர்த்து விடயத்துடன் செயற்படுவது, விக்கிப்பீடியர்களுடனான உறவுக்கு பங்கம் ஏற்படாது பாதுகாக்கும் என நம்புகிறேன். (உங்கள் நிலையில் நான் கேட்பதாயிருந்தால், "கையாள்” (Meatpuppets) தொடர்பு பற்றியே கேட்டிருப்பேன்.) நான் முன் வைத்துள்ள நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதலில் சுப்பிரமணி, இராசன் முன்வைத்த மின்னஞ்சல் மிரட்டகளை கருத்திற் கொள்ளவில்லை. அவை சாட்சியற்றவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:04, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

//கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் தெரிந்திருக்கும்//
அன்டன் கூகிளில் தேடிப்பாருங்கள். "கைப்பாவை அறிதலை" எப்படி ஏமாற்றலாம், பிடிபடாமல் எப்படிக் கைப்பாவைகளை இயக்கலாம் என்பதற்கு எல்லாம் ஏராளமான வழிமுறைகள் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் போல நுட்பம் தெரியாதவர்கள் தான் பிடிபடுவார்கள். ராஜனே தான் "குறைந்தது ஒரு அனானிப் பயனராக" வந்ததை ஒப்புக்கொண்டும் கைப்பாவை அறிதல் முறை மூலம் இது கண்டுபிடிக்கப்படவில்லை பார்த்தீர்களா? ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் "I would have thought they do retain the creation IP address, but I guess it's pretty much useless information, expecially when dealing with accomplished sockers". "இன்னொருவருடைய கூற்று. "In closing, ........, remember that the checkusers are pretty much just regular people with an average amount of common sense, and an above-average involvement in wiki-politics". கைப்பாவை அறிதல் மூலம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இதை வைத்துக்கொண்டு தீர்மானம் எடுப்பது ஒரு "unfair" வழிமுறை. நுட்பம் தெரியாதவர்கள் மாட்டிக்கொண்டு தண்டனை பெறக் கெட்டிக்காரர்கள் "பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு கருடா சௌக்கியமா?" என்பார்கள்.---மயூரநாதன் (பேச்சு) 07:37, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அது மட்டுமில்லாமல், ஒருவர் கைப்பாவை அறிதலுக்கு அகப்படாமல் தப்பிப்பது எப்படி என்று விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை எழுதினாராம். அதை யாரோ நீக்கிவிட்டார்கள் என்று ஆதங்கப்பட்டு (I wrote a guide to socking, but it was deleted from Wikipedia) வேறு இடத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் பின்வருமாறு சொல்கிறார். "So you want to sock and not get caught? Well, it's not exactly easy, but there are definitely some things that can make it easier".---மயூரநாதன் (பேச்சு) 10:10, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் ஏரணம் பொருத்தமானதுதான். ஊகத்தின் அடிப்படையில் பார்த்தால், எல்லோரையும் சந்தேகிக்க வேண்டும். பொருத்தமில்லாமல் அருண் கைப்பாவை இயக்கியதும் உண்மையா என்றும், அல்லது வேறு யாரோ இயக்கி அவர் மாட்டிக் கொண்டாரா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. காலையில் இரவி பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல் பார்த்த பிறகும், சந்தேகிப்பதென்றால் சந்தேகம் மட்டுமே இங்கு மிஞ்சும். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:55, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அன்ரன், நான் யாரையும் சந்தேகிக்கவில்லை. இரவி அந்தக் கணக்கை இயக்குவதாக நான் நினைக்கவில்லை என்றுதான் எனது கோரிக்கையைத் தொடங்கியுள்ளேன். அதைக் காணவும். நிற்க.
கைப்பாவை அறிதலைப் பற்றி நானும் கொஞ்சம் அறிவேன். கைப்பாவை என உறுதியாகத் தெரியும் இடங்கள் சில, மற்றபடி எதுவும் உறுதியாகக் கூறவியலாத நிலையில் சான்றில்லை என்றுதான் அறிக்கை வரும். கைப்பாவை அறிதலில் தென்படாதவாறு கணக்குகளை இயக்குவது மிக மிக எளிது. ஏற்கனவே ஒரு Tor ஐ.பி. முகவரியில் இருந்து தமிழ் விக்கியிலேயே பங்களிப்பு வந்துள்ளது. அதைவிட மிகவும் எளிதாக வேறொருவரை வைத்துக் கணக்கை இயக்கினால் எழுத்து நடையை வைத்து மட்டும்தான் ஊகிக்க முடியும். கைப்பாவை அறிதல் முறையில் அவற்றைச் சான்றில்லை என்றுதான் குறிப்பார்கள். ஆங்கில உரையாடல் என்றால் சில முறைகள் உண்டு.
என்னுடைய கேள்வி இரவி சிலருக்கு மட்டுமே தெரிவித்த தகவல் இராசனுக்கு 24 மணி நேரத்துக்குள் எப்படித் தெரிந்துள்ளது என்பதே. அதற்கு வெவ்வேறு வாய்ப்புகள் இருந்திருக்கலாம். இருந்தாலும் இரவிக்குத் தெரிந்தவரா என்றுதான் விளக்கம் கேட்டேன். கீழே இரவி தெரிவித்துள்ளபடி இவ்விளக்கத்துக்கான பதிலை அவர் ஏற்கனவே எனக்குத் தனிமடலில் அனுப்பியிருந்தார். ஆனால், பொதுவில் இருப்பதுதான் சரி, ஆங்காங்கே தனிமடல்களில் இழைகள் ஓடிக் கொண்டிருப்பது பல சிக்கல்களுக்குக் காரணமாகும் என்பதாலேயே மீண்டும் அதே கேள்வியை அவரிடம் பொதுவில் கேட்டேன். -- சுந்தர் \பேச்சு 15:47, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இப்போதுதான் நீங்கள் கையாள் பற்றிக் கேட்டிருப்பேன் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறேன், அன்ரன். ஆம், நான் குறிப்பிட்டபடி அந்தக் கணக்கை நேரடியாக வேறு விக்கிப்பீடியர் இயக்குவதாகக் கருதவில்லை. யாருடைய உள்ளீட்டையாவது கொண்டு இயங்கும் கணக்காக இருக்கலாம் என்ற வாய்ப்பையே முன்வைத்தேன். -- சுந்தர் \பேச்சு 17:24, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், கைப்பாவை அறிதல் மற்றும் பற்றி proxy சில கருத்துக்கள் எனக்கு உள்ளது. பின்பு இது பற்றி உங்களுடன் உரையாடுவேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:26, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சரி அன்ரன். -- சுந்தர் \பேச்சு 07:24, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வாக்குமூலம்

