குபா தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 1°35′51″N 110°11′39″E / 1.59750°N 110.19417°E / 1.59750; 110.19417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குபா தேசிய பூங்கா
Kubah National Park
குபா அருவி
அமைவிடம்சரவாக், மலேசியா
ஆள்கூறுகள்1°35′51″N 110°11′39″E / 1.59750°N 110.19417°E / 1.59750; 110.19417
பரப்பளவு22.3 km2 (8.6 sq mi)
நிறுவப்பட்டது1989

குபா தேசியப் பூங்கா (Kubah National Park) மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள கூச்சிங் நிர்வாகப் பிரிவில் கூச்சிங் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2230 எக்டேர் பரப்பளவில் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1995 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.[1]

செராபி மலைத்தொடரின் அதிக காடுகள் நிறைந்த சரிவுகள் மற்றும் முகடுகள் பூங்காவில் உள்ளடங்கியுள்ளன. காட்டு விலங்குகள் பூங்காவிலுள்ள மழைக்காடுகளின் உட்புறங்களில் மறைந்து வாழ்கின்றன. தாடி பன்றிகள், சருகுமான்கள், கருப்பு இருவாய்ச்சி மற்றும் பல வகையான ஊர்வன மற்றும் நில-நீர் வாழ்விகள் பூங்காவில் வாழ்கின்றன. 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வளர்ந்துள்ள 93 வகையான பனை மரங்களால் இந்த பூங்கா சிறப்பிக்கப்படுகிறது.[2]

கடல் மட்டத்திலிருந்து 911 மீட்டர் உயரத்தில் உள்ள மெராபி மலைச்சிகரம் பூங்காவில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kubah National Park". Sarawak Forestry Corporation. Archived from the original on December 2, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.
  2. "Kubah National Park - Jungle Trails, Bird Watching and Waterfall". Visit Sarawak (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  3. "Kubah National Park - Discover palms, pitcher plants, ferns & frogs". Borneo Adventure (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபா_தேசியப்_பூங்கா&oldid=3433722" இலிருந்து மீள்விக்கப்பட்டது