உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கலேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கலேரி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,242
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635122

கங்கலேரி (GANGALERI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கெங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது கிருஷ்ணகிரி- இராயக்கோட்டைச் சாலையில் உள்ளது. இந்த ஊர் கிருஷ்ணகிரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 766 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3242 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1617, பெண்களின் எண்ணிக்கை 1625 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 62.0 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

வரலாற்றுச் சின்னங்கள்

[தொகு]

தென்பெண்ணை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள கங்கலேரி மலையின் அடிவாரத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஏழு கல்பதுக்கைகள் உள்ளன. கிழக்கு நோக்கி உள்ள இவை அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இங்கு இருவேறுபட்ட வடிவங்களில் கல்வட்டங்கள் உள்ளன.[3]

ஊரில் உள்ள பள்ளிகள்

[தொகு]

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Gangaleri
  3. த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 126. {{cite book}}: Check date values in: |year= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கலேரி&oldid=3752962" இலிருந்து மீள்விக்கப்பட்டது