கோழிக் கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழிக்கறி
கணப்படுப்பில் வறுத்த ரோசுமேரி மற்றும் லெமன் கோழிக்கறி
பரிமாறப்படும் வெப்பநிலைதுவக்க உணவு, முதன்மை உணவு, தொடுகறி
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாகவும் குளிர்ந்தும்
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
120 கலோரிகள் வரை கலோரி
கோழிக்கறி, கறிக்கோழி, இறைச்சியும் தோலும்,சமைத்த, வேகவைத்த
உணவாற்றல்916 கிசூ (219 கலோரி)
0.00 கி
12.56 கி
நிறைவுற்றது3.500 கி
ஒற்றைநிறைவுறாதது4.930 கி
பல்நிறைவுறாதது2.740 கி
24.68 கி
டிரிப்டோபான்0.276 கி
திரியோனின்1.020 கி
ஐசோலியூசின்1.233 கி
லியூசின்1.797 கி
லைசின்2.011 கி
மெத்தியோனின்0.657 கி
சிஸ்டைன்0.329 கி
பினைல்அலனின்0.959 கி
தைரோசைன்0.796 கி
வாலின்1.199 கி
ஆர்கினைன்1.545 கி
ஹிஸ்டிடின்0.726 கி
அலனைன்1.436 கி
அஸ்பார்டிக் அமிலம்2.200 கி
குளூட்டாமிக் காடி3.610 கி
கிளைசின்1.583 கி
புரோலின்1.190 கி
செரைன்0.870 கி
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(6%)
44 மைகி
(13%)
0.667 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
இரும்பு
(9%)
1.16 மிகி
சோடியம்
(4%)
67 மிகி
நீர்63.93 கி

35% எலும்புகளை கணக்கிலெடுக்காது.
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

கோழி உலகின் கோழியினங்களில் மிகவும் பரவலான ஓர் வகையாகும்,[1] மற்றும் கோழிக்கறியாக பல நாடுகளிலும் பண்பாடுகளிலும் பல்வேறு வகைகளில் உணவாக சமைக்கப்படும் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

தற்கால கோழி பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதிகளில் இருந்த சிவப்பு காட்டுக்கோழி மற்றும் சாம்பல் காட்டுக்கோழிகளிலிருந்து வந்தவை ஆகும்.[2]

கி.மு 600களில் பாபிலோனின் ஓவியங்களிலேயே கோழிக்கறி சித்தரிக்கப்பட்டுள்ளது.[3] சங்க இலக்கியங்களில் வீட்டில் கோழி வளர்க்கும் குறிப்புகள் உள்ளன. கோழியும் வெங்காயமும் பாலில் வேகவைக்கப்பட்டு சர்க்கரை,நறுமணப்பொருட்களுடன் ஐரோப்பாவில் "வெள்ளை உணவு" (Blancmange) என பரிமாறப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது ஐக்கிய அமெரிக்காவில் மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் அரிதான காரணத்தால் கோழிக்கறி நுகர்வு கூடியது.[4] ஐரோப்பாவிலும் 1996இல் பித்தப்பசு நோய் பயத்தால் மாட்டிறைச்சியை விட கூடுதலாக கோழிக்கறி நுகரப்பட்டது.[5]

வளர்ப்பு[தொகு]

தற்கால கோழி வகைகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஒரு கோழிக்கு கொடுக்கப்படும் உணவிற்கும் அது கொடுக்கும் இறைச்சிக்கும் உள்ள தொடர்பு முக்கியமாகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பரவலான வகைகளாக கார்னிஷ் மற்றும் வெள்ளை ராக் வகைகள் உள்ளன.[6]

உணவிற்காக வளர்க்கப்படும் கோழிகள் கறிக்கோழிகள் என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை இளவயதிலேயே கொல்லப்படுகின்றன. கோழி வறுவலுக்கு எட்டு வாரங்களிலிருந்து 12 வாரங்களில் கொல்லப்படுகின்றன. விரைநீக்கப்பட்ட சேவல்கள் கொழுப்புமிக்கதும் கூடுதலாகவும் இறைச்சியைத் தருகின்றன. இவை நடுக்காலங்களில் மிகவும் விரும்பி உண்ணப்பட்டன.

உடல்நலக் கேடுகள்[தொகு]

கோழி இறைச்சியில் மற்ற சிவப்பு இறைச்சிகளைவிட, எடையின் சதவீதமாக அளக்கும்போது, இரண்டு முதல் மூன்று மடங்கு கூடுதலாக பல்நிறைவுறா கொழுப்பு கொண்டுள்ளது.[7]

கோழியின் இறைச்சியில் (விரைநீக்கப்பட்ட சேவல்கள் நீங்கலாக) பொதுவாக கொழுப்புக் குறைவாகும். அதன் தோலில்தான் கொழுப்பு அடர்த்தியாக உள்ளது. குறைந்த கொழுப்பு உண்பவர்கள் கோழித்தோலை அகற்றிட வேண்டும். சமைக்கும் விதமும் கோழிக்கறி எந்தளவிற்கு உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை தீர்மானிக்கிறது. தோல் நீக்கி நீராவியில் வேகவைத்த உணவு உடல்நலத்திற்கு உகந்ததாகவும் மாறுபக்க கொழுப்புள்ள எண்ணெய்களில் வறுத்தெடுத்த கோழிக்கறி ஊறு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.

அண்மைக்காலங்களில் பறவைக் காய்ச்சல் பரவலுக்கு கோழி உண்பது காரணமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "FAOSTAT: ProdSTAT: Livestock Primary". Food and Agriculture Organization. 2007. பார்க்கப்பட்ட நாள் 01-11-2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[Full citation needed]
  2. Eriksson J, Larson G, Gunnarsson U, Bed'hom B, Tixier-Boichard M, et al. (2008) Identification of the Yellow Skin Gene Reveals a Hybrid Origin of the Domestic Chicken. PLoS Genet January 23, 2008 [1] பரணிடப்பட்டது 2012-05-25 at Archive.today.
  3. Chicken facts and origins at Poultrymad
  4. Poultry Farming, The History Channel. March 2, 2007.
  5. BBC survey another blow against UK chicken
  6. Focus On: Chicken பரணிடப்பட்டது 2004-05-19 at the வந்தவழி இயந்திரம், USDA. March 2, 2007.
  7. Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் Northwestern University. Retrieved on August 24, 2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்_கறி&oldid=3773431" இலிருந்து மீள்விக்கப்பட்டது