முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது
Appearance
முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | இந்தி மொழி ஊக்குவிப்பு (1-2 நபர்கள்) | |
நிறுவியது | 1989 | |
முதலில் வழங்கப்பட்டது | 1994 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2007 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 15 | |
வழங்கப்பட்டது | கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு | |
விவரம் | இலக்கிய விருது | |
முதல் வெற்றியாளர்(கள்) | முனைவர். லோதர் லுட்சு | |
கடைசி வெற்றியாளர்(கள்) | பேரா. தனுதா இசுடாசிக் |
முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது (Dr. George Grierson Award, தேவநாகரி: डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार) இந்தியாவின் நடுவண் அரசின் மனிதவளத் துறையின் கீழுள்ள கேந்திரிய இந்தி சன்சுதான் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் மிக உயரிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் ஓர் விருதாகும். இது முகனையாக வெளிநாடுகளில் இந்திமொழி ஆக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]1989ஆம் ஆண்டு மொழியியலாளர் முனைவர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரீர்சன் நினைவாக இது நிறுவப்பட்டது. முதல் விருது 1994ஆம் ஆண்டு முனைவர் லோதர் லுட்சுவிற்கு வழங்கப்பட்டது.
விருதுகள்
[தொகு]முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வெளிநாட்டில் இந்தியை வளர்த்தமைக்காகவும் இந்தியில் ஆய்வுக்கட்டுரைகள் வடித்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]- डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार பரணிடப்பட்டது 2011-06-12 at the வந்தவழி இயந்திரம் (இந்தி மொழியில்)