இயக்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயக்கம்
இயக்கம்சஞ்சய் ராம்
தயாரிப்புசஞ்சை ராம்
கதைசஞ்சை ராம்
இசைபிரவீண் மணி
நடிப்பு
ஒளிப்பதிவுடி. லியோ
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்லிங்கம் தியேட்டர்ஸ்
வெளியீடுஏப்ரல் 25, 2008 (2008-04-25)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இயக்கம் (Iyakkam) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சஞ்சய் ராம் தயாரித்து இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ரிஷி குமார், ஸ்ருதி ராஜ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, சுஜிபாலா, சஞ்சய் ராம், சுதாகர் வசந்த், ஆர். சுந்தர்ராஜன், சிட்டி பாபு, எம். எசு. பாசுகர், பூவிலங்கு மோகன் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு பிரவீண் மணி இசை அமைத்தார். படமானது 25 ஏப்ரல் 2008 அன்று வெளியானது.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

தூத்துக்குடி (2006), ஆடு புலி ஆட்டம் (2006), வீரமும் ஈரமும் (2007) போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அடுத்து இயக்கம் என்ற படத்தை தனது புதிய சொந்த பதாகையான லிங்கம் தியேட்டர்சின் கீழ் தயாரித்து, இயக்கினார். முன்னாள் தமிழ்நாடு துடுப்பாட்ட வீரரான ரிஷி குமார் ஒரு குடிசைவாசியாகவும், மாவட்ட ஆட்சியராகவும் நடிக்க ஒப்பந்தமானார். கூத்துப்பட்டறையில் அவர் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் ஒரு காலத்தில் இணை இயக்குநராக இருந்த சஞ்சய் ராம், “நான் பாலிவுட் திரைப்பட படைப்பாளியான ராம் கோபால் வர்மாவின் தீவிர ரசிகன். அவரது திரைப்படப் படைப்பில் நான் ஈர்க்கப்பட்டேன். நான் அவரை பின்பற்ற விரும்புகிறேன் " என்றும், “தரமே எனது குறிக்கோள். தமிழ் திரைப்படத் துறையில் தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க விரும்புகிறேன் " என்றும் கூறியுள்ளார்.[4][5]

இசை[தொகு]

திரப்பட பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றுக்கு இசையமைப்பாளர் பிரவீண் மணி இசையமைத்தார். இந்த இசைப்பதிவில் இளைய கம்பன் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன. இந்த படத்தின் இசை வெளியீடானது30 மார்ச் 2008 அன்று நடிகர்கள் ஷாம், சூரியா ஆகியோரால் சென்னையில் வெளியிடப்பட்டது.[6][7][8]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "எந்தன் உயிர்" பிரதீப், சுவேதா மோகன் 4:37
2 "ஆலமரத்து" ஷியாம் 4:02
3 "ஒலயக்கா" மாணிக்க விநாயகம் 4:46
4 "உதட்டோரம்" ரஞ்சித், மாலதி லட்சுமணன், சுவர்ணலதா 4:27
5 "சிங்கண்டா" தீபன் சக்ரவர்த்தி, ஸ்ரீராம் பார்த்தசாரதி 3:39
6 "வீச்சருவா கோட்டையிலே" சுஜாதா மோகன், ஸ்வர்ணலதா 4:25

வரவேற்பு[தொகு]

தி இந்து பத்திரிகையின் எஸ். ஆர். அசோக் குமார் படத்தின் நகைச்சுவைப் பகுதியை விமர்சித்தார், ஆனால் கலைஞர்களின் நடிப்பையும், ஒளிப்பதிவையும் பாராட்டினார். மேலும் "பலவீனமான திரைக்கதை படத்தின் கருத்தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது" என்றும் கூறினார்.[9] மற்றொரு விமர்சகர் இந்த படத்துக்கு 5 க்கு 2 என மதிப்பீடு அளித்து, "இயக்குனர் சஞ்சய் ராம் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டார், மேலும் படம் கூட்டம் சேர்க்கும்" என்று எழுதினார்.[10]

குறிப்புகள்[தொகு]

  1. "Iyakkam (2008)". gomolo.com. Archived from the original on 15 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Iyakkam (2008) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  3. "Jointscene : Tamil Movie Iyakkam". jointscene.com. Archived from the original on 13 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
  4. "Director Sanjay Ram on Iyakkam". indiaglitz.com. 6 December 2006. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  5. "Cricketer becomes an Actor". kollywoodtoday.net. 24 March 2008. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Surya releases and Shaam receives". behindwoods.com. 31 March 2008. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  7. "Iyakkam Audio released yesterday". kollywoodtoday.net. 31 March 2008. Archived from the original on 15 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Iyakkam (2008) - Pravin Mani". mio.to. Archived from the original on 29 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. S. R. Ashok Kumar (2 May 2008). "Game called murder -- Iyakkam". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  10. "Iyakkam Review". nowrunning.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கம்_(திரைப்படம்)&oldid=3705626" இலிருந்து மீள்விக்கப்பட்டது