உள்ளடக்கத்துக்குச் செல்

இரெசுவரட்ரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெசுவெரட்ரால்
Resveratrol
டிரான்சு-இரெசுவெரட்ராலலின் வேதிய அமைப்பு
டிரான்சு-இரெசுவெரட்ராலலின் வேதிய அமைப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
trans-3,5,4'-Trihydroxystilbene;
3,4',5-Stilbenetriol;
டிரான்சு-இரெசுவெரட்ரால்;
(E)-5-(p-Hydroxystyryl)resorcinol (E)-5-(4-hydroxystyryl)benzene-1,3-diol
இனங்காட்டிகள்
501-36-0
ChemSpider 392875
InChI
  • InChI=1/C14H12O3/c15-
    12-5-3-10(4-6-12)
    1-2-11-7-13(16)9-
    14(17)8-11/h1-9,15-
    17H/b2-1+
யேமல் -3D படிமங்கள் Image
  • Oc2ccc(C=Cc1cc(O)cc(O)c1)cc2
பண்புகள்
C14H12O3
வாய்ப்பாட்டு எடை 228.25
தோற்றம் வெண்ணிறப் பொடி
சிறிதளவு மஞ்சள் சாயல்
நீர்-இல் கரைதிறன் 0.03 கி/லி (g/L)
DMSO-இல் கரைதிறன் 16 கி/லி (g/L)
[[எத்தனால்]]-இல் கரைதிறன் 50 கி/லி (g/L)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரெசுவெரட்ரால் (Resveratrol) (டிரான்சு- இரெசுவெரட்ரால்) என்னும் வேதிப்பொருள், இயற்கையில் செடிகொடிகளில் நோய்த்தடுப்புப் பொருளாக (செடிநோயெதிர்ப்பியாக (phytoalexin)) இருக்கும் ஒரு பொருள். இசுவெரட்ரால் 14 கரிம அணுக்கள் கொண்ட ஒரு வேதிப்பொருள். இதில் மூன்று -OH குழுக்கள் இரண்டு பென்சீன் போன்ற அறுகோண வளையத்துடன் இணைந்துள்ளன. இச் சேர்மத்தின் மூலக்கூறு எடை 228.243.

பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளும் பூஞ்சைக் காளான்கள் போன்றவையும் செடிகொடிகளைத் தாக்கி நோயுண்டாக்கும் பொழுது இரெசுவெரட்ரால் என்னும் பொருள் செடிகொடிகளில் எதிர்விளைவாக உருவாகின்றது. இரெசுவெரட்ராலை செயற்கையாக வேதியியல் முறையிலும் உருவாக்கலாம் [1].; இதனை நிப்பான் நாட்டில் உள்ள பாலிகோனம் கசுப்பிடாட்டம் (Polygonum cuspidatum )என்னும் மூங்கில் போன்ற செடியில் இருந்து பிரித்தெடுத்து விற்கிறார்கள். இரெசுவெரட்ராலின் பயன்பாட்டால் புற்றுநோய்தடுப்புப் பண்புகளும், நல் இதய, குருதியோட்ட இயக்கப் பண்புகளும் வளமுறுகின்றன என்று சுண்டெலிகளில் செய்த ஆய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இம்முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்பது இன்னும் முடிவாகவில்லை. மனிதர்களில் செய்த ஓராய்வின், படி மிகக்கூடுதலான அளவு (3–5 g) இரெசுவெரட்ரால் தந்ததின் விளைவாக குருதி இனியம் (குருதிச் சக்கரை) குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.[2]. இரெசுவெரட்ரால் திராட்சையில் தோலில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது திராட்சைச் செங்கள்ளில் (சிவப்பு ஒயின்) உள்ள ஒரு பொருள் என்றாலும் பிரான்சிய முரண்புதிர் (French paradox) என்பதை விளக்கும் அளவுக்குக் கூடுதலான அளவில் இல்லை. இரெசுவெரட்ரால் உட்கொண்டால் வாழ்நாள் நீளுவதாக வீட்டு ஈ, நெமட்டோடு (Nematode) என்னும் புழு, குறுகிய காலமே வாழும் ஒருவகை மீன் ஆகியவற்றில் செய்முறை ஆய்வுகளின்வழி நிறுவியுள்ளனர், ஆனால் சுண்டெலிகளில் வாழ்நாள் நீட்டத்தை நிறுவவில்லை.

