பித்தப்பைக்கல்
பித்தப்பைக்கல் | |
---|---|
ஒத்தசொற்கள் | பித்தப்பை நோய், பித்தப்பை அழற்சி (பித்தப்பையில் பித்தப்பைக் கல்), பித்த நாளத்தில் பித்தப்பைக் கல் (பித்தப்பைக் கல்)[1] |
![]() | |
பித்தப்பை கற்கள் பொதுவாக பித்தப்பையில் உருவாகின்றன, மேலும் அவை பித்தநீர் மண்டலத்தைத் தடுக்கும் பட்சத்தில் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் பொது அறுவைச் சிகிச்சை |
அறிகுறிகள் | எதுவும் இல்லை, வலது பக்க வயிறுக்கு மேல் பகுதியில் தசைப்பிடிப்பு வலி[2][3][4] |
சிக்கல்கள் | பித்தப்பை அழற்சி, கணைய அழற்சி, கல்லீரல் அழற்சி[2][4] |
வழமையான தொடக்கம் | 40 ஆண்டுகளுக்குப் பிறகு[2] |
சூழிடர் காரணிகள் | கருத்தடை மாத்திரைகள், கருத்தரிப்பு, குடும்ப நோய் வரலாறு, உடற் பருமன், நீரிழிவு நோய், கல்லீரல் இழைநார் வளர்ச்சி, விரைவான எடை இழப்பு[2] |
நோயறிதல் | மீயொலி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில்,[2] |
தடுப்பு | ஆரோக்கியமான எடை, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு, எளிய ஒற்றைச்சர்க்கரை குறைவாக உள்ள உணவு[2] |
சிகிச்சை | அறிகுறியற்றதற்கு:எதுவுமில்லை,[2] உர்சோடியாக்சிகோலிக் அமிலம் மற்றும் செனோடாக்சிகோலிக் அமிலம் வலி: அறுவைச் சிகிச்சையின் மூலம் பித்தப்பை நீக்கம்[2] |
முன்கணிப்பு | அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீர்வு[2] |
நிகழும் வீதம் | 10–15% பெரியவர்கள் (வளர்ந்த நாடுகள்)[4] |
பித்தப்பைக்கல் (Gallstone) அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும்.[5] இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்கியுள்ள கல்லீரல்-பித்தப்பைத் தொகுதியின் பித்தப்பைக்கான், பொதுப் பித்தக்கான், கணையக் கான், வாட்டரின் குடுவையம் முதலிய வழிகளுக்குச் செல்லக்கூடியது. பித்தப்பைக் கற்கள் உள்ள பெரும்பாலான மக்கள் (சுமார் 80%) அறிகுறியற்றவர்களாக இருக்கின்றனர்.[2][3]
பித்தப்பையில் பித்தக்கற்கள் தேங்கியிருப்பது அழற்சி தொடர்புடைய இடர்ப்பாடான கடிய பித்தப்பையழற்சிக்கு வழிகோலலாம். கடிய பித்தப்பையழற்சியில் பித்தம், பித்தக்கற்கள் பித்தப்பையில் தேங்கியிருப்பதால் குடல் நுண்ணுயிரிகளால் இரண்டாம்நிலைத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஏனைய பித்தவழிகளில் கற்கள் தேங்குதல் பித்தக்கான்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை கணைய அழற்சி, பித்தக்கான் அழற்சி போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரு இடர்ச் சந்தர்ப்பங்களும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இவை அவசரநிலை மருத்துவ தேவைகளாகக் கருதப்படுகின்றன.
சிறப்பியல்புகள்
[தொகு]
பித்தக்கற்கள் வெவ்வேறு உருவங்களையும் அளவுகளையும் கொண்டவை. ஒரு சிறிய மணற் துணிக்கையின் அளவில் இருந்து குழிப்பந்தின் அளவு வரை இவற்றின் பருமன்கள் வேறுபடக்கூடியவை.[6] பித்தப்பையுள் ஒரு தனித்த பெருங்கல்லாகவோ அல்லது சிறிய பல கற்களாகவோ காணப்படலாம். கற்கள் ஆக்கப்பட்ட பொருட்களைப் பொறுத்து பித்தக்கற்களை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்: கொலசுட்ரால் கற்கள், கரும் நிறமியக் கற்கள், கலப்புக் கற்கள் (பழுப்பு நிறக் கற்கள்)
கொலசுட்ரால் கற்கள்
[தொகு]கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீர் கொலசுட்ராலால் அதிசெறிவூட்டப்பட்டதன் விளைவாக கொலசுட்ரால் கற்கள் உருவாகுகின்றன.[7] பொதுவாக இவற்றின் நிறங்கள் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்து கரும்பச்சை, பழுப்பு, சுண்ணாம்பு வெள்ளை நிறம் வரை வேறுபடும். பித்தக்கற்கள் என்று பொதுவாகப் பார்க்குமிடத்து அவற்றில் 80% ஆனவை கொலசுட்ரால் கற்கள் ஆகும்.[8]
கருமை நிறமியக் கற்கள்
[தொகு]இவை சிறியவை, கருமையானவை. பிலிரூபின் மற்றும் கல்சியத்தால் ஆக்கப்பட்டுள்ளவை.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Quick CR, Reed JB, Harper SJ, Saeb-Parsy K, Deakin PJ (2013). Essential Surgery E-Book: Problems, Diagnosis and Management: With student consult online access (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 281. ISBN 978-0-7020-5483-9.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Gallstones". NIDDK. November 2013. Archived from the original on 28 July 2016. Retrieved 27 July 2016.
- ↑ 3.0 3.1 "Diagnosis and treatment of gallstone disease". The Practitioner 259 (1783): 15–9, 2. June 2015. பப்மெட்:26455113.
- ↑ 4.0 4.1 4.2 "2016 WSES guidelines on acute calculous cholecystitis". World Journal of Emergency Surgery 11: 25. 2016. doi:10.1186/s13017-016-0082-5. பப்மெட்:27307785.
- ↑ Gallstone Disease: Diagnosis and Management of Cholelithiasis, Cholecystitis and Choledocholithiasis. National Institute for Health and Care Excellence: Guidelines. National Institute for Health and Care Excellence (NICE). October 2014. p. 101. PMID 25473723.
- ↑ Gallstones - Cholelithiasis; Gallbladder attack; Biliary colic; Gallstone attack; Bile calculus; Biliary calculus Last reviewed: July 6, 2009. Reviewed by: George F. Longstreth. Also reviewed by David Zieve
- ↑ Gerard, M. Doherty (2010). Current Diagnosis & Treatment of Surgery. McGraw-Hill Companies, Inc. p. 551. ISBN 9780071638494.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Harvard University (September 1, 2005). "What to do about gallstones — TheFamily Health Guide". Harvard Health Publications. Retrieved Jan 29, 2015.
- ↑ The Merck Manual (November 2013). "Cholelithiasis". Retrieved Jan 29, 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Gallstones". MedlinePlus. U.S. National Library of Medicine.