சுந்தர் இதே கேள்வியை இன்னும் சில விக்கிப்பீடியர்களுக்குப் படி இட்டு என்னிடம் மின்மடல் மூலமாக அக்டோபர் 31, 2013 அன்று கேட்டிருந்தார். வெளிப்படைத்தன்மையைப் பேணும் பொருட்டு இக்கேள்விகளை விக்கிப்பீடியாவில் முறையாக கேட்டால் பதில் தருகிறேன் என்று நானே தான் அவரை இங்கு கேட்கச் சொன்னேன். அதே வேளை, ஒரு உடன் பணியாற்றும் விக்கிப்பீடியராக அவருக்குத் தனிமடலில் விளக்கம் தெரிவித்து இருந்தேன். கீழே வருவது இரண்டு வாரங்களுக்கு முன்பே அக்டோபர் 31, 2013 இந்திய நேரம் 4:56 PM அன்று சுந்தருக்கு அனுப்பிய மடலின் படி. இதனையே என்னுடைய வாக்குமூலமாக இங்கு பதிவு செய்கிறேன். தமிழ்விக்கி10 தொடர்பான ஏற்பாடுகள், அலைச்சல்கள், உளைச்சல் என்று கடந்த 75 நாட்களாக என்னுடைய குடும்ப வாழ்க்கையும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இயன்ற அளவு அமைதியாகவும் தொடர் விக்கி விடுப்பிலும் இருக்க விரும்புகிறேன். அனைவருக்கும் வேண்டிய விளக்கங்களை என் பேச்சுப் பக்கத்திலும் உரிய விக்கிப்பீடியா பக்கங்களிலும் இடுங்கள். இயன்ற போது முறையாக பதில் தருவேன். நன்றி.