வாழ்நாள் நீட்டிப்பு

[தொகு]

ஓரோவிட்ஃசு (Howitz), சின்க்ளேர் (Sinclair) ஆகியோர்களின் குழுக்கள் 2003 இல் நேச்சர் (Nature) என்னும் ஆய்விதழில் அறிவித்தவாறு இரெசுவெரட்ராலின் பயன்பபட்டால் சாக்கரோமைசசு செரெவிசியீ (Saccharomyces cerevisiae) என்னும் இயீசுட்டின் (yeast) வாழ்காலம் கூடுகின்றது என்று நிறுவினர்.[3] பின்னர் சின்க்ளேர் செய்த ஆய்வின் படி இரெசுவெரட்ரால் பயன்பாட்டால் கேனோராபுடிட்டிசு எலெகான்சு (Caenorhabditis elegans) என்னும் புழுவின் வாழ்காலமும், வீட்டு ஈயாகிய டிரொசோவிலியா மெலனோகாசிட்டரின் (Drosophila melanogaster) வாழ்காலமும் நீண்டதாக நிறுவினார்.[4] 2007 இல் வேறு ஒரு குழுவும் சின்க்ளேரின் புழுவின் (கேனோராபுடிட்டிசு எலெகான்சு (Caenorhabditis elegans)) வாழ்கால ஆய்வுமுடிவுகளை மீண்டும் செய்து காட்டி உறுதிப்படுத்தினர்[5] ஆனால் மூன்றாவது ஒரு குழு செய்த ஆய்வின் படி வீட்டு ஈயாகிய டி. மெலனோகாசிட்டரின் (D. melanogaster) வாழ்கால நீட்டத்தையோ, கே. எலெகான்சு (C. elegans) என்னும் புழுவின் வாழ்காலத்தின் நீட்டதையோ உறுதி செய்ய இயலவில்லை.[6]

2006 இல் இத்தாலிய அறிவியலர் முதன்முதலாக இரெசுவெரட்ரால் ஊட்டத்தால் முதுகெலும்பி உயிரி ஒன்றில் வாழகால நீட்டத்தை நிறுவினர். பொதுவாக குறைந்த காலமே உயிர்வாழும் மீனினமாகிய நோத்தோபிரான்க்கியசு ஃவுர்சேரி (Nothobranchius furzeri) என்னும் மீனின் இடைநிலை (median) வாழ்காலமாகிய 9 கிழமைகள் (வாரங்கள்) என்பது உயரெல்லையான இரெசுவெரட்ரால் ஊட்டத்தால், 56% கூடியது என்று காட்டினர். அதுமட்டுமல்லாமல் இரெசுவெரட்ரால் ஊட்டம் பெற்ற மீன்கள் கூடுதலான நீச்சல் நடவடிக்கை கொண்டதாகவும், துன்பம் தரும் சூழல்களை கூடிய திறனுடன் கற்றுக்கொளும் தன்மை உடையதாகவும் இருந்ததாகக் கண்டனர்.[7]

அவ்வாண்டின் பிற்பகுதியில் சின்க்ளேர் அறிவித்தபடி அதிக கொழுப்புச் சத்துணவு உட்கொள்ளும் எலிகளில் இருக்கவேண்டிய கெடுதியான விளைவுகள் இரெசுவெரட்ரால் ஊட்டத்தால் குறைந்திருந்தது. இத்தனைக்கும் வழக்கமான திட்ட சத்துணவு உட்கொள்ளும் எலிகளை ஒப்பிடும் பொழுது அதிக கொழுப்புச் சத்துணவு உட்கொள்ளும் எலிகளின் உணவில் ஐதரசனேற்றம் பெற்ற தேங்காய் எண்ணெய் சேர்ந்திருந்தது, இதனால் அவ்வெலிகள் பெற்ற ஆற்றலில் 60% கொழுப்பில் இருந்து பெற்றன, 30% கூடுதலான காலரிகளும் பெற்றன. இவ்விரண்டு குழுவான எலிகளுக்கும் 22 mg/kg என்னும் அளவில் இரெசுவெரட்ரால் தரப்பட்டது. இதனால் 30% குறைவான இறப்பு வாய்ப்புகள் இருந்தன. இரெசுவெரட்ரால் தரப்பட்டதால் பொதுவாக அதிக கொழுப்புடைய உணவு உட்கொள்வதால் மரபணுவழி நிகழக்கூடிய 155 உயிர்வேதியியல் மாற்றங்களில் 144 மாற்றங்கள் தடுக்கப்பட்டன என்று கண்டனர். இரெசுவெரட்ராலோடு அதிக கொழுப்புணவு உட்கொள்ளும் எலிகளில் இன்சுலின், குளுக்கோசு மட்டங்கள் (அளவுகள்), வழக்கமான உணவு உட்கொள்ளும் எலிகளின் மட்டங்களுக்கு நெருக்கமானதாக இருந்தன. ஆனால் இரெசுவெரட்ரால் சேர்க்கப்பட்டதால் கொலசிட்ரால் அளவும் வினையுறு கொழுப்பிய காடிகளின் (free fatty acids) அளவும் மாறவில்லை (அதிக கொழுப்புணவு உட்கொள்ளும் எலிகளில் இவை வழக்கமான உணவு உட்கொள்ளும் எலிகளில் இருந்ததை விட அதிகமாகவே இருந்தன).[8]

