உள்ளடக்கத்துக்குச் செல்

கப்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்சா
மாற்றுப் பெயர்கள்Kabsah (அரபு மொழி: كبسة‎), makbūs/machbūs (அரபு மொழி: مكبوس/مچبوس‎)
பரிமாறப்படும் வெப்பநிலைமதிய உணவு
தொடங்கிய இடம்சவுதி அரேபியா
பகுதிஅரேபிய தீபகற்பம்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி (பொதுவாக பாசுமதி அரிசி), கோழி, காய்கறி, மசாலா கலவை (ஏலம், குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, எலுமிச்சை, பிரியாணி இலை

கப்சா (Kabsa)(அரபு மொழி: كبسةகப்சா) என்பது கலப்பு அரிசி உணவாகும். இது சவுதி அரேபியாவில் உருவான உணவாகும். ஆனால் இன்று பொதுவாக வளைகுடா நாடுகளில் பல அரபு நாடுகளில் தேசிய உணவாகக் கருதப்படுகிறது.

இந்த உணவானது அரிசி மற்றும் இறைச்சி கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சவுதி அரேபியா, குவைத்து, பகுரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், யெமன், தெற்கு ஈராக்கு, அகுவாசு (ஈரான்) மற்றும் இசுரேலில் உள்ள நெகேவ் பாலைவனம் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இந்த உணவானது பிரபலமாக மக்பூசு/மச்பூசு makbūs / machbūs என்று அறியப்படுகிறது مكبوس/مچبوس வளைகுடா pron .: [mɑtʃˈbuːs])

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த சொல்லானது கபாசா (அரபு மொழி: كبس‎ ), எனும் சொல்லிலிருந்து தோன்றியதாகும். இதற்கு அழுத்து அல்லது பிழி என்பது பொருள்; இது சமையலில் பயன்படுத்தப்படும் நுட்பத்தைக் குறிப்பிடுகிறது. இங்குச் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் ஒரு பானையில் சமைக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்[தொகு]

இந்த உணவு பொதுவாக அரிசி (பாசுமதி), இறைச்சி, காய்கறிகள் மற்றும் மசாலா கலவையுடன் தயாரிக்கப்படுகின்றன. பல வகையான கப்சாக்கள் உள்ளன. ஒவ்வொரு வகையும் தனித்துவம் மிக்கது. கலந்து தயாரிக்கப்பட்ட கப்சா மசாலா கலவை இப்போது வணிகரீதியாகத் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் கிடைக்கின்றன. இதனால் தயாரிப்பு நேரம் குறைக்கின்றன. இவை பாரம்பரிய கப்சாவிலிருந்து மாறுபட்ட சுவையைக் கொண்டிருக்கின்றன. கப்சாவில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் பெரும்பாலும் அதன் சுவைக்குக் காரணமாகின்றன; இவை பொதுவாகக் கருப்பு மிளகு, கிராம்பு, ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, எலுமிச்சை, பிரியாணி இலைகள் மற்றும் ஜாதிக்காய்.[1] மசாலாப் பொருட்களுடன் பயன்படுத்தப்படும் மிகமுக்கிய மூலப்பொருள் இறைச்சி. பொதுவாகக் கோழி, ஆடு, ஆட்டுக்குட்டி, ஒட்டகம், மாட்டிறைச்சி, மீன் அல்லது இறால் பயன்படுத்தப்படுகிறது. சிக்கன் மச்சபசில், முழு கோழி பயன்படுத்தப்படுகிறது. மசாலா, அரிசி மற்றும் இறைச்சி கலவையானது பாதாம், பைன் கொட்டைகள், வேர்க்கடலை, வெங்காயம் மற்றும் உலர்திராட்சை போன்ற மசாலா பொருட்களால் சுவையூட்டப்படுகிறது.[2] சூடாகப் பரிமாறப்படும் கப்சா வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒருவகை தக்காளி சட்னி கலந்து பயன்படுத்தப்படுகிறது .

சமைக்கும் முறைகள்[தொகு]

பாரசீக வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில் கப்சா மச்ச்பாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

கப்சாவில் பயன்படுத்தப்படும் இறைச்சியை பல்வேறு வழிகளில் சமைக்கலாம். இறைச்சி தயாரிப்பதற்கான பிரபலமான வழி மண்டி என்று அழைக்கப்படுகிறது. இது யேமனில் தோன்றிய ஒரு பழங்கால நுட்பமாகும். இம்முறையில் இறைச்சியினை மூடப்பட்டிருக்கும் நிலத்தின் ஆழமான துளை ஒன்றில் இறைச்சியானது பார்பிக்யூ செய்யப்படுகிறது. கப்சாவுக்கு இறைச்சியைத் தயாரித்துப் பரிமாறுவதற்கான மற்றொரு வழி மத்த்பி ஆகும். இங்குப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியானது தட்டையான கற்களில் வறுக்கப்படுகிறது. இவை எரியும் எம்பர்களின் மேல் வைக்கப்படுகின்றன. மூன்றாவது நுட்பம், மேட்கட், அழுத்தக் சமைப்புக் கலனில் (குக்கரில்) இறைச்சியைச் சமைப்பதாகும்.

மேலும் காண்க[தொகு]

  • அரபு உணவு
  • மண்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Al Kabsa - Traditional Rice dish". Food.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2012.
  2. "How to Make Kabsa". Archived from the original on 17 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 23 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்சா&oldid=3928538" இலிருந்து மீள்விக்கப்பட்டது