உள்ளடக்கத்துக்குச் செல்

மூருட்டு மலை

ஆள்கூறுகள்: 3°55′N 115°20′E / 3.917°N 115.333°E / 3.917; 115.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூருட்டு மலை
Mount Murud
Gunung Murud
மூருட்டு மலைச்சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்2,424 m (7,953 அடி)[1]
ஆள்கூறு3°55′N 115°20′E / 3.917°N 115.333°E / 3.917; 115.333
புவியியல்
மூருட்டு மலை Mount Murud Gunung Murud is located in மலேசியா
மூருட்டு மலை Mount Murud Gunung Murud
மூருட்டு மலையின் அமைவிடம்
அமைவிடம்லிம்பாங் பிரிவு, சரவாக், மலேசியா
மூலத் தொடர்கெலாபிட்டு மலைத்தொடர்
(Kelabit Highlands)

மூருட்டு மலை அல்லது மூருட் மலை (மலாய் மொழி: Gunung Murud; ஆங்கிலம்: Mount Murud) என்பது மலேசியாவில் ஐந்தாவது உயர்ந்த மலையாகும். அதே வேளையில் சரவாக் மாநிலத்தில் மிகவும் உயர்ந்த மலை என்று தடம் பதிக்கிறது. இந்த மலையின் உயரம் 2,424 மீட்டர், (7,946 அடி). சரவாக் லிம்பாங் பிரிவு மாவட்டத்தில் அமைந்து உள்ளது.[1]

மூருட்டு மலையை ஏறுவதற்கான முதல் முயற்சி 1914-ஆம் ஆண்டில் சரவாக் மாநில அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த ஜான் கோனி மோல்டன் (John Coney Moulton) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

வரலாறு

[தொகு]

ஆனால் உணவுப் பற்றாக்குறை காரணமாக அவருடைய முதல் முயற்சி தோல்வி கண்டது. இருப்பினும் அவரின் வழிகாட்டிகளை, லுன் பாவாங் (Lun Bawang) எனும் ஒரு டயாக் இனத்தவர் கொலை செய்து விட்டதாகவும், அதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் சொல்லப் படுகிறது.

1920-இல் ஜான் கோனி மௌல்டனின் இரண்டாவது முயற்சி மேற்கொண்டார். மீண்டும் தோல்வி அடைந்தார்.

விலங்கியல் நிபுணர் எரிக் ஜோபெர்க்

[தொகு]

மூருட்டு மலையில் முதல் வெற்றிகரமான மலையேற்றம் 1922-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர் எரிக் ஜோபெர்க் (Eric Mjöberg) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

அவர் அப்போது சரவாக் மாநில அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்தார்.[2] மலையின் உச்சியில் ஆறு நாட்கள் தங்கினார். பல்வேறு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் விவரங்களைச் சேகரித்தார். 1928-இல் சரவாக் அருங்காட்சியகத்தின் பதிவுகளில் அவரின் சேகரிப்புகள் ஆவணப் படுத்தப் பட்டன.

காட்சியகம்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Beaman, JH; Anderson, C (1997). The Summit Flora of Mount Murud, Sarawak, Malaysia. Contributions from the University of Michigan Herbarium. pp. 85–141. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
  2. Mjöberg, Eric (1925). "An Expedition to the Kalabit Country and Mt. Murud, Sarawak". Geographical Review 15 (3): 411–427. doi:10.2307/208563. https://archive.org/details/sim_geographical-review_1925-07_15_3/page/411. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூருட்டு_மலை&oldid=4083765" இலிருந்து மீள்விக்கப்பட்டது