உள்ளடக்கத்துக்குச் செல்

சுமாத்திரா காண்டாமிருகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமாத்திரா காண்டாமிருகம்
இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தில் உள்ள காண்டாமிருக சரணாலயத்தில் இருக்கும் ஒரு சுமத்திரா காண்டாமிருகம்
CITES Appendix I (CITES)[2]
Sumatran rhino rangeதாமான் நெகாராTabin Wildlife ReserveGunung Leuser National ParkKerinci Seblat National ParkBukit Barisan Selatan National ParkWay Kambas National Park
Sumatran rhino range
சுமாத்திரா காண்டாமிருகம் இருந்த இடங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் இடங்களைப் பார்க்கக் கடும் சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டிருக்கும் பகுதியை அழுத்துங்கள்.[3]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Dicerorhinus

Gloger, 1841
இருசொற் பெயரீடு
Dicerorhinus sumatrensis
மாதிரி இனம்
sumatrensis
Fischer, 1814)[4]
துணையினம்
  • D. s. harrissoni Groves, 1965
  • D. s. sumatrensis Fischer, 1814
  • D. s. lasiotis Buckland, 1872

சுமாத்திரா காண்டாமிருகம் (Sumatran rhinoceros) ஆசிய இரண்டு கொம்பு காண்டாமிருகம் மற்றும் மயிரடர்ந்த காண்டாமிருகம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. ரெய்னோசெரடியி குடும்பத்திலேய மிகவும் அரிதான உறுப்பினர் எனலாம்(தற்போது கடுமையான ஆபத்தான அழியும் நிலையில் உள்ள விலங்கு). தற்போது நடைமுறையில் டைசோரனஸ் பேரினத்தில் உள்ள ஒரே உயிரினம் இவ்விலங்கே ஆகும்.[5][6]

தோற்றம் மற்றும் சிறப்பு

[தொகு]

சுமாத்திரா காண்டாமிருகமே இவ்வுலகில் மிகச்சிறிய காண்டாமிருகம் ஆகும். இதன் பாதம் முதல் தோள் வரையிலுள்ள உயரம் மட்டுமே 112செ.மீ முதல் 145செ.மீ ஆகும். இவ்விலங்கின் தலை மற்றும் உடம்பின் நீளம் 2.36மீ-3.18மீ மற்றும் வாலின் நீளம் 35-70செ.மீ ஆகும். சுமாத்திராகாண்டாமிருகத்தின் இதுவரை கணக்கெடுக்கப்பட்ட அதிக எடை 500கிலோ முதல் 1000கிலோ வரை. இவ்விலங்கின் மேற்மயிர் படலமானது சிவப்பு மற்றும் பழுப்பு நிறக்கலவையில் இருக்கும். இதன் கொம்புகள் சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் காண்டாமிருகங்களுக்கு பெண் காண்டாமிருங்களை விட நீண்ட கொம்புகள் இருக்கும். சுமாத்திரா காண்டாமிருகங்கள் அடர்ந்த இரண்டு தோல் மடிப்புகளைக் கொண்டுள்ளது. இம்மிருகங்களின் கழுத்துப் பகுதியில் மட்டும் சிறிய மற்றும் அடர்த்திக் குறைவான தோல் மடிப்பைக் கொண்டுள்ளது. இதன் தோல் மட்டும் 10மி.மீ -16மி.மீ அடர்த்தியானது. காடுகளில் வாழும் விலங்குகளுக்கு மட்டும் தோலிலடியிலான கொழுப்பு இருக்காது. இவற்றின் முடி மிருகத்திற்கு மிருகம் வேறுபடும். மற்றும் ஒரு துண்டு போன்ற நீளமான முடி அமைப்பு இதன் காதுகளின் மேல் உள்ளது. அனைத்து காண்டாமிருகங்களைப் போலவே இவற்றிற்கும் கண்பார்வை மிகவும் குறைவு. இவற்றால் சரிவாக உள்ள பகுதிகளில் சுலபமாக நடக்க முடியும்.

வாழ்வியல் மற்றும் வரலாறு

[தொகு]

சுமாத்திரா காண்டாமிருகங்களின் முன்னோர்கள் மழைக்காடுகளிலும் சதுப்புநிலங்களிலும் பனி மூட்டமாய் காணப்படும் காடுகளிலும் வாழ்ந்தன. இவை இந்தியா, பூட்டான், பங்களாதேஸ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்விலங்குகள் பொதுவாக தனிமையிலேயே வாழும். இனப்பெருக்கத்துக்காகவும் குட்டிகளை வளர்பதற்காகவும் மட்டும் ஒன்றாக வாழும். பழங்களும் சிறுக்கிளைகளுமே இதன் உணவு. இவை இதன் குரலுக்காகவும் பிரபலமாய் பார்க்கப்படுகிறது. புலிகளும் காட்டுநாய்கள்தான் இவற்றின் வேட்டையாடிகள் ஆகும். ஆண் மிருகங்களின் சராகசரி எல்லைப்பரப்பு 500கி.மீ ஆகும்.இவைகள் தினமும் 50கிலோ எடையுள்ள உணவை உட்கொள்ளும். இவை சுமார் 30 வகையான செடிகளை உண்ணுகிறது. இவற்றின் உடலுறவு முறை கறுப்பு காண்டாமிருகத்தின் உடலுறவு முறையை ஒத்ததாக இருக்கும். இவ்விலங்கின் அழிவிற்கு காரணமே "எண்ணெய்த் தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயிகள், மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகள், நோய்கள் மற்றும் சட்டவிரோதமாக விலங்குகளைக் கடத்துதல்" போன்றன ஆகும். தற்போது இவை மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆசிய கண்டத்தில் இருக்கும் வேறு சில நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dicerorhinus sumatrensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பன்னாட்டுத் தர தொடர் எண் 2307-8235 ISSN 2307-8235. Archived from the original on 2020-02-05. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2019. {{cite web}}: Check |issn= value (help); Check date values in: |accessdate= (help)
  2. Dicerorhinus sumatrensis பரணிடப்பட்டது 2019-06-08 at the வந்தவழி இயந்திரம் Convention on International Trade in Endangered Species
  3. Derived from range maps in:
  4. Rookmaaker, L. C. (1984). "The taxonomic history of the recent forms of Sumatran Rhinoceros (Dicerorhinus sumatrensis)". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 57 (1): 12–25. http://www.rhinoresourcecenter.com/index.php?s=1&act=refs&CODE=ref_detail&id=1165238637. 
  5. "https://www.world wildlife.org/species/sumatran-rhino". Archived from the original on 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16. {{cite web}}: External link in |title= (help)
  6. https://relay.nationalgeographic.com/proxy/distribution/public/amp/animals/mammals/s/sumatran-rhinoceros
  7. [1]