சுந்தர்,

மற்ற விக்கிப்பீடியர்களுக்குப் படி இட்டு நீங்கள் அனுப்பிய மடலில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தினேன். ஏனென்றால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் முழுக்க வெளிப்படையாகச் செயல்படுவது தான் ஒரே வழி.

ஆனால், ஒரு நண்பராக உங்கள் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியும். இது உங்கள் பார்வைக்கு மட்டுமே.

இராசன் யாரென எனக்குத் தெரியாது. மற்றவர்களைப் போல் எனக்கும் அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்ற ஊகங்கள் தான் உள்ளன.

நான் வீட்டில் தனியாக இருந்து வேலை செய்கிறேன். எதையேனும் சொல்லிப் புலம்ப உடன் பணியாற்றும் நண்பர்கள் இல்லை. பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு விக்கிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது. சொல்லிப் புலம்பி என் உளைச்சலைக் குறைக்க இருக்கும் ஒரே இடம் முகநூல் தான். ஒரு வகையில் அப்படி உளைச்சல் குறைந்ததால் தான் விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு வர முடிகிறது. Jab we met / கண்டேன் காதலை படம் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரியும் :)

உங்களைப் போலவே பலரும் முகநூல் அரட்டையில் அது நானா, இராசனைத் தெரியுமா என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அது எல்லாவற்றுக்கும் பதில் தான் நான் போடும் நிலைத்தகவல்கள்.

நான் மடலில் ஒரு கருத்து, விக்கியில் ஒரு கருத்து, முகநூலில் ஒரு கருத்து என்று இடவில்லை. மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. ஆனால், உங்களையும் சேர்த்த மற்ற விக்கிப்பீடியர்களால் நீங்கள் மடலில் இடும் கருத்துகளை விக்கியிலும் இட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இட முடியாது என்றால் ஏன் என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக அதற்கு விக்கியின் நலன் மட்டும் காரணமாக இருக்க முடியாது. தேனியைப் பற்றி பலரும் தனிப்பட பல கருத்துகளை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை. இது ஏன்?

இராசனுக்கு ஆதரவாக விக்கியிலேயே சூரியா, குறும்பன் ஆகியோர் கருத்திட்டிருக்கின்றனர். முகநூலில் நிறைய பேர் விருப்பம் போடுகிறார்கள். கைப்பாவையாகச் செயல்படக்கூடிய ஒருவர் என்று அறிந்தும் நெடுநாள் பயனர்கள் பலரும் விருப்பு போடுகிறார்கள் என்றால் ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்.

//இந்த உறுத்தலை உள்ளே வைத்துக் கொண்டு என்னால் மற்ற நியாயங்களைச் செயல்படுத்த முடியவில்லை. //

என்று நீங்கள் கூறிய கருத்து வருத்தமாக இருந்ததால் தான் உங்களுக்குப் பதில் தருகிறேன்.

நன்னெறிகள் யாவும் அவற்றை முறையாக பின்பற்ற முனைவர்களுக்குத் தான் கூடுதல் அயர்ச்சியைத் தரும் என்றிருந்தீர்கள்.

ஆதலால், உங்கள் தடுமாற்றம் புரிகிறது.. ஆனால், உங்களால் இன்னும் சிறப்பாக நடுநிலையாக பணியாற்ற முடியும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. வேண்டுகோள்.

நான் மின்மடலில் போட்ட கடிதம் எப்படி இராசனுக்குத் தெரியும், 22 பேரில் யாரை ஐயப்படுவது என்று கேட்டிருந்தீர்கள்.