புற்றுநோய்த் தடுப்பு

[தொகு]

1997 இல் காய் யாங் என்பவர் புற்றுநோய் ஊட்டிகள் தந்திருந்த சுண்டெலிகளுக்கு இரெசுவெரட்ரால் கொடுத்து வந்தபொழுது அவற்றுக்கு தோல் புற்றுநோய் வராமல் தடுத்தது என்று காட்டினர் [9] இரெசுவெரட்ராலின் புற்றுநோய்த்தடுப்புப் பண்பும் இயக்கமும் விலங்குகளை மாதிரியாகக் கொண்ட பல ஆய்வுகளால் நிறுவப்பட்டுள்ளன.[10] ஆனால் மனிதர்களிடையே இவ்வகையான மருத்துவ முறை ஆய்வு முடிவுகள் ஆதும் அறிவிக்கப்படவில்லை.[11] ஆனால் மெலானோமா என்னும் தோல் புற்று நோய்க்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் இரெசுவெரட்ராலால் விளையும் பயனைப் பற்றி மருத்துவ ஆய்வு செய்ய நோயாளிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள் (2008 இல்)[12].

உடலுக்கு வெளியே செய்து பார்த்த ஆய்வுகளின் படி இரெசுவெரட்ராலாலின் இயக்கம், தோல், முலை, பெருங்குடல், மூச்சுக்குழல், விந்துப்பை (prostate), இரைப்பை, கணையம் ஆகியவற்றில் தோன்றும் புற்றுநோய் உயிரணுக்களில் (கண்ணறைகளில்) குணப்படுத்து முகமான விளைவுகள் காணப்பட்டன. இதே போல லூக்கேமியா என்னும் குருதிப் புற்றுநோய் வகையிலும் முன்னேற்றம் இருந்தது.[10] ஆனால், மனிதர்களில் செய்த ஆய்வின் படி புற்றுநோய் தடுப்புக்குத் தேவையான அலவு இரெசுவெரட்ரால் சென்றடையவில்லை என்ற முடிவுக்கு வந்தனர்[13]. இம்முடிவுகள் உயிருள்ள விலங்குகளை மாதிரிகளாகக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளுடன் ஒத்திணக்கம் உடையதாக உள்ளன. இரெசுவெரட்ராலின் பயன்திறன் அது உடலியக்கத்தில் தேவைப்படும் இடத்தில் கிடைக்கும் (bioavailability) குறைந்த விகிதத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது..[11][14] [15]

சுண்டெலிகளின் உடலின் புறப்பகுதியின் வழியே செலுத்திய (topical application) இரெசுவெரட்ரால், அவ்வெலிகள் புறவூதாக் கதிர்கள் (B வகை புறவூதாக் கதிர்கள்: UVB 320-280 நானோமீட்டர்) பெறுவதற்கு முன்னும் பின்னும் தோலில் ஏற்படும் அழிவைத் தடுத்தது. அதே போல தோல புற்றுநோய் தோன்றுவதையும் தடுத்தது. ஆனால் வாய்வழியாக உட்செலுத்திய இரெசுவெரட்ராலால் மெலானோமா (தோல் புற்றுநோய்) ஊட்டிய சுண்டெலிகளுக்கு எதிர்பார்த்த நற்பயன் ஏதும் தரவில்லை. இதே போல வாய்வழியாகத் தந்த இரெசுவெரட்ராலால், சுண்டெலிகளில் நுரையீரல் புற்றுநோய், குருதி புற்றுநோய் (லூக்கேமியா) ஆகியவற்றிலும் நற்பயன் ஏதும் விளையவில்லை.[11][16]

இரெசுவெசுட்ராலும் சக்கரைநோயும்

[தொகு]

