ஈரல் வாயினாள மிகையழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரல் வாயினாள மிகையழுத்தம்
ஈரல் வாயினாளமும் அதனது சேர்சிரைகளும்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K76.6
ஐ.சி.டி.-9572.3
நோய்களின் தரவுத்தளம்10388
ஈமெடிசின்radio/570 med/1889
ம.பா.தD006975

ஈரல் வாயினாள மிகையழுத்தம் (Portal hypertension) என்பது ஈரல் வாயில் நாளம் மற்றும் மண்ணீரல் நாளம், மேற்குடல் நடுமடிப்பு நாளம் போன்ற சமிபாட்டுத்தொகுதி சிரைகள் அடங்கிய ஈரல் வாயில் நாளத் தொகுதியில் மிகையாக ஏற்படும் குருதி அழுத்தமாகும். ஈரல் வாயில் நாளம் மற்றும் கீழ்ப் பெருநாளம் ஆகியனவற்றிற்கு இடையேயான அழுத்த மாறல் விகிதம் ஐந்திற்கும் கூடுதலாக (≥5 mmHg) உள்ள பட்சத்தில் ஈரல் வாயினாள மிகையழுத்தம் ஏற்படுகின்றது.[1] இதனால் நீர்க்கோவை, இரையகக் குடலிய குருதிப்போக்கு, கல்லீரல்நோய் மூளைக்கோளாறு, குருதி உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவடைதல் என்பன உருவாகின்றன.

காரணிகள்[தொகு]

ஈரல் வாயினாள மிகையழுத்தம் உருவாகக் காரணமான பொதுவான உடல்நலக்குறைவு கல்லீரல் இழைநார் வளர்ச்சியாகும். ஈரல் வாயில் நாளத் தொகுதியின் அழுத்தம் குழலியத் தடை (Vascular resistance) மற்றும் குருதிப்பாய்ம ஓட்டம் என்பனவற்றால் தீர்மானிக்கப்படுகின்றது.[1] குழலியத் தடை அதிகரிப்பதால் அல்லது குருதிப்பாய்ம ஓட்டக்கொள்ளளவு அதிகரிப்பதால் ஈரல் வாயினாள மிகையழுத்தம் ஏற்படலாம். ஆனால், கல்லீரல் மிகையாக குருதியைச் சேகரிக்கும் ஆற்றல் கொண்டதால் குருதிப்பாய்ம ஓட்டக்கொள்ளளவு அதிகரிப்பதால் ஏற்படும் மிகையழுத்தம் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. குழலியத் தடை கல்லீரல் முற்பகுதியில் குருதியைக் கொண்டுவரும் ஈரல் வாயில் நாளத் தொகுதியில் ஏற்படுவதுடன் கல்லீரலிலும் அல்லது கல்லீரலின் பிற்பகுதியிலும் ஏற்படலாம்.

கல்லீரல் முற்பகுதியில் ஏற்படும் குழலியத் தடை[தொகு]

கல்லீரல் பகுதியில் ஏற்படும் குழலியத் தடை[தொகு]

 • கல்லீரல் இழைநார் வளர்ச்சி
 • மதுசாரக் கல்லீரல் நோய்கள் (கொழுமிய ஈரல்
 • கல்லீரல் அழற்சி
 • குருதித்தட்டையன் ஒட்டுண்ணி நோய் (Schistosomiasis)

கல்லீரல் பிற்பகுதியில் ஏற்படும் குழலியத் தடை[தொகு]

 • பட்-சியாரி கூட்டறிகுறி
 • இதயச்செயலிழப்பு

நோய் அறிகுறிகள்[தொகு]

பின்வரும் நோய் அறிகுறிகள் ஈரல் வாயினாள மிகையழுத்தத்தில் ஏற்படலாம்.

 • நீர்க்கோவை
 • பலவீனம் மற்றும் உடற்சோர்வு
 • மண்ணீரல் வீக்கமும் அதனால் குருதிச்சிறுதட்டுகள் எண்ணிக்கை குறைவும்
 • உணவுக்குழாய் சுருள்சிரை (Esophageal varices)
 • கப்புட் மெடூசா (மெடூசாவின் தலை) எனப்படும் புடைப்படைந்த முன் வயிற்று நாளங்கள்

உசாத்துணைகள்[தொகு]

 1. 1.0 1.1 Gerard M., Doherty (2010). Current Diagnosis & Treatment Surgery. McGraw-Hill. p. 527. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-163849-4. {{cite book}}: |access-date= requires |url= (help); Unknown parameter |Chapter= ignored (|chapter= suggested) (help); Unknown parameter |Edition= ignored (|edition= suggested) (help)