உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியோன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கோரசிபார்மிசு
குடும்பம்:
அல்சிடினிடே
பேரினம்:
கால்சியோன்

சுவைன்சன், 1821
மாதிரி இனம்
Alcedo senegalensis[1]
லின்னேயஸ், 1766
சிற்றினம்

உரையினைக் காண்க

கால்சியோன் (Halcyon) என்பது மீன்கொத்திப் பேரினங்களுள் ஒன்றாகும். இது பேசரின் பறவைகளில் கேல்சைனினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்தது.

வகைப்பாட்டியல்

[தொகு]

1821ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கை ஆர்வலரும் கலைஞருமான வில்லியம் ஜான் சுவைன்சனால் கால்சியோன் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் மாதிரி இனத்திற்கு வன மீன்கொத்தி கால்சியோன் செனகலென்சிசு என்று பெயரிட்டார்.[2]

"கால்சியோன் " என்பது கிரேக்கப் புராணத்தில் பொதுவாக மீன்கொத்தியுடன் தொடர்புடைய ஒரு பறவையின் பெயர் ஆகும். இந்தப் பறவை கடலில் கூடு கட்டியதாகப் பழங்கால நம்பிக்கை இருந்தது. இது மிதக்கும் கூட்டில் முட்டையிடும் தன்மையுடையது. இரண்டு வார அமைதியான காலநிலைக்குப்பின் குளிர்காலம் தோன்றும் என எதிர்பார்க்கப்படும் தறுவாயில் இது முட்டையிடுகிறது. இந்த கட்டுக்கதையிலிருந்து அமைதி அல்லது அமைதிக்கான ஒரு சொல்லாக கால்சியோன் சொல் கருதப்படுகிறது.[3]

இந்த பேரினத்தில் 11 சிற்றினங்கள் உள்ளன:[4]

படம் அறிவியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
கால்சியோன் கோரமண்டா சிவப்பு மீன்கொத்தி கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா.
கால்சியோன் இமைனென்சிசு வெண்தொண்டை மீன்கொத்தி சினாய் கிழக்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் வழியாக பிலிப்பீன்சு வரை.
கால்சியோன் சயனோவென்ட்ரிசு ஜாவா மீன்கொத்தி ஜாவா மற்றும் பாலி
கால்சியோன் படியா பழுப்பு பின்புற மீன்கொத்தி மேற்கு துணை-சகாரா ஆப்பிரிக்கா.
கால்சியோன் பிலேட்டா கருப்பு தொப்பி கொண்ட மீன் மீன் கிழக்கு இந்தியா, சீனா, கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசியா
கால்சியோன் லுகோசெபாலா நரைத்தலை மீன்கொத்தி கேப் வெர்டே தீவுகள் ஆப்பிரிக்காவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து மொரிட்டானியா, செனகல் மற்றும் காம்பியா வரை, கிழக்கே எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் தெற்கு அரேபியா மற்றும் தெற்கே தென்னாப்பிரிக்கா வரை.
கால்சியோன் அல்பிவென்ட்ரிசு பழுப்பு கிரீட மீன்கொத்தி துணை-சஹாரா ஆப்பிரிக்கா
கால்சியோன் செலிகுட்டி கோடுடைய மீன்கொத்தி துணை-சஹாரா ஆப்பிரிக்கா
கால்சியோன் மாலிம்பிகா நீல மார்பு மீன்கொத்தி பூமத்திய ரேகை ஆப்பிரிக்கா
கால்சியோன் செனகலென்சிசு வன மீன்கொத்தி சகாராவுக்கு தெற்கே ஆப்பிரிக்கா.
கால்சியோன் செனகலாய்டுகள் அலையாத்தி மீன்கொத்தி சோமாலியா, தெற்கே கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பிக்கிலிருந்துதென்னாப்பிரிக்கா வரை

மேலும் பெலர்கோப்சிசு, சைமா மற்றும் தோதிராம்பசு பேரினங்களை கால்சியோன் குழுவுடன் இணைத்து இக்குழுவினை பெரிய குழுவாக பிரை & பிரை தகவல் தெரிவிக்கின்றார்.

புவியியல் பரவல்

[தொகு]

கால்சியோன் பேரினம் தற்போது ஆப்பிரிக்காவின் சகாரா துணைப்பகுதிகளிலும் ஓரிரு சிற்றினங்கள் தென் ஆசியாவிலும் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று, வெண்தொண்டை மீன்கொத்தி, இது எப்போதாவது ஐரோப்பாவில் காணப்படும். வெண்தொண்டை மற்றும் சிவப்பு மீன்கொத்தி பகுதி வலசை மேற்கொள்பவையாக உள்ளன.

வாழிடம்

[தொகு]

கால்சியன் மீன்கொத்திகள் அதிக எடை கொண்ட பெரிய பறவைகள். இவை பல்வேறு வாழிடங்களில் காணப்படுகின்றன. பல்வேறு வகையான வனப்பகுதிகள் பெரும்பாலான சிற்றினங்களின் விருப்பமான சூழலாக உள்ளன. இவை பெரிய பூச்சிகள், கொறிணிகள், பாம்பு மற்றும் தவளை உள்ளிட்ட சிறிய தரை விலங்குகளை "உட்கார்ந்து காத்திருந்து" வேட்டையாடுகின்றன. ஆனால் சில மீன்களையும் வேட்டையாடுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alcedinidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
  2. Swainson, William John (1821). Zoological illustrations. Vol. Volume 1. London: Baldwin, Cradock, and Joy; and W. Wood. Plate 27 text. {{cite book}}: |volume= has extra text (help)
  3. "Halcyon days". The Phrase finder. பார்க்கப்பட்ட நாள் 2008-01-11.
  4. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியோன்&oldid=3786771" இலிருந்து மீள்விக்கப்பட்டது