கமுந்திங் தடுப்பு மையம்
இடம் | கமுந்திங், பேராக், மலேசியா |
---|---|
அமைவு | 4°54′33″N 100°44′13″E / 4.90917°N 100.73694°E |
நிலை | செயலில் உள்ளது |
பாதுகாப்பு வரையறை | மிகைத் தடுப்பு (Supermax) |
கொள்ளளவு | - |
கைதிகள் எண்ணிக்கை | 2,770 |
திறக்கப்பட்ட ஆண்டு | 14 நவம்பர் 1973 |
முந்தைய பெயர் | - |
நிருவாகம் | மலேசிய உள்துறை அமைச்சு |
இயக்குனர் | சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் |
கமுந்திங் தடுப்பு மையம் (ஆங்கிலம்: Kamunting Detention Centre (KEMTA); மலாய்: Kem Tahanan Perlindungan Kamunting; சீனம்: 甘文丁拘留中心) என்பது மலேசியா, பேராக், கமுந்திங், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பு மையம் ஆகும். இதனை கமுந்திங் சிறை முகாம் என அழைப்பதும் உண்டு.[1]
இந்த மையம் 93.3 எக்டர் பரப்பளவைக் கொண்டது. தைப்பிங் நகரில் இருந்து ஏறக்குறைய 8 கி.மீ. தொலைவிலும், கமுந்திங் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act Malaysia) கீழ் கைது செய்யப்பட்ட நபர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அரசாங்கம் இந்தத் தடுப்பு மையத்தைப் பயன்படுத்துகிறது.[2]
பொது
[தொகு]இந்த தடுப்பு மையம், மலேசியாவின் மிகைத் தடுப்பு சிறை (Malaysia's Supermax Prison) அல்லது அதிகபட்ச பாதுகாப்புச் சிறை (Maximum Security Prison) என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் மலேசிய அதிகாரிகள் அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் தளம் என்றும் கூறப்படுகிறது.[3]
மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பரவலான பயன்பாட்டைத் தூண்டிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் 1987-இல் லாலாங் நடவடிக்கை (Operation Lalang); மற்றும் 1999-இல் சீர்திருத்த இயக்கம் (Reformasi Movement) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[4]
அல்-அர்க்காம் அல்-மவுனா குழுக்கள்
[தொகு]பயங்கரவாதிகள் மற்றும் தவறான வழிபாட்டு முறைகள் போன்ற தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அறியப்பட்ட தனி நபர்களையும்; குழுக்களையும் தடுத்து வைப்பதற்கும் இந்த மையம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க குழுக்களில் அல்-அர்க்காம் (Al-Arqam) குழு மற்றும் அல்-மவுனா (Al-Ma'unah) பயங்கரவாதக் குழுவும் அடங்கும்.
முக்கிய நபர்கள்
[தொகு]- அன்வர் இப்ராகீம் - மலேசியப் பிரதமர்
- லிம் கிட் சியாங் - எதிர்க்கட்சி தலைவர்
- செப்ரி கித்திங்கான் - சபா மாநில துணை முதல்வர்
- கர்பால் சிங் - எதிர்க்கட்சி தலைவர்
- பி. பட்டு - அரசியல்வாதி
- வி. டேவிட் - தொழிற்சங்கவாதி
- ஐரீன் சேவியர் - பெண் உரிமை போராளி
- ஜெயக்குமார் தேவராஜ் - மலேசிய சோசலிச கட்சி தலைவர்
- வேதமூர்த்தி பொன்னுசாமி - இண்ட்ராப் போராட்டக் குழு
- கணபதிராவ் விருமன் - இண்ட்ராப் போராட்டக் குழு
- சிவராசா ராசையா - மனித உரிமை
- எம். மனோகரன் - இண்ட்ராப் போராட்டக் குழு
- உதயகுமார் பொன்னுசாமி - இண்ட்ராப் போராட்டக் குழு
- சாமிநாதன் கணேசன் - இலங்கைத் தமிழர்களின் அனுதாபி
- லிம் குவான் எங் - பினாங்கு முன்னாள் முதலமைச்சர்
- முகமது சாபு - மலேசிய தற்காப்புத்துறை அமைச்சர்
- திரேசா கோக் - மலேசிய தோட்டத் தொழில்; மூலப் பொருட்கள் அமைச்சர்
மேற்கோள்
[தொகு]- ↑ Tempat Tahanan Perlindungan, prison.gov.my
- ↑ "Detention without trial against human rights, Suhakam says on Sosma". MalaysiaNow (in ஆங்கிலம்). 16 December 2022. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "Kamunting Camp Torment: Life story under ISA". பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "M'sian Politicians Who Have Been Imprisoned Or Detained. Here's A Look Back At History". பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.