சென்னையை சேர்ந்த ஆய்வாளர்கள் பால்சாமியும் சுப்பிரமணியனும், சக்கரைநோய் உள்ள எலிகளில் செய்த ஆய்வுகளின் பயனாய் இரெசுவெசுட்ராலுக்கு உயர் சக்கரைநிலையைத் தடுக்கும் பண்பு இருப்பதாக அறியமுடிகின்றது. அவர்கள் ஆய்வில் இசுட்ரெப்டோசின்-நிக்கொட்டினமைடு ஊட்டப்பட்ட (streptozotocin-nicotinamide-induced ) செய்முறை சோதனைக்கான சக்கரைநோய் எலிகளுக்கு அவற்றின் உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 5 மில்லிகிராம் என்னும் விகிதத்தில் வாய்வழியாக இரெசுவெசுட்ராலை 30 நாட்களுக்குத் தந்தபின் அவ்வெலிகளின் குருதி குளூக்கோசு இனியம் (குருதிச் சக்கரை), பிளாசுமா இன்சுலின், கிளைக்கோசைலேட்டடு ஈமோகுளோபின், AST, ALP, ALT ஆகியவை சீரடைந்தன[17] இரெசுவெசுட்ரால், சக்கரைநோயுள்ள எலிகளின் கல்லீரலிலும், சிறுநீரக திசுக்களிலும் நிகழும் மாவுச்சத்துப் பொருள்களை வளர்சிதை மாற்றம் செய்யும் நொதியத்தை கட்டுப்படுத்துகின்றது என்றும் அறிந்தனர். சோதனை எலிகளில், செய்த இவ்வாய்வுகளின் பயனால் இரெசுவெசுட்ராலுக்கு சக்கரைநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக அறிய முடிகின்றது.[18]

மற்ற பயன்பாடுகள்

[தொகு]

பிரான்சு நாட்டைச் சேர்ந்த இழ்சோஆன் ஓவெர்க் (Johan Auwerx) (பிரான்சில் உள்ள இல்க்கிரிழ்ச் நகரில் இருக்கும் மரபணு, மூலக்கூறு உயிரணு உயிரியல் கல்லூரி) என்பாரும் பிற ஆய்வாளர்களுடன் சேர்ந்து நவம்பர் 2006 இல் செல் என்னும் ஆய்விதழில் அறிவித்த கண்டுபிடிப்பின்படி 15 கிழமைகளுக்கு (வாரங்களுக்கு) இரெசுவெரட்ரால் ஊட்டப்பட்ட சுண்டெலிகள் நடைதள எந்திரத்தில் (treadmill) ஓடும் திறனில் கூடுதலான தாங்குதிறன் கொண்டிருந்தது. சின்க்ளேர் முன்னர் அறிவித்தவாறு சிர்ட்டூயின்-1 (Sirtuin 1) என்னும் மரபணுத் தொடர் (gene) தூண்டப்பட்டதே காரணம் என்னும் கருத்துக்கு இவ்வாய்வின் முடிவு வலு சேர்க்கின்றது.

நிக்கோலசு வேடு (Nicholas Wade) என்பவர் இழ்சோஆன் ஓவெர்க்கை நேர்காணல் கண்ட பொழுது கூறியவாறு,[19] சுண்டெலிகளுக்கு அதன் உடலெடையில் 400  மில்லிகிராம்/கிகி (mg/kg) என்னும் அளவில் தந்த இரெசுவெரட்ரால் சின்க்ளேர் தந்த 22  மில்லிகிராம்/கிகி என்னும் அளவைக்காட்டிலும் மிகக் கூடுதலானது. இதற்கு ஈடான மருந்தூட்ட அளவை மனிதர்களுக்குக் கொடுத்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் தீமைகளையும் அளவிடப்படவில்லை.

SIRT1 என்னும் மரபணுத் தொடரில் (SIRT1 gene) குறிப்பிட்ட வேறுபாடுகள் கொண்ட 123 முழுவளர்ச்சியடைந்த பின்லாந்திய தனியாட்களில் செய்த ஆய்வின்படியும் கூடுதலான வளர்சிதை மாற்றங்கள் அடைந்து, கூடுதலான திறனுடன் உணவு ஆற்றல் பயனுற்றதாக கண்டுபிடித்தார்கள்-ஆய்வகத்தில் சுண்டெலிகளில் கண்ட விளைவை மனிதர்களிடமும் காண்பதற்கான ஒரு முன்குறிப்பு இது என்று நினைக்கலாம்-.[20]

நவம்பர் 2008 இல் கார்ணெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைல் மருத்துவக் கல்லூரியைச் (Weill Medical College of Cornell University ) சேர்ந்த ஆய்வாளர்கள் உணவுடன் இரெசுவரட்ரால் சேர்ப்பதால் சில விலங்குகளின் மூளையில் கெடுதிதரும் படிவுகள் (plaque formation ) நிகழ்வதைக் குறிப்பிடும் அளவுக்குக் குறைவதாகக் கண்டுபிடித்தனர்.[21] இவ்வகைப் படிவுகள் நரம்புமண்டல இயக்கத்தில் சிதைவுதரும் அல்சீமர் நோய் முதலியவற்றை உண்டாக்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுண்டெலிகளில் வாய்வழியாக ஊட்டப்பட்ட இரெசுவரட்ராலால், மூளையில் ஏற்படும் படிவுகள் பெருமளவும் குறைவதாகக் கண்டுபிடித்தனர். ஐப்போத்தாலமசில் (hypothalamus) -90% ம், இசுட்ரையாட்டத்தில் (striatum)-89% உம், மீடியல் கார்ட்டெக்ஃசில் (medial cortex) -48% உம் குறைந்ததாகக் கண்டனர். மனிதர்களிலும் வாய்வழி இரெசுவரட்ரால் தந்தால் மூளையில் ஏற்படும் படிவுகள் குறையலாம் என்றும் அதனால் சில நோய்கள் குறையலாம் என்றும் நிறுவப்படாத கருத்துகள் உள்ளன.