அக்கடிதம் பிப்ரவரி 11, 2013 இன்னும் பல பேருக்குப் படியிட்டே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, நேற்றைய மடலுக்கு முன்பே பல மாதங்களாக இந்த விசயம் வெளியே தெரியும். இராசனின் கேள்விகளைக் கண்டீர்களானால் அவர் நெடுநாட்களாக தேனியின் நடவடிக்கைகளைக் கவனித்தே கருத்திடுகிறார். தேனி சுப்பிரமணி பற்றி பேச்சுவாக்கில் நான் புருனோவிடம் பகிர்ந்து கொண்ட செய்தியை இன்று காலை புருனோ கூடல் கருத்துகள் பக்கத்தில் இட்டிருந்தார். உங்களுக்கு வேண்டப்பட்டவர் அரசுக்கு கடிதம் எழுதினால் கேட்க மாட்டீர்களா என்று. இதில் இருந்து இராசன் அது யார் என்று புரிந்து கொள்வது பெரிய விசயம் இல்லை..

சுந்தர், ஒரு நண்பராக எப்போது வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்கலாம். கண்டிப்பாக பதில் சொல்வேன். ஆனால், மற்ற விக்கிப்பீடியர்களுக்குப் படி இட வேண்டாம். அதை வெளிப்படையாகச் செய்வோம்.

மற்றவற்றை உரிய இடத்தில் பேசுவோம் சுந்தர்..

முகிலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தீபாவளி வாழ்த்துகள்..

இரவி

--இரவி (பேச்சு) 08:01, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

// நான் மடலில் ஒரு கருத்து, விக்கியில் ஒரு கருத்து, முகநூலில் ஒரு கருத்து என்று இடவில்லை. மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. ஆனால், உங்களையும் சேர்த்த மற்ற விக்கிப்பீடியர்களால் நீங்கள் மடலில் இடும் கருத்துகளை விக்கியிலும் இட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இட முடியாது என்றால் ஏன் என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக அதற்கு விக்கியின் நலன் மட்டும் காரணமாக இருக்க முடியாது. தேனியைப் பற்றி பலரும் தனிப்பட பல கருத்துகளை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை. இது ஏன்? //

நான் தனிமடலிலோ வேறு எங்குமோ தெரிவித்த கருத்துக்களை என்னால் எவ்விதத் தயக்கமும் இன்றி விக்கியிலும் இட முடியும். அழுத்தமான சான்றில்லாமல் ஆனால் காரணத்துடன் கூடிய ஊகம் மட்டுமே இருக்கும்போது மட்டும் அதை நான் விக்கியில் இடுவதில்லை. தனிமடலிலும் உரையாடல்களிலும்கூட அவற்றை ஊகம் என்று இயன்றவரை குறிப்பிட்டு விடுவேன். விக்கி நலன் பொருட்டும் நல்லிணக்கம் பொருட்டும் வேண்டுமானால் என்னுடைய கருத்துக்களைச் சில நேரம் சிறிது மட்டுப்படுத்தியிருக்கிறேன் (கருத்தை மாற்றியதில்லை, சிலவற்றை அழுத்திச் சொல்லாமல் விட்டிருக்கிறேன்). எடுத்துக்காட்டாக, கூடல் தொடர்பாக நான் பலவற்றையும் குறிப்பிட எண்ணியிருந்தேன். ஆனால், நிலவும் சூழலில் அதைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருந்ததால் சிலவற்றை விட்டிருந்தேன். காட்டாக, நடந்த நிகழ்வில் நீங்கள் உங்களை முன்னிறுத்தியதாகக் கருத இடம் இருந்தது. ஆனால், அது உண்மையல்ல என்று அறிவதற்கு நிறைய தகவல்களும் அதைவிட நிறைய நல்லெண்ணமும் இருந்திருக்க வேண்டும் என்றும் கூற நினைத்தேன். (அதனால் அவ்வாறு கருதியவர்களை அவர்களது நோக்கம் எவ்வாறிருப்பினும் அவதூறாக நினைக்காமல் நல்லெண்ணக் குறைவாகவே கொள்ள வேண்டும் என்று நான் கருதினேன்.) நீங்கள் இருந்த களைப்பிலும் உளைச்சலிலும் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று நான் எண்ணிப் பார்த்து மட்டுப்படுத்தினேன். (அந்த இடத்தில் முழு கருத்தையும் உள்ளபடியே போட்டு தவறான புரிதலினால் அது செல்ல வேண்டியவர்களிடத்தில் முற்றிலும் எடுபடாமல் போவதற்குப் பதிலாக ஒரு சிறு பகுதியை பிற்பாடு உரையாடுவதற்கு ஒத்தி வைக்கலாம் என்றே கருதினேன்.) அதே போல, அதை வேறு யாராவது தவறாகப் புரிந்து கொண்டு திசை திருப்பிவிடவும் வாய்ப்பிருந்தது. அதனால் அதைத் தவிர்த்தேன். தேனி சுப்பிரமணி தொடர்பாக நான் எதையும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரேயொரு கருத்து நானும் நீங்களும் ஒருமுறை அவருடன் நேரில் உரையாடியபோது அவர் சொல்லியிருந்தார். அதைச் சான்றாகக் காட்ட முடியாது என்பதால் நான் விக்கியில் சில நாட்கள் முன்புவரை அழத்தமாகப் போடவில்லை. -- சுந்தர் \பேச்சு 16:19, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

// இரவி: மாட்டாமல் திருடுவாரே திருடர் மற்றெல்லாம்
தரும அடி வாங்குவார் - டுபாக்குறள் 1. //

இரவி, உங்கள் விளக்கத்தில் இருந்து இராசன் யார் என்பது உங்களுக்குத் தெரியாது என அறிகிறேன். ஆனால், உங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நிலைத்தகவல் ஒருவாறு 'கைப்பாவையாக இருந்தாலும் மாட்டிக் கொள்ளாமல் செய்வது (அல்லது செய்தது)' சரியென்று நீங்கள் கருதுவதாகக் காட்டுகிறது. அதைவிட, பல நல்லெண்ணக் குறைபாடுகளுக்கு ஒரு விதத்தில் காரணமான அந்த விசயத்தில் உண்மை அறிவதற்காக (குறிப்பாக அவர் உங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்திருந்ததால் உங்கள் தரப்பு நியாயத்தைச் சற்று குறைவாக யாரும் எடுத்துவிடக்கூடாது என்ற அக்கறையிலும்) நான் மேற்கொண்ட முயற்சியை ஒரு வகையில் ஏளனம் செய்வது போலவும் பட்டது. அதை முன்னிட்டு எனது வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:47, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சிக்கல்

இரவி அவர்களே இங்கேயும் இங்கேயும் பாருங்கள். இப்படி ஆகிவிட்டது நான் என்ன செய்வது அப்படியானல் நானும் ஏனையோர் தொகுத்ததை நீக்கிவிட்டு புதிதாகச் சேர்த்து என்கணக்கிற்குக் கொண்டுவரலாமா?-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:13, 3 திசம்பர் 2013 (UTC)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:45, 3 திசம்பர் 2013 (UTC)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:19, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

uthavi thEvai

katturai pottiyil niraya vithikalai meeri eluthapatulana. Naan erkanave sari paartha murayil etho pilai ullathal neengal katuraikal anaithayum oru murai meel paarvai itumaaru vendukiren. naan ninaitha maathiri ithu elithaka intha murai illai.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:13, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி மேற்பகுதி

தவறுதலாக உருவாகிவிட்டது என எண்ணி வார்ப்புரு:ஆலமரத்தடி மேற்பகுதி/தொகுப்பு94 என்ற பக்கத்தை விக்கிப்பீடியா வெளிக்கு மாற்றிவிட்டேன். சரியெனில் வார்ப்புரு வெளியை நீக்கிக் கொள்ளாலாம் -நீச்சல்காரன் (பேச்சு) 01:42, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன், கவனித்துத் திருத்தியதற்கு நன்றி.--இரவி (பேச்சு) 16:43, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப்போட்டி

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:48, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:52, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravidreams&oldid=1610257" இலிருந்து மீள்விக்கப்பட்டது