குன்னத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
குன்னத்தூர் | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635306 |
குன்னத்தூர் (Kunnathur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்[தொகு]
குன்னத்தூரானது மத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 239 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
வரலாறு[தொகு]
தொல்லியல் எச்சங்கள்[தொகு]
குன்னத்தூரில் இருந்து கல்லாவி செல்லும் சாலையின் வலது புறத்தில், குன்னத்தூர் மேல் நிலைப் பள்ளியை அடுத்துள்ள ஈமக் காட்டில் 50 இக்கும் மேற்பட்ட கல்வட்ட வகைப் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன.[1]
பெயர் வரலாறு[தொகு]
கிபி 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குன்றத்தூர் மக்கள் பிராண உத்தார உலகன் என்பானுக்கு நிலம் கொடுத்தது குறிப்பிடபட்டுள்ளது. குன்றத்தூர் என்ற பெயரில் உள்ள றகரம் 'ன'கரமாகத் திரிந்து குன்னத்தூர் என பிற்காலத்தில் மருவியுள்ளது.[2]
ஆங்கிலேயர் காலம்[தொகு]
ஆங்கிலேயர் காலத்தில், ஊத்தங்கரை வட்டத்தின் தலைநகர் நிர்வாக காரணங்களினால் மாற்றபட்டபோது சிறிது காலம் ஊத்தங்கரை வட்டத்தின் தலைநகராக குன்னத்தூர் இருந்தது.[3]
மக்கள்வகைப்பாடு[தொகு]
2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 728 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3090 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1595, பெண்களின் எண்ணிக்கை 1495 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 60.1% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[4]
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
- குன்னத்தூர் சஞ்சீவராயசாமி கோயில்
- குன்னத்தூர் காளியம்மன் கோயில்
- குன்னத்தூர் மாரியம்மன் கோயில்
- குன்னத்தூர் விருபாட்சீஸ்வரர் கோயில்
- குன்னத்தூர் பட்டாளம்மன் கோயில்
மேற்கோள்[தொகு]
- ↑ த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். பக். 23.
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 118.
- ↑ த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். பக். 124.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Mathur/Kunnathur