செடிகொடிகளும் உணவும்

[தொகு]

இரெசுவெரட்ராலை முதன்முதலாக 1940 இல் தாக்கவோக்கா (Takaoka ) என்பவர் வெள்ளை இந்திய போக் (white hellebore) என்னும் செடியில் இருந்து பிரித்தெடுத்தார். பின்னர் 1963 இல் நிப்பானிய முடிச்சுக்களைச்செடி என்னும் பொருள் படும் சப்பானீசு நாட்வீடு (Japanese knotweed ) என்னும் செடியில் இருந்து பிரித்தெடுத்தனர். ஆனால் 1992 இல் திராட்சைக் கள்ளில் (வைனில்) இருப்பது கண்டுபிடித்தபின், அதன் இதயநோயுக்கு தடுப்பாக அமையும் பண்புகளைப் பற்றி அறிந்தபின் பரவலான ஈர்ப்பைப் பெற்றது..[10]

திராட்சைகளில் முதன்மையாக அதன் தோலில் இரெசுவெரட்ரால் இருப்பதாகக் கண்டுபிடித்தனர்,[22] மேலும் முசுக்காடைன் (muscadine ) திராட்சையில் அதன் விதையிலும் இருப்பத்காகக் கண்டுபிடித்தனர்.[23] திராட்சைத் தோலில் காணபடும் இரெசுவெரட்ராலின் அளவு திராட்சைப் கொடிவகையை பொருத்தும், வளரும் மண், இடம் பொருத்தும், பூஞ்சைக் காளானால் தாக்கப்பட்ட நிலையும், எவ்வளவு காலம் கள் நொதிப்பில் இருந்ததும், எவ்வளவு காலம் திராட்சைத் தோலுடன் சேர்ந்திருந்தது என்பதைப் பொருத்தும் இருக்கும்[22].

உணவுப்பொருளில் காணப்படும் இரெசுவெரட்ராலின் அளவு பெரிதும் மாறுபடுகின்றது. திராட்சை செங்கள்ளில் (சிவப்பு வைனில்) திராட்சைக் கொடியின் வகையைப் பொருத்து 0.2 முதல் 5.8 மில்லிகிராம்/லீட்டர் (mg/L) இருக்கும் [24], ஆனால் வெண்கள்ளில் (வெள்ளை வைனில்) மிகவும் குறைவாகவே உள்ளது. முக்கியகாரணம், செங்கள் தோலுடன் நொதிக்கப்படுகின்றது ஆனால் வெண்கள் தோலை நீக்கியபின் நொதிக்கப்படுகின்றது.[22] பல ஆய்வறிப்புகளின் படி முசுக்கடைன் வகை திராட்சையைக் கொண்டு செய்யப்படும் சிவப்பு வெள்ளை வகையான கள் இனங்களில் கூடிய அளவில் இரெசுவெரட்ரால் இருக்கலாம் எனவும், 40 மிகி/லீ அளவு வரை கூட இருக்கலாம் எனவும் தெரிவித்தன.[23][25] ஆனால் பின்னர் செய்த ஆய்வின்படி வெவ்வேறு வகையான முசுக்கடைன் திராட்சைகளில் இரெசுவெரட்ரால் இல்லை என்று கண்டுபிடித்தார்கள் [26][27]

மல்பெரிப் பழம் (குறிப்பாக அதன் தோல்) இசுவெரட்ரால் தரும் ஒரு உணவுப்பொருளாக விற்கப்படுகின்றது[28]

திராட்சைக் கள்ளிலும் திராட்சைச் சாற்றிலும் உள்ள இசுவெரட்ரால் அளவு

[தொகு]
பருகும் உணவு (நீர்மம்) மொத்த இசுவெரட்ரால்
அளவு (மிகி/லீ, mg/L)[22][23]
150 மில்லி லீட்டர் திராட்சைக்
கள்ளில் உள்ள மொத்த
இசுவெரட்ரால் அளவு
(மில்லி கிராம், mg)[22][23]
செங்கள் (சிவப்பு வைன்)(பொது) 1.98 - 7.13 0.30 - 1.07
செங்கள் (எசுப்பானியா) 1.92 - 12.59 0.29 - 1.89
சிவப்பு திராட்சைச் சாறு (எசுப்பானியா) 1.14 - 8.69 0.17 - 1.30
ரோசு நிறக் கள்(எசுப்பானியா) 0.43 - 3.52 0.06 - 0.53
பினோ நுவா (Pinot Noir) 0.40 - 2.0 0.06 - 0.30
வெண் கள் (எசுப்பானியா) 0.05 - 1.80 0.01 - 0.27

சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களில் உள்ளவை

[தொகு]
உணவு பரிமாறும் அளவு மொத்த
இரெசுவெரட்ரால்
அளவு (மில்லிகிராம், mg)[29]
வேர்க்கடலை (பச்சை) 1 கிண்ணி (146 கிராம்) 0.01 - 0.26
வேர்க்கடலை (வெந்தது) 1 கிண்ணி (180 கிராம்) 0.32 - 1.28
வேர்க்கடலை பழுநெய் 1 கிண்ணி (258 கிராம்) 0.04 - 0.13
சிவப்பு திராட்சை 1 கிண்ணி (160 கிராம்) 0.24 - 1.25

ஓர் அவுன்சுக்கு ஓர் அவுன்சு, வேர்க்கடலையில் ஏறத்தாழ திராட்சை செங்கள்ளில் பாதி அளவு இரெசுவெரட்ரால் உள்ளது. சராசரியாக சந்தையில் கிடைக்கும் ஓர் அவுன்சு வேர்க்கடலையில் (15 முழு கடலைகள்) உள்ள இரெசுவரட்ராலில் அளவு 79.4 மைக்ரோகிராம்/அவுன்சு (µg/ounce.)

ஒப்பீட்டு அளவில், செங்கள்ளில் ஏறத்தாழ 160 மைக்ரோகிராம்/அவுன்சு [30] திராட்சைகளிலும், கிரான்பெரி என்னும் குறுங்கனிக்ளிலும், திராட்சைக் கள்ளிலும் இரெசுவரட்ரால் காணப்படுகின்றது. இரெசுவரட்ராலின் அடர்த்தி கான்கார்டு திராட்சைகளில் (Concord grape) 1.56 முதல் 1042 நானோமோல்/கிராம் (nmol/g) அளவும், இத்தாலிய திராட்சைச் செங்கள்ளில் 8.63 முதல் 24.84 மைக்ரோமோல்/லீ அளவும் உள்ளது. கிரான்பெர், திராட்சைச் சாற்றில் முறையே 1.07, 1.56 நானோமோல்/கிராம் அளவுள்ளது.[31]

