ஈரல் வாயில் நாளம்
ஈரல் வாயினாளம் | |
---|---|
![]() ஈரல் வாயினாளம் மற்றும் அதனது கிளைகள் | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | vena portae hepatis |
Drains from | சமிபாட்டுத் தொகுதி, மண்ணீரல், கணையம் |
Source | மண்ணீரல் நாளம், மேற்குடல் நடுமடிப்பு நாளம் , கீழ்க்குடல் நடுமடிப்பு நாளம் |
Drains to | liver sinusoid |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.681 |
மரு.பா.த | A07.231.908.670.567 |
Dorlands /Elsevier | v_05/12851372 |
TA | A12.3.12.001 |
FMA | 50735 |
உடற்கூற்றியல் |
ஈரல் வாயில் நாளம் அல்லது ஈரல் வாயினாளம் (Hepatic Portal Vein) என்பது இரைப்பை, பித்தப்பை, குடல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளில் இருந்து குருதியை கல்லீரலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு குருதிக் குழலிய அமைப்பாகும்.[1] சமிபாட்டுத்தொகுதியில் இருந்து ஈரல் வாயில் நாளம் மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படும் போசணைப் பொருட்கள் உள்ளடங்கிய குருதி, கல்லீரலில் வடிகட்டப்பட்டும் நச்சுப் பதார்த்தங்கள் நீங்கி சுத்திகரிக்கப்பட்டும் உடலின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. கல்லீரலுக்கு ஈரல் வாயினாளம் தவிர முறைமைக் கல்லீரல் நாடியும் குருதியை எடுத்துச் செல்கின்றது.
பொதுவாக நாளம் (சிரை) எனும் குருதிக் குழாய்கள் இதயத்துக்கு குருதியை எடுத்துச் செல்லும் அமைப்பாக உள்ளன. ஈரல் வாயில் நாளம் அவ்வாறில்லை எனும் காரணத்தால் மெய்யான நாளம் என்று கருதப்படுவதில்லை. மேற்குடல் நடுமடிப்பு நாளம் மற்றும் மண்ணீரல் நாளம் ஆகியனவற்றின் சேர்க்கையால் ஈரல் வாயினாளம் உருவாகின்றது. ஈரல் வாயினாளத்தில் குருதி அழுத்தம் மிகைப்படுவது ஈரல் வாயினாள மிகையழுத்தம் எனப்படுகின்றது.
உசாத்துணைகள்[தொகு]
- ↑ Gray's Anatomy. CHURCHILL LIVINGSTONE ELSEVIER. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2371-8.