உள்ளடக்கத்துக்குச் செல்

கொழுப்புமிகு ஈரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழுப்புமிகு ஈரல்
கலங்களில் கொழுப்பு அடர்ந்துள்ளதைக் காட்டும் மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோயின் நுண்வரைவி.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K70., K76.0
ஐ.சி.டி.-9571.0, 571.8
நோய்களின் தரவுத்தளம்18844
ஈமெடிசின்med/775 article/170409
ம.பா.தC06.552.241
கல்லீரல் சேதமடைவதின் பல்வேறு கட்டங்கள்

கொழுப்புமிகு ஈரல் (Fatty Liver) எனப்படும் கொழுப்புமிகு ஈரல் நோயானது (Fatty Liver Disease, FLD) டிரைகிளிசரைடு கொழுப்பானது பெரும் நுண்குமிழிகளாக கல்லீரல் செல்களில் திரள்வதைக் குறிக்கும். இந்நோயின்போது, உயிரணுக்களில் கொழுமியங்களை அசாதாரணமாகத் தக்கவைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் (ஸ்டியடோசிஸ்) இது ஒரு மீளக்கூடிய நிலையேயாகும். பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டாலும், கொழுப்புமிகு ஈரல் நோயானது ஒரே நோயாகக் கருதப்படுகின்றது. இந்நோயானது, அதிகளவு மது அருந்துபவர்களிலும், இன்சுலின் எதிர்ப்புடனோ அல்லது இல்லாமலோ உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களிலும் உலகளாவிய அளவில் நிகழ்கிறது. கொழுப்பு வளர்சிதைமாற்றத்தில் தாக்கமேற்படுத்தும் பிற நோய்களுடனும் இந்நிலையானது தொடர்புடையதாகும்[1]. உருவமைப்புப்படி மதுசார்ந்த கொழுப்புமிகு ஈரல் நோயையும், மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோயையும் வேறுபடுத்தி அறிவது கடினமாகும். இவ்விரண்டு நிலைகளிலும் பல்வேறு கட்டங்களில் நுண்குமிழ்கள் மற்றும் பெருங்குமிழ்களில் கொழுப்பினால் உண்டாகும் மாற்றங்கள் நிகழ்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reddy JK, Rao MS (2006). "Lipid metabolism and liver inflammation. II. Fatty liver disease and fatty acid oxidation". Am. J. Physiol. Gastrointest. Liver Physiol. 290 (5): G852–8. doi:10.1152/ajpgi.00521.2005. பப்மெட்:16603729. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்புமிகு_ஈரல்&oldid=3702400" இலிருந்து மீள்விக்கப்பட்டது