நீலக்குறுங்கனிகளில் (Blueberries) உள்ள இரெசுவரட்ரால் ஏறத்தாழ பில்குறுங்கனிகளில் (bilberries) இருப்பதைப் போல இருமடங்காகும். ஆனால் இடத்தைப் பொருத்து மிகுந்த வேறுபாடு உள்ளது. இக் கனிகளில் உள்ள இரெசுவரட்ரால், திராட்சையில் உள்ளதில் 10% உக்கும் குறைவானதே. சமைத்தாலோ, சூடு செய்தாலோ, இந்த குறுங்கனிகளில் உள்ள இரெசுவரட்ரால் அதிலும் பாதியாக குறைந்துவிடும்.[32]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Farina A, Ferranti C, Marra C (2006). "An improved synthesis of resveratrol". Nat. Prod. Res. 20 (3): 247–52. doi:10.1080/14786410500059532. பப்மெட்:16401555. 
  2. Elliott PJ, Jirousek, M. (2008). "Sirtuins: Novel targets for metabolic disease". Current Opinion in Investigational Drugs 9 (4): 1472–4472. பப்மெட்:18393104. 
  3. Howitz KT, Bitterman KJ, Cohen HY, Lamming DW, Lavu S, Wood JG, Zipkin RE, Chung P, Kisielewski A, Zhang LL, Scherer B, Sinclair DA (2003). "Small molecule activators of sirtuins extend Saccharomyces cerevisiae lifespan" (PDF). Nature 425 (6954): 191–196. doi:10.1038/nature01960. பப்மெட்:12939617. http://www.fiestaterrace.com/dlamming/nature2003.pdf. பார்த்த நாள்: 2009-07-03. 
  4. Wood JG, Rogina B, Lavu1 S, Howitz K, Helfand SL, Tatar M, Sinclair D (2004). "Sirtuin activators mimic caloric restriction and delay aging in metazoans" (PDF). Nature 430 (7000): 686–9. doi:10.1038/nature02789. பப்மெட்:15254550. http://sinclairfs.med.harvard.edu/pdfs/nature2004.pdf. பார்த்த நாள்: 2009-07-03. 
  5. Gruber J, Tang SY, Halliwell B (April 2007). "Evidence for a trade-off between survival and fitness caused by resveratrol treatment of Caenorhabditis elegans". Ann N Y Acad Sci. 1100: 530–42. doi:10.1196/annals.1395.059. பப்மெட்:17460219. 
  6. Bass TM, Weinkove D, Houthoofd K, Gems D, Partridge L. (2007). "Effects of resveratrol on lifespan in Drosophila melanogaster and Caenorhabditis elegans". Mechanisms of ageing and development 128 (10): 546–52. doi:10.1016/j.mad.2007.07.007. பப்மெட்:17875315. 
  7. Valenzano DR, Terzibasi E, Genade T, Cattaneo A, Domenici L, Cellerino A (2006). "Resveratrol prolongs lifespan and retards the onset of age-related markers in a short-lived vertebrate". Current Biology 16 (3): 296–300. doi:10.1016/j.cub.2005.12.038. பப்மெட்:16461283. 
  8. Baur JA, Pearson KJ, Price NL, Jamieson HA, Lerin C, Kalra A, Prabhu VV, Allard JS, Lopez-Lluch G, Lewis K, Pistell PJ, Poosala S, Becker KG, Boss O, Gwinn D, Wang M, Ramaswamy S, Fishbein KW, Spencer RG, Lakatta EG, Le Couteur D, Shaw RJ, Navas P, Puigserver P, Ingram DK, de Cabo R, Sinclair DA (2006). "Resveratrol improves health and survival of mice on a high-calorie diet". Nature 444 (7117): 337–42. doi:10.1038/nature05354. பப்மெட்:17086191. 
  9. Jang M, Cai L, Udeani GO, Slowing KV, Thomas CF, Beecher CW, Fong HH, Farnsworth NR, Kinghorn AD, Mehta RG, Moon RC, Pezzuto JM (1997). "Cancer chemopreventive activity of resveratrol, a natural product derived from grapes". Science 275 (5297): 218–20. doi:10.1126/science.275.5297.218. பப்மெட்:8985016. 
  10. 10.0 10.1 10.2 See review:Baur JA, Sinclair DA (2006). "Therapeutic potential of resveratrol: the in vivo evidence". Nat Rev Drug Discov 5 (6): 493–506. doi:10.1038/nrd2060. பப்மெட்:16732220. 
  11. 11.0 11.1 11.2 See review:Athar M, Back JH, Tang X, et al. (November 2007). "Resveratrol: a review of preclinical studies for human cancer prevention". Toxicol. Appl. Pharmacol. 224 (3): 274–83. doi:10.1016/j.taap.2006.12.025. பப்மெட்:17306316. 
  12. Resveratrol. From Clinicaltrials.gov. Retrieved August 15, 2008..
  13. Boocock DJ, Faust GE, Patel KR, et al. (June 2007). "Phase I dose escalation pharmacokinetic study in healthy volunteers of resveratrol, a potential cancer chemopreventive agent". Cancer Epidemiol. Biomarkers Prev. 16 (6): 1246–52. doi:10.1158/1055-9965.EPI-07-0022. பப்மெட்:17548692. 
  14. Niles RM, Cook CP, Meadows GG, Fu YM, McLaughlin JL, Rankin GO (October 2006). "Resveratrol is rapidly metabolized in athymic (nu/nu) mice and does not inhibit human melanoma xenograft tumor growth". J. Nutr. 136 (10): 2542–6. பப்மெட்:16988123. பப்மெட் சென்ட்ரல்:1612582. http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=16988123. 
  15. Wenzel E, Soldo T, Erbersdobler H, Somoza V (May 2005). "Bioactivity and metabolism of trans-resveratrol orally administered to Wistar rats". Mol Nutr Food Res 49 (5): 482–94. doi:10.1002/mnfr.200500003. பப்மெட்:15779067. 
  16. Gao X, Xu YX, Divine G, Janakiraman N, Chapman RA, Gautam SC (July 2002). "Disparate in vitro and in vivo antileukemic effects of resveratrol, a natural polyphenolic compound found in grapes". J. Nutr. 132 (7): 2076–81. பப்மெட்:12097696. http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=12097696. 
