வளைகுடா அரபு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளைகுடா அரபு மொழி
நாடு(கள்)குவைத், சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதி, பகரேன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமானின் பகுதிகள்
அரபு எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-3afb

காலிஜி, அல்-லகுஜா, அல்- காலிஜியா போன்ற பெயர்களாலும் அறியப்படுகின்ற வளைகுடா அரபு மொழி பாரசீக வளைகுடாவின் இரு கரைகளிலும் பேசப்படுகின்ற ஒரு வகை அரபு மொழி ஆகும். இது குவைத், சவூதி அரேபியா, பகரேன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமானின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் புழக்கத்தில் உள்ளது.[1] சிறிய அளவிலான பாரசீக மொழிக் கடன் சொற்களும், சில எழுத்துக்களுக்கான ஒலி வேறுபாடுகளும் இதனைப் பிற அரபு மொழிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. பிற அரபு மொழிகளில் என்று ஒலிக்கப்படுவது வளைகுடா அரபு மொழியில் (ச்)ச என்று ஒலிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக "நாய்" என்ற பொருள்படும் கால்ப் என்னும் சொல் இங்கே (ச்)சால்ப் என்று ஒலிக்கப்படுகின்றது. இதுபோலவே (க்)க, க(g) ஆகவும், சில இடங்களில் , எனவும் ஒலிக்கப்படுகின்றது.

குறிப்புக்கள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகுடா_அரபு_மொழி&oldid=1354721" இருந்து மீள்விக்கப்பட்டது