உள்ளடக்கத்துக்குச் செல்

பூலோங் தாவ் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 3°35′35″N 115°19′48″E / 3.593°N 115.33°E / 3.593; 115.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூலோங் தாவ் தேசியப் பூங்கா
Pulong Tau National Park
Taman Negara Pulong Tau
மூரூட் மலை (1998)
Map showing the location of பூலோங் தாவ் தேசியப் பூங்கா Pulong Tau National Park Taman Negara Pulong Tau
Map showing the location of பூலோங் தாவ் தேசியப் பூங்கா Pulong Tau National Park Taman Negara Pulong Tau
அமைவிடம்லிம்பாங் பிரிவு
மிரி பிரிவு
 சரவாக்
 மலேசியா
அருகாமை நகரம்கெலாபிட் மலைப்பகுதி
ஆள்கூறுகள்3°35′35″N 115°19′48″E / 3.593°N 115.33°E / 3.593; 115.33[1]
பரப்பளவு665 km2 (257 sq mi)
நிறுவப்பட்டது1998
நிருவாக அமைப்புசரவாக் வனவியல் கழகம்
Sarawak Forestry Corporation (SFC)

பூலோங் தாவ் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Pulong Tau; ஆங்கிலம்: Pulong Tau National Park) என்பது மலேசியா, சரவாக், லிம்பாங் பிரிவு, மிரி பிரிவு ஆகிய பிரிவுகளில் உள்ள தேசியப் பூங்கா ஆகும். இது கெலாபிட் மலைப்பகுதியை மையமாகக் கொண்டுள்ளது.[2][3]

லுன் பாவாங் மற்றும் கெலாபிட் பேச்சுவழக்கில், பூலோங் தாவ் என்றால் "எங்கள் காடுகள்" என்று பொருள். இது சரவாக் மாநிலத்தின் பழங்குடியின மக்கள் தங்கள் காடுகளின் மீதான பாரம்பரியப் பெருமையைக் குறிக்கிறது. 1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பூலோங் தாவ் தேசியப் பூங்கா, 2005-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது.[4]

வரலாறு

[தொகு]

கெலாபிட் மலைப்பகுதியில் (Kelabit Highlands) ஒரு தேசியப் பூங்காவை உருவாக்கலாம் என்ற கருத்து 1970-களில் ஒரு சமூக முயற்சியாகத் தொடங்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டில், சரவாக்கின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு அலுவலகம், உள்ளூர் சமூகத்தின் மனுக் கடிதத்தை சரவாக் மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.

சரவாக்கின் மிக உயரமான மலையான மூருட்டு மலை, புக்கிட் பத்து லாவி மலை, தாமா அபு மலைத்தொடர், வடக்கு சரவாக்கின் நீர் பிடிப்புப் பகுதி; ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 164,500 எக்டேர் வனப்பகுதிகளில் பூலோங் தாவ் தேசியப் பூங்காவை உருவாக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.

சுமாத்திரா காண்டாமிருகம்

[தொகு]

1984 மற்றும் 1987-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சரவாக் அமைச்சரவை அந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் நில மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளுடன் மோதல்களைத் தவிர்க்க எல்லைகள் மீண்டும் வரையப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

1986-ஆம் ஆண்டில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுமாத்திரா காண்டாமிருகங்கள் (Bornean rhinoceros), அந்த வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற காண்டாமிருகங்கள் சரவாக்கில் அழிந்துவிட்டன என்று முன்பு கருதப்பட்டது. இது தொடர்பாக வன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ராப்லேசியா மலர்கள்

[தொகு]

ஆய்வுகளின் போது போர்னியோ தாடிப் பன்றிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மூருட்டு மலையின் அடிவாரத்தில் ராபிலேசியா மலர்களும் காணப்பட்டன. எனவே, 1987-இல் இரண்டாவது முன்மொழிவின் போது அந்த பகுதிகளும் பூங்காவின் எல்லைக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

1998 வாக்கில், பூங்காவை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டபோது, ​​முன்மொழியப்பட்ட பரப்பளவு 63,700 எக்டேராகக் குறைக்கப்பட்டது. அதில் காண்டாமிருகம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி உள்ளடக்கப்படவில்லை. 2005-இல் பூலோங் தாவ் தேசியப் பூங்கா அரசிதழில் வெளியிடப்பட்டபோது, ​​மொத்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள் 59,917 எக்டேராக குறைக்கப்பட்டது.[5][6]

பல்லுயிர்கள்

[தொகு]

இந்தப் பூங்காவில் பல வகையான ஆர்க்கிட்கள் மற்றும் குடுவையுருத்தாவரம் தாவரங்கள் உள்ளன. 1998-இல் ஓர் ஆய்வின் போது, ​​29 குடும்பங்களைச் சேர்ந்த 67 வகையான பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 13 இனப் பறவைகள் (19.4%) போர்னியோவைச் சேர்ந்த பூர்வீகப் பறவைகள் ஆகும். எடுத்துக்காட்டுகள்: மலைப் புறாக்கள்; யுகினாக்கள்; உழவாரன் குருவிகள்

மூருட்டு மலையில் காணப்படும் பறவை இனங்கள்: கொண்டைக்குருவி; கறுப்புக் குருவிகள்.

தவிர, 28 வகையான பாலூட்டிகள்; அவற்றில் 12 போர்னியோ பூர்வீகப் பாலூட்டிகள். எடுத்துக்காட்டு: மலை இராட்சத எலிகள், மலை எலிகள், புனுகுப்பூனைகள். மேலும், 18 வகையான தவளைகளும், நான்கு வகையான பாம்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pulong Tau National Park". protectedplanet.net. Archived from the original on 2013-02-24. பார்க்கப்பட்ட நாள் 2024-09-02.
  2. "Pulong Tau National Park - DOPA Explorer". dopa-explorer.jrc.ec.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2 September 2024.
  3. "XTVT - Place". www.xtvt.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 September 2024.
  4. "Pulong Tau National Park -Sarawak, Malaysia - Attractions". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 2 September 2024.
  5. Hitchner, Sarah (2013). "Doing High-tech Collaborative Research in the Middle of Borneo: A Case Study of e-Bario as a Base for the Transfer of GIS Technology in the Kelabit Highlands of Sarawak, Malaysia". The Journal of Community Informatics 9 (1). http://ci-journal.net/index.php/ciej/article/view/475/976. பார்த்த நாள்: 14 December 2017. "Two subsequent boundary revisions reduced PTNP to 59,917 hectares by the time it was officially gazetted in 2005.". 
  6. "Pulong Tau National Park, in the Kelabit Highlands of Sarawak, was initially proposed in 1984 by the National Parks & Wildlife Office" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]