  17. Palsamy P, Subramanian S (2008). "Resveratrol, a natural phytoalexin, normalizes hyperglycemia in streptozotocin-nicotinamide induced experimental diabetic rats". Biomed Pharmacother 62 (9): 598-605. doi:10.1016/j.biopha.2008.06.037. பப்மெட்:18675532. 
  18. Palsamy P, Subramanian S (2009). "Modulatory effects of resveratrol on attenuating the key enzymes activities of carbohydrate metabolism in streptozotocin-nicotinamide-induced diabetic rats". Chem Biol Interact 179 (2-3): 356-62. doi:10.1016/j.cbi.2008.11.008. பப்மெட்:19059388. 
  19. Wade, Nicholas (November 16 2006). "Red Wine Ingredient Increases Endurance, Study Shows". New York Times. 
  20. Lagouge M, Argmann C, Gerhart-Hines Z, et al. (2006). "Resveratrol improves mitochondrial function and protects against metabolic disease by activating SIRT1 and PGC-1alpha". Cell 127 (6): 1109–22. doi:10.1016/j.cell.2006.11.013. பப்மெட்:17112576. 
  21. Karuppagounder SS, Pinto JT, Xu H, Chen HL, Beal MF, Gibson GE (November 2008). "Dietary supplementation with resveratrol reduces plaque pathology in a transgenic model of Alzheimer's disease". Neurochem Int. 54: 111. doi:10.1016/j.neuint.2008.10.008. பப்மெட்:19041676. 
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 Roy, H., Lundy, S., Resveratrol பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம், Pennington Nutrition Series, 2005 No. 7
  23. 23.0 23.1 23.2 23.3 LeBlanc, Mark Rene (2005-12-13). "Cultivar, Juice Extraction, Ultra Violet Irradiation and Storage Influence the Stilbene Content of Muscadine Grapes (Vitis Rotundifolia Michx.)". Archived from the original on 2007-10-12. பார்க்கப்பட்ட நாள் 2007-08-15.
  24. Gu X, Creasy L, Kester A, Zeece M (August 1999). "Capillary electrophoretic determination of resveratrol in wines". J Agric Food Chem. 47 (8): 3223–7. doi:10.1021/jf981211e. பப்மெட்:10552635. 
  25. Ector BJ, Magee JB, Hegwood CP, Coign MJ., Resveratrol Concentration in Muscadine Berries, Juice, Pomace, Purees, Seeds, and Wines.
  26. Pastrana-Bonilla E, Akoh CC, Sellappan S, Krewer G (August 2003). "Phenolic content and antioxidant capacity of muscadine grapes". J. Agric. Food Chem. 51 (18): 5497–503. doi:10.1021/jf030113c. பப்மெட்:12926904. "Contrary to previous results, ellagic acid and not resveratrol was the major phenolic in muscadine grapes. The HPLC solvent system used coupled with fluorescence detection allowed separation of ellagic acid from resveratrol and detection of resveratrol." "trans-resveratrol had the lowest concentrations of the detected phenolics, ranging from not detected in two varieties to 0.2 mg/ 100 g of FW (Tables 1 and 2). Our result for resveratrol differed from previous results [Ector et al., 1996] indicating high concentrations. These researchers apparently were not able to separate ellagic acid from resveratrol with UV detection alone.". 
  27. Hudson TS, Hartle DK, Hursting SD, et al. (September 2007). "Inhibition of prostate cancer growth by muscadine grape skin extract and resveratrol through distinct mechanisms". Cancer Res. 67 (17): 8396–405. doi:10.1158/0008-5472.CAN-06-4069. பப்மெட்:17804756. "MSKE [muscadine grape skin extract] does not contain significant quantities of resveratrol and differs from MSEE. To determine whether MSKE contains significant levels of resveratrol and to compare the chemical content of MSKE (skin) with MSEE (seed), HPLC analyses were done. As depicted in Supplementary Fig. S1A and B, MSKE does not contain significant amounts of resveratrol (<1 ?g/g by limit of detection).". 
  28. Stewart JR, Artime MC, O'Brian CA (01 July 2003). "Resveratrol: a candidate nutritional substance for prostate cancer prevention". J Nutr. 133 (7 Suppl): 2440S–2443S. பப்மெட்:12840221. http://jn.nutrition.org/cgi/content/full/133/7/2440S. 
  29. Higdon, Jane (2005). "Resveratrol". Oregon State University. The Linus Pauling Institute Micronutrient Information Center. பார்க்கப்பட்ட நாள் 2007-06-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  30. "Resveratrol". The Peanut Institute. 1999. பார்க்கப்பட்ட நாள் 2008-01-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  31. Wang Y, Catana F, Yang Y, Roderick R, van Breemen RB (2002). "An LC-MS method for analyzing total resveratrol in grape juice, cranberry juice, and in wine". J. Agric. Food Chem. 50 (3): 431–5. doi:10.1021/jf010812u. பப்மெட்:11804508. 
  32. Lyons MM, Yu C, Toma RB, et al. (2003). "Resveratrol in raw and baked blueberries and bilberries". J. Agric. Food Chem. 51 (20): 5867–70. doi:10.1021/jf034150f. பப்மெட்:13129286. 

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெசுவரட்ரால்&oldid=3544345" இலிருந்து மீள்விக்கப்பட்டது