வாட்டரின் குடுவையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாட்டரின் குடுவையம்
Biliary system new.svg
கல்லீரல்-பித்தப்பைத் தொகுதியின் விளக்கப்படம்.
விளக்கங்கள்
இலத்தீன்Ampulla hepatopancreatica, ampulla Vaterii
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.1199
மரு.பா.தA03.159.183.079.300.950
Dorlands
/Elsevier
12127886
TAA05.8.02.017
FMA15076
உடற்கூற்றியல்

வாட்டரின் குடுவையம் (வேறு பெயர்கள்: கல்லீரக்கணையக் குடுவையம், கல்லீரக்கணையக் கான்) என்பது கணையக் கான் மற்றும் பொதுப் பித்தக்கான் ஆகியன சேர்ந்து உருவாகும் அமைப்பாகும். இது முன்சிறுகுடலின் பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பில் அமைந்துள்ளது. இது 1720இல் ஆபிரகாம் வாட்டர் (1684–1751) எனும் செருமானிய உடற்கூற்றியியலாளரால் விவரிக்கப்பட்டது.[1]

1. பித்தக்கான்கள்: 2. உட்கல்லீரல் பித்தக்கான், 3. இடது, வலது கல்லீரல் கான்கள், 4. பொதுக் கல்லீரற் கான், 5. பித்தப்பைக் கான், 6. பொதுப் பித்தக்கான், 7. வாட்டரின் குடுவையம், 8. பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பு
9. பித்தப்பை, 10–11. வலது மற்றும் இடது கல்லீரல் சோணை. 12. மண்ணீரல்.
13. உணவுக்குழாய். 14. இரைப்பை. சிறுகுடல்: 15. முன்சிறுகுடல், 16. இடைச்சிறுகுடல்
17. கணையம்: 18: துணைக் கணையக் கான், 19: கணையக் கான்.
20–21: வலது, இடது சிறுநீரகம்.

அமைப்பு[தொகு]

பித்தப்பையில் இருந்து வெளியேறும் பித்தப்பைக்கான் பொதுக் கல்லீரல் கானுடன் சேர்ந்து பொதுப் பித்தக்கானை உருவாக்குகின்றது. இது கணையக் கானுடன் சேர்ந்து உருவாகும் அமைப்பு வாட்டரின் குடுவையம் எனப்படுகின்றது. இவ் வாட்டரின் குடுவையம் முன்சிறுகுடலுள் திறக்கின்றது. கணையத்தில் இருந்து சுரக்கப்படும் நொதியங்களும் பொருட்களும், பித்தப்பை அல்லது பித்தக்கான்களில் இருந்து வெளியேறும் பித்தநீரும் வாட்டரின் குடுவையத்தூடாக முன்சிறுகுடலுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. பித்தநீரில் அடங்கியுள்ள பித்த உப்புகள் பெரும் கொழுப்புத் துணிக்கைகளை நீர்மநெய்க்கலவையாக்குதலில் (emulsion) ஈடுபடுகின்றன, இதனால் இலிப்பேசு எனும் கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் நொதியத்தின் வினை இலகுவில் நடக்கின்றது.

இங்கே காணப்படும் கணையக்கான் இறுக்கி, பித்தக்கான் இறுக்கி, ஓடியின் இறுக்கி (கல்லீரல் - கணைய இறுக்கி) ஆகிய இறுக்கிகள் பித்தநீர் மற்றும் கணையச் சாறு குடுவையத்தின் வழியே செல்வதைக் கட்டுப்படுத்துகின்றது. ஓடியின் இறுக்கி முன்சிறுகுடல் உள்ளடக்கங்கள் பின்னோக்கி குடுவையத்துள் செல்வதையும் தடுக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டரின்_குடுவையம்&oldid=1801773" இருந்து மீள்விக்கப்பட்டது