லோகான் பூனுட் தேசியப் பூங்கா
லோகான் பூனுட் தேசியப் பூங்கா Loagan Bunut National Park Taman Negara Loagan Bunut | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மிரி பிரிவு சரவாக் மலேசியா |
அருகாமை நகரம் | மிரி |
ஆள்கூறுகள் | 3°46′N 114°13′E / 3.767°N 114.217°E[1] |
பரப்பளவு | 100 km2 (39 sq mi) |
நிறுவப்பட்டது | 1990 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் Sarawak Forestry Corporation (SFC) |
வலைத்தளம் | http://www.sarawakforestry.com/htm/snp-np-loagan.html |
லோகான் பூனுட் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Loagan Bunut; ஆங்கிலம்: Loagan Bunut National Park) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா ஆகும்.[2]
லோகான் பூனுட் என்பது சரவாக் மாநிலத்தின் மிகப்பெரிய இயற்கை ஏரி ஆகும். அந்தப் பெயர் உள்ளூர் பெரவான் மொழி பேசும் பெரவான் சமூகத்தால் வழங்கப்பட்ட பெயர் என அறியப்படுகிறது.
பொது
[தொகு]லோகான் பூனுட் தேசியப் பூங்கா பெரும்பாலும் கரி சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது. ஆனால், லோகான் பூனுட் தேசியப் பூங்கா இருக்கும் லோகான் பூனுட் ஏரி, வறட்சி காலத்தில் மறைந்து போகும் தன்மையே அதன் தனித்துவமான தன்மை. அதற்குப் பதிலாக ஒரு பரந்த வறண்ட சேற்று சமதளமான நிலமாக அந்த ஏரி மாறும். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஏற்படும்.[3]
லோகான் பூனுட் தேசியப் பூங்கா 100 கிமீ2 (39 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. அதன் பல்லுயிர்களுக்கும்; தனித்துவமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் நன்கு அறியப்பட்டதாகும். இந்தத் தேசிய பூங்கா சனவரி 1, 1990 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது; மற்றும் ஆகஸ்டு 29, 1991 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[2]
உயிரினங்கள்
[தொகு]லோகான் பூனுட் தேசியப் பூங்கா பலவகையான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில முக்கியமான உயிரினங்கள்:
- குரைக்கும் மான் - (Barking Deer)
- போர்னியோ தாடிப் பன்றிகள் - (Bornean Bearded Pig)
- சருகுமான் - (Mouse Deer)
- லங்கூர் குரங்கு - (Langur Monkey)
- நீண்ட வால் மக்கா குரங்கு - (Long-tailed Macaque)
- பழ வௌவால் - (Flying Fox)
காட்சியகம்
[தொகு]-
போர்னியோ தாடிப் பன்றிகள்
-
லங்கூர் குரங்கு
-
மக்கா குரங்கு
மேலும் காண்க
[தொகு]- ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா
- புக்கிட் தீபான் தேசியப் பூங்கா
- மாலுடாம் தேசியப் பூங்கா
- மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா
- மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Loagan Bunut National Park". protectedplanet.net.
- ↑ "Sarawak National Park - National Parks and Reserves - Loagan Bunut National Park". Sarawak Forestry. 8 July 2009. Archived from the original on 14 March 2014. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
- ↑ "Loagan Bunut National Park - Sarawak Forestry Corporation". sarawakforestry